கையேடு:PPC/வலையமைத்தல்/இயக்கம்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:PPC/Networking/Dynamic and the translation is 100% complete.
PPC கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை


வலையமைப்பு மேலாண்மை

மடிகணினி வந்த பின் முறைமைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவது அதிகரித்துள்ளது. இதன் விளைவாக முறைமை எல்லா நேரங்களிலும் ஈத்தர்வலை கம்பியோடு இணைக்கப்பட்டோ அணுகல் புள்ளி கிடைக்கப்பெற்றோ இருப்பத்தில்லை. மேலும் பயனர்கள் ஈத்தர்வலை கம்பியை இணைத்தவுடன் அல்லது அணுகல் புள்ளி கண்டறிந்தவுடன் வலையமைப்பு தானியக்கமாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவர்.

இந்த பகுதியில் இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விரிவாக காண்போம்.

குறிப்பு
இந்த ஆவணம் ifplugd ஐ பற்றி மட்டுமே விவரிக்கிறது ஆனால் இதற்கு மாற்றாக netplug போன்ற மாற்றுகளும் உள்ளன. netplug என்பது ifplugd இன் மெல்சுமை மாற்று எனினும் இதன் செயல்பாடானது கருநிரல் வலையமைப்பு இயக்கிகள் சரியாக வேலை செய்வதை பெருமளவு சார்ந்துள்ளது. போகூழ் வயமாக அவற்றுள் பல சரியாக வேலை செய்வதில்லை.

ifplugd

ifplugd என்பது ஒவ்வொரு முறை ஈத்தர்வலை கம்பி இணைக்கப்படும்போது துண்டிக்கப்படும்போதும் இடைமுகத்தை தொடங்கி நிறுத்தும் ஒரு மறைநிரலாகும். மேலும் இது அணுகல் புள்ளிகளுக்கான தொடர்பை கண்டறியப்படுவதை கவனித்து கொள்கிறது.

root #emerge --ask sys-apps/ifplugd

ifplugd ஐ உள்ளமைவு செய்வதும் மிக எளிமையானதே. இதன் உள்ளமைவு /etc/conf.d/net என்னும் இடத்தில் உள்ளது. கிடைக்கும் மாறிகளை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள man ifplugd ஐ இயக்கவும். கூடுதல் எடுத்துக்காட்டுகளுக்கு /usr/share/doc/netifrc-*/net.example.bz2 ஐ பார்க்கவும்.

கோப்பு /etc/conf.d/netஎடுத்துக்காட்டு ifplug உள்ளமைவு
# eth0 க்கு பதிலாக கண்காணிக்கப்பட வேண்டிய இடைமுகத்தை மாற்றியமைக்கவும்
ifplugd_eth0="..."
  
# கம்பியில்லா இடைமுகத்தை கண்காணிக்க
ifplugd_eth0="--api-mode=wlan"

பல வலையமைப்பு இணைப்புகளை மேலாண்மை செய்வதற்கு கூடுதலாக, பயனர்கள் பல DNS சேவையகங்கள் மற்றும் உள்ளமைவுகளுடன் வேலை செய்வதை எளிதாக்கும் ஒரு கருவியைச் சேர்க்க விரும்பலாம். முறைமை அதன் IP முகவரியை DHCP வழியாகப் பெறும்போது இது மிகவும் எளியதாகிறது.

root #emerge --ask net-dns/openresolv

இதன் தனிச்சிறப்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு man resolvconf ஐ காணவும்.