கையேடு:PPC/நிறுவல்/வட்டுக்கள்
தொகுதி சாதனங்களுக்கான முன்னுரை
தொகுதி சாதனங்கள்
தொகுதி சாதனங்கள், பகிர்வு மற்றும் லினக்சு கோப்பு முறைமை போன்ற சென்டூ லினக்சிற்கும், பொதுவாக லினக்சிற்கும் ஆன வட்டுக்கள் சார்ந்த இயல்புகளை இப்போது காணலாம். வட்டை பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்ட பின், பகிர்வு மற்றும் கோப்பு முறைமைகள் நிறுவலுக்காக நிலைநாட்டலாம்.
முதலில் தொகுதி சாதனங்களைப் பார்க்கலாம். SCSI மற்றும் தொடர் ATA இயக்கிகள் /dev/sda, /dev/sdb, /dev/sdc போன்ற சாதன கையாளுதல்களின் கீழ் குறிக்கப்பட்டுள்ளது. பல நவீன இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் PCI Express அடிப்படையிலான NVMe திடநிலையகங்கள் /dev/nvme0n1, /dev/nvme0n2 போன்ற சாதன கையாளுதல்களைப் பயன்படுத்துகிறது.
பின்வரும் அட்டவணை முறைமையில் குறிப்பிட்ட ஒரு வகையான தொகுதி சாதனத்தை எங்கு காணலாம் என்பதை படிப்பவர்கள் அறிந்துகொள்ள உதவும்:
சாதனத்தின் வகை | முன்னிருப்பு சாதன கையாளுதல் | ஆசிரியர் குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் |
---|---|---|
SATA, SAS, SCSI அல்லது USB flash | /dev/sda | தோராயமாக 2007 முதல் இன்று வரையுள்ள வன்பொருட்களில் காணப்படும் இது ஒருவேளை லினக்ஸில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சாதன கையாளுதலாகக் கூட இருக்கலாம். இவ்வகையான சாதனங்கள் SATA பாட்டை, SCSI, USB பாட்டை கொண்டு தொகுதி சாதனங்களாக இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, முதல் SATA சாதனத்தில் உள்ள முதல் பகிர்வு /dev/sda1 என அழைக்கப்படும். |
NVM Express (NVMe) | /dev/nvme0n1 | திடநிலை தொழில்நுட்பத்தில் புதியதான NVMe இயக்கிகள் PCI விரைவு பாட்டையோடு இணைக்கப்பட்டுள்ளது. இது சந்தையிலேயே மிகவும் வேகமான தொகுதி பரிமாற்ற வேகத்தைக் கொண்டுள்ளது. 2014 அல்லது அதற்கு பிந்திய காலங்களில் வெளிவந்த முறைமைகளில் இதற்கான ஆதரவு அளிக்கப்பட்டிருக்கும். முதல் NVMe சாதனத்தின் முதல் பகிர்வு /dev/nvme0n1p1 என அழைக்கப்படும். |
MMC, eMMC மற்றும் SD | /dev/mmcblk0 | உட்பொதித்த MMC சாதனங்கள், SD அட்டைகள் மற்றும் பல வகையான நினைவு அட்டைகள் தரவு சேமிப்பிற்குப் பயன்படுகின்றன. இருந்தாலும் பல முறைமைகள் இந்த சாதனங்கள் மூலம் துவக்குவதை அனுமதிப்பதில்லை. இவ்வகை சாதனங்களை செயல்நிலை லினக்ஸ் நிறுவலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதைத் தவிரக் கோப்புகளை பரிமாறவோ, குறுகிய கால காப்புநகல்களை என்பதற்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். |
மேலுள்ள தொகுதி சாதனங்கள் வட்டிற்கான செயலாக்கமில்லாத இடைமுகத்தைக் குறித்துக்காட்டுகிறது. இதன்மூலம் பயனர் நிரல்களானது இயக்ககங்கள் SATA, SCSI அல்லது வேறு எதாவது வகையா என்பதைப் பற்றி கவலைப் படாமல் இந்த தொகுதி சாதனங்கள் வட்டோடு உரையாட முடியும். நிரல் வட்டில் உள்ள சேமிப்பகத்தை வெறும் ஒரு தொடர்ச்சியான, நேரடியாக-அணுகக்கூடிய 4096 எண்ணுன்மிகளின் (4K) தொகுதிகளின் திரளாக அணுகுகிறது.
கோப்பு முறைமைகளை உருவாக்குதல்
முன்னுரை
இப்போது தேவையான பகிர்வுகள் உருவாக்கப்பட்டு விட்டதால், இதில் நாம் ஒரு கோப்பு முறைமையைப் பொருத்தலாம். அடுத்த பக்கத்தில் லினக்ஸ் ஆதரிக்கும் பல்வேறு கோப்பு முறைமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எந்த கோப்பு முறைமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்கனவே அறிந்துள்ள படிப்பவர்கள் ஒரு கோப்பு முறைமையைப் பகிர்வில் பொருத்துதல் இல் தொடரலாம். மற்றவர்கள், கிடைக்கக்கூடிய கோப்பு முறைமைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும்.
கோப்பு முறைமைகள்
லினக்ஸ் பன்னிரண்டிற்கும் அதிகமான கோப்பு முறைமைகளை ஆதரிக்கிறது. ஆயினும் அதில் பலவற்றைக் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது சிறந்ததாகும். சில குறிப்பிட்ட கோப்பு முறைமைகள் மட்டுமே ppc கட்டமைப்பில் நிலையாக உள்ளன. முக்கியமான பகிர்வுகளுக்கு சோதனை வழியில் உள்ள கோப்பு முறைமையைத் தேர்வு செய்வதற்கு முன் அதனைப் பற்றி முழுமையாகப் படித்து பின் அதற்கான ஆதரவு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. ext4 எல்லா-நோக்கத்திற்கும், எல்லா-தளங்களிலும் பயன்படுத்தக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட கோப்பு முறைமையாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு முழுமையற்ற பட்டியலாகும்.
- btrfs
- நிழற்பட நொடியெடுத்தல்,சரிகாண்தொகை மூலம் தானாக சரிசெய்துகொள்ளுதல், வெளிப்படையான இறுக்கல், துணையகங்கள் மற்றும் உட்பொதித்த RAID போன்ற மேம்பட்ட தனிச்சிறப்புகளை அளிக்கக்கூடிய அடுத்த தலைமுறை கோப்பு முறைமையாகும். btrfs ஓடு 5.4.y க்கு முந்திய கருநிரல்களை உபயோகிப்பது பாதுகாப்பற்றது. ஏனெனில் மிக தீவிரமான சிக்கல்களுக்கான தீர்வுகள் LTS கர்னல் கிளையின் அண்மை வெளியீடுகளில் மட்டுமே காணப்படுகிறது. கோப்பு முறைமை பழுதாகல் பழைய கருநிரல் கிளைகளில் குறிப்பாக 4.4.y விட பழைமையானதில் காணப்படும் இது பாதுகாப்பற்ற மற்றும் எளிதில் பழுதாகக்கூடிய பொதுவான சிக்கலாகும். இறுக்கம் செயல்படுத்தப்பட்ட மற்ற பழைய கருநிரல்களில் (5.4.y தவிர்த்து) பழுதாவதற்கான சாத்திய கூறுகள் மிக குறைவு. btrfs இன் எல்லா வகைகளிலும் RAID 5/6 மற்றும் quota குழுக்கள் பாதுகாப்பற்றதாகும். மேலும், உள் துண்டாக்குதல் மூலம் கிடைக்கப்பட்ட காலியிடத்தை df தெரிவிக்கும்போது, ENOSPC யோடு கூடிய கோப்பு முறைமை செயல்பாடுகளை எதிர்மறையாக btrfs தோல்வியடைய செய்ய வாய்ப்புள்ளது (DATA + SYSTEM பெருந்துண்டுகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள, METADATA பெருந்துண்டுகளுக்கு தேவைப்படும் காலியிடம்). கூடுதலாக, btrfs இனுள் உள்ள 128M பரப்பிற்கான ஒற்றை 4K குறிப்பால் காலியிடம் இருந்து பங்கீடிற்கு கிடைக்காமல் செய்யலாம். மேலும் இது btrfs ஐ காலியிடத்தை df தெரிவித்த பின்னர் ENOSPC ஐ திரும்ப செய்கிறது. sys-fs/btrfsmaintenance ஐ நிறுவி அவ்வப்போது இயங்கும் வகையில் உள்ளமைப்பதன் மூலம் ENOSPC சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம். ஆனால் காலியிடம் காணப்பட்டால் இந்த ENOSPC சிக்கலை முழுமையாக தவிர்க்க முடியாது. சில பணிச்சுமைகள் ஒருபோதும் ENOSPC ஐ தாக்காது. இந்த ENOSPC சிக்கல் உங்கள் உற்பத்தியில் ஏற்றுகொள்ள முடியாத அளவில் இருந்தால், நீங்கள் வேறு எதையாவது பயன்படுத்துவது நல்லது. btrfs ஐ பயன்படுத்தினால், தெரிந்த சிக்கல்கள் உள்ள உள்ளமைவுகளை தவிர்க்கவும். ENOSPC சிக்கலை தவிர்த்து, அண்மை கருநிரல் கிளைகளில் btrfs இல் உள்ள மற்ற சிக்கல்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள btrfs விக்கி நிலைப்பக்கத்தை பார்க்கவும்.
- ext2
- இது முயற்சி செய்யப்பட்ட, உண்மையான லினக்சு கோப்பு முறைமையாகும். இதில் மீ-தரவு பதிவிடுதல் செயல்முறை இல்லாததால், துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் வழக்கமான ext2 கோப்புமுறைமை சரிபார்த்தல் செயல்களுக்கு சற்று நேரம் செலவாகும். இப்போது மிக விரைவாக நிலைத்தன்மையை சரிபார்க்கவல்ல பதிவிடப்பட்ட புதிய தலைமுறை கோப்புமுறைமைகள் வந்துவிட்டால் இதன் எதிரிணையான பதிவிடப்படாதவற்றை காட்டிலும் இதையே பெரும்பாலானோர் விரும்புகின்றன. பதிவிடப்பட்ட கோப்புமுறைமை முறைமை துவங்கும்போது ஏற்படும் நீண்ட காலதாமதங்களை தவிர்ப்பதோடு கோப்பு முறைமையை நிலையில்லாத தன்மையில் வைத்திருக்கிறது.
- ext3
- ext2 கோப்புமுறைமையின் பதிவிடப்பட்ட பதிப்பு. இது வேகமான மீட்டெடுப்பிற்கான மீ-தரவு பதிவிடுதல் செயல்முறையோடு பல மேம்படுத்தப்பட்ட பதிவிடுதல் பயன்முறைகளான முழு தரவு மற்றும் வரிசையாக்கப்பட்ட தரவு பதிவிடுதல் போன்றவற்றோடு வருகிறது. இது எல்லா சூழல்களிலும் உயர் செயல்திறனை அளிக்கவல்ல HTree உள்ளடக்கத்தை பயன்படுத்துகிறது. சுருக்கமாக, ext3 ஒரு நல்ல, நமபகதன்மை வாய்ந்த கோப்புமுறைமை.
- ext4
- தொடக்கத்தில் ext3 இன் பிளவாக உருவாக்கப்பட்ட ext4 பல புதிய தனிச்சிறப்புகளையும், செயல்திறன் மேம்படுத்தல்களையும் அளிப்பதோடு வட்டின் வடிவமைப்பில் சிறு மாற்றங்கள் செய்து அளவு வரம்பையும் நீக்கியுள்ளது. இது அதிகபட்சமாக 1EB வரையிலான சாதனங்களையும், 16TB வரையிலான ஒரு கோப்பை கையாளும் திறன் கொண்டது. ext4 பண்டைய ext2/3 இணுப்பட தொகுதி ஒதுக்கீட்டிற்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட பெரிய கோப்பு செயல்திறன் மற்றும் குறைந்த துண்டாக்கலை அளிக்கும் பரப்புகளை பயன்படுத்துகிறது. மேலும் ext4 பல அதிக நுட்பமான தொகுப்பு ஒதுக்கீடு வழிமுறைகளை (தாமதமான ஒதுக்கீடு மற்றும் பல்தொகுதி ஒதுக்கீடு) பயன்படுத்துவதால் கோப்பு இயக்கியிற்கு வட்டில் உள்ள தரவு தளவமைப்பை உகந்ததாக்கவல்ல வழிகளை அளிக்கிறது. ext4 எல்லா-நோக்கத்திற்கும் எல்லா-தளங்களிலும் பயன்படுத்தக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட கோப்பு முறைமையாகும்.
- f2fs
- இவ்வகை Flash-Friendly கோப்பு முறைமை சாம்சங் நிறுவனத்தால் NAND மினுக்க நினைவகத்திற்காக உருவாக்கப்பட்டது. Q2 2016 இன்படி இந்த கோப்புமுறைமை குழந்தைதனமானதாக கருதப்பட்டது. ஆயினும் சென்டூவை microSD அட்டைகள், USB இயக்ககங்கள் அல்லது இதர மினுக்கம்-சார்ந்த சேமிப்பகங்களில் நிறுவுவதற்கு இது உகந்ததாகும்.
- JFS
- இது IBM இன் உயர்-செயல்திறன் கொண்ட பதிவிடல் கோப்புமுறைமையாகும். எடைக்குறைந்த, விரைவான மற்றும் நம்பிக்கைக்குறிய B+tree சார்ந்த கோப்புமுறைமையான இது பல்வேறு சூழ்நிலைகளிலும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
- ReiserFS
- B+tree ஐ அடிப்படையாகக் கொண்ட பதிவிடப்பட்ட கோப்பு முறைமையான ReiserFS ஒட்டுமொத்தமாக நல்ல செயல்திறனை அளிக்கிறது, குறிப்பாக நிறைய CPU கணிச்சுழல்களின் செலவில் மிகச்சிறிய கோப்புகளைக் கையாளும்போது. பதிப்பு 3 ReiserFS முதன்மை இணைப்பு லினக்சு கருநிரலில் உள்ள போதிலும், முதன்முறையாக சென்டூ முறைமையை நிறுவும்போது பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுவதில்லை. இதன் புதிய பதிப்புகள் இருந்தாலும், இதற்கு முதன்மை இணைப்பு கருநிரலில் கூடுதலாக ஒட்டுப்போட வேண்டி வரும்.
- XFS
- மீ-தரவு பதிவிடலைக் கொண்ட கோப்பு முறைமையான இது திடமான தனிச்சிறப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விரிவாக்கத்தக்கமைகளோடு வருகிறது. பல வன்பொருள் சிக்கல்களை XFS தீர்க்கவில்லை என்றாலும் தொடர் புதுப்பித்தல்கள் மூலம் புதுமையான தனிச்சிறப்புகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
- VFAT
- FAT32 எனவும் அழைக்கப்படும் இது லினக்சால் ஆதரிக்கப்பட்டாலும் UNIX அனுமதி அமைப்புகளை ஆதரிப்பதில்லை. இது பெரும்பாலும் மற்ற இயங்குதளங்களான மைக்கிரோசாஃப்ட் WINDOWS மற்றும் ஆப்பிளின் macOS போன்றவற்றோடு ஒத்துச் செயல்படுவதற்குப் பயன்படுத்தப்பட்டாலும் UEFI போன்ற சில முறைமை துவக்க ஏற்றி திடப்பொருளுக்கு முக்கியமான தேவையாகும். UEFI முறைமையைப் பயன்படுத்தும் பயனர்கள் முறைமையைத் துவக்குவதற்கு VFAT ஐ கொண்டு வடிவமைக்கப்பட்ட EFI முறைமை பகிர்வு தேவைப்படும்.
- NTFS
- இந்த "புதிய தொழில்நுட்ப" கோப்பு முறைமை WINDOWS NT 3.1 இல் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் மைக்கிரோசாஃப்ட் WINDOWS இன் மீச்சிறப்பு கோப்பு முறைமையாகும். vfat ஐ போல இதுவும் UNIX அனுமதி அமைப்புகளையும், BSD அல்லது லினக்சு முறையாக வேளை செய்யத் தேவையான விரிவாக்கப்பட்ட பண்புகளையும் சேமிப்பதில்லை. அதனால் இதை பெரும்பாலான வழக்குகளில் பகிர்வாகப் பயன்படுத்தக் கூடாது. இதை மைக்கிரோசாஃப்ட் WINDOWS முறைமையோடு சேர்த்துப் பயன்படுத்தும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும் (இதில் மட்டும் என்பதைக் கவனிக்கவும்).
ஒரு கோப்பு முறைமையைப் பகிர்வில் பொருத்துதல்
பகிர்வு அல்லது கனவளவில் ஒரு கோப்பு முறைமையை உருவாக்க வேண்டும் என்றால், வாய்ப்புள்ள ஒவ்வொரு கோப்பு முறைமைகளுக்கும் தேவையான பயனர்வெளி பயன்கூறு நிரல்கள் உள்ளன. ஒவ்வொரு கோப்பு முறைமையைப் பற்றிய மேலும் விவரங்களுக்குக் கீழுள்ள அட்டவணையில் உள்ள கோப்பு முறைமைகளின் பெயர்களைத் தட்டவும்:
கோப்பு முறைமை | உருவாக்கல் கட்டளை | சிறும குறுந்தகட்டில் உள்ளதா? | தொகுப்பு |
---|---|---|---|
btrfs | mkfs.btrfs | ஆம் | sys-fs/btrfs-progs |
ext2 | mkfs.ext2 | ஆம் | sys-fs/e2fsprogs |
ext3 | mkfs.ext3 | ஆம் | sys-fs/e2fsprogs |
ext4 | mkfs.ext4 | ஆம் | sys-fs/e2fsprogs |
f2fs | mkfs.f2fs | ஆம் | sys-fs/f2fs-tools |
jfs | mkfs.jfs | ஆம் | sys-fs/jfsutils |
reiserfs (deprecated) | mkfs.reiserfs | ஆம் | sys-fs/reiserfsprogs |
xfs | mkfs.xfs | ஆம் | sys-fs/xfsprogs |
vfat | mkfs.vfat | ஆம் | sys-fs/dosfstools |
NTFS | mkfs.ntfs | ஆம் | sys-fs/ntfs3g |
ஒருவேளை, EFI முறைமை பகிர்வு (/dev/sda1) FAT32 ஆக இருந்து வேர் பகிர்வு (/dev/sda3) எடுத்துக்காட்டு பகிர்வு வடிவத்தில் உள்ளது போல ext4 ஆக இருந்தால், பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தவும்:
root #
mkfs.vfat -F 32 /dev/sda1
root #
mkfs.ext4 /dev/sda3
ext4 ஐ சிறிய பகிர்வில் (8 GiB க்கும் குறைவான) பயன்படுத்தும் போது, கோப்பு முறைமை தேவையான inodes களுக்கு இடமளிக்கும் வகையில் முறையான விருப்பத்தேர்வுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்ய முறையே பின்வரும் கட்டளைகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்:
root #
mkfs.ext4 -T small /dev/<device>
பொதுவாக இது கொடுக்கப்பட்ட ஒரு கோப்பு முறைமைக்கான inodes எண்ணிக்கைகளின் நாலன்றொகுதியாகும். ஏனென்றால், "inode-ற்கு-தலா-எண்ணுன்மிகள்" என்பது 16kB ற்கு ஒன்று என்பதிலிருந்து 4kB ற்கு ஒன்றாகக் குறைகிறது.
இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பகிர்வில் (அல்லது ஏரண சாதனங்களில்) கோப்பு முறைமையை உருவாக்கவும்.
இடமாற்று பகிர்வை செயல்படுத்துதல்
இடமாற்று பகிர்வுகளைத் துவக்க mkswap கட்டளைப் பயன்படுத்தப்படுகிறது:
root #
mkswap /dev/sda2
இடமாற்று பகிர்வைச் செயல்படுத்த, swapon ஐ பயன்படுத்தவும்:
root #
swapon /dev/sda2
மேலுள்ள கட்டளைகள் மூலம் இடமாற்று பகிர்வை உருவாக்கிச் செயல்படுத்தவும்.
வேர் பகிர்வை ஏற்றுதல்
ஜென்டூ அல்லாத நிறுவல் ஊடகத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் கீழுள்ள கட்டளையை இயக்கி ஏற்ற புள்ளியை உருவாக்க வேண்டும்:
root #
mkdir --parents /mnt/gentoo
இப்போது பகிர்வுகள் துவக்கப்பட்டுக் கோப்பு முறைமை பொருத்தப்பட்டுவிட்டது. ஆகையால் பகிர்வுகளை ஏற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இதற்கு mount கட்டளையைப் பயன்படுத்தவும். முக்கியமாக, உருவாக்கிய ஒவ்வொரு பகிர்விற்கும் தேவையான ஏற்ற அடைவுகளை உருவாக்க மறந்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டாக வேர் பகிர்வை இவ்வாறு நாம் ஏற்றலாம்:
root #
mount /dev/sda3 /mnt/gentoo
/tmp/ தனி பகிர்வில் இருக்க வேண்டும் என்றால், ஏற்றியபின் மறவாமல் அதன் அனுமதிகளை மாற்றவும்:
root #
chmod 1777 /mnt/gentoo/tmp
பின்வரும் வழிகாட்டுதல்களில் proc கோப்பு முறைமை (கருநிரலுடன் கூடிய மெய்நிகர் இடைமுகம்) அத்துடன் மற்ற கருநிரல் போலி-கோப்பு முறைமைகளும் ஏற்றப்படும். அதற்கு முன் ஜென்டூ நிறுவல் கோப்புகளை நிறுவ வேண்டும்.