eselect/repository/ta
eselect-கருவூலம் என்பது மூன்றாம் தரப்பு கருவூலங்களுக்காக (இதை மேல்தளமிடுதல்கள் எனவும் அழைப்பர்) /etc/portage/repos.conf பதிவுகளை கையூடாளுவதற்கான ஒரு கூறாகும்.
தொகுப்பு மேலாளர் சொந்தமாக ஒத்திசைக்காத காரணத்தினால் பதிப்பு கட்டுப்பாடு முறைமைகளை (எ.கா. Portage இல் உள்ள mercurial, bazaar மற்றும் g-sorcery) தவிர மாற்றுக் கருவூலங்களின் பட்டியலிடல், உள்ளமைத்தல் மற்றும் ஒத்திசைவுகளை கையாளுதல் ஆகியவற்றிற்கான app-portage/layman தொகுப்பை இந்த பயன்கூறு நிரலானது அகற்றி மேவல் செய்கிறது.
நிறுவல்
இ-ஒன்றாக்குதல் (Emerge)
root #
emerge --ask app-eselect/eselect-repository
உள்ளமைவு
தொடக்க அமைப்பு
கீழுள்ள கோப்புகளில் உள்ளமைக்கப்பட்டுள்ளது போல் REPOS_CONF
அடைவானது கூறுகள் முறையாக வேலை செய்வதற்கு முன் இருக்க வேண்டும்.
இது இருப்பதை உறுதி செய்ய, பின்வருவதை இயக்கவும் (எடுத்துக்காட்டாக முன்னிருப்புகளைப் பயன்படுத்தி):
root #
mkdir -p /etc/portage/repos.conf
கோப்புகள்
/etc/eselect/repository.conf
# eselect-repo விற்கான உள்ளமைவு # (பாஷ் ஆல் மூலமிடப்பட்டுள்ளது, ஆகையால் பாஷிற்கு ஒத்துப்போகக்கூடிய மதிப்புகளை வைத்திருக்கவும்) # பின்வரும் மாறிகளைக் கட்டுதல் நேரத்தில் உள்ளமைக்கப்படும் குறிப்பு # பாதைகளாகக் கீழே பயன்படுத்தலாம்: # CACHEDIR -- முறைமை பதுக்கக அடைவு (எ.கா. /var/cache) # SYSCONFDIR -- முறைமை உள்ளமைவு அடைவு (எ.கா. /etc) # SHAREDSTATEDIR -- முறைமை பகிரப்பட்ட நிலை அடைவு (எ.கா. /var) # கருவூல உள்ளமைவு கோப்பு அல்லது அடைவின் இருப்பிடம். # இது ஒரு அடைவாக இருந்தால், துணை கோப்புகளுக்கான Portage # விதிமுறைகள் பயன்படுத்தப்படும். REPOS_CONF=${SYSCONFDIR}/portage/repos.conf # REPOS_CONF ஒரு அடைவாக இருக்கும்போது, புதிதாகச் சேர்க்கப்பட்ட # கருவூலங்களுக்குப் பயன்படுத்துவதற்கான கோப்பு. REPOS_CONF_SUBFILE=${REPOS_CONF}/eselect-repo.conf # புதிதாகச் சேர்க்கப்பட்ட கருவூலங்களை வைத்திருப்பதற்கான மேல் அடைவு. # புதிய கருவூலங்களானது கருவூல பெயர்களுக்குப் பின்வரும் துணை # அடைவுகளோடு சேர்க்கப்படும். REPOS_BASE=${SHAREDSTATEDIR}/db/repos # தொலைநிலை கருவூல பட்டியலின் இருப்பிடம். முன்பு உற்பத்தி # செய்யப்பட்ட மீ-தரவு பதுக்கத்தை உள்ளடக்கிய ஜென்டூ-கண்ணாடிதள # பட்டியலைப் பயன்படுத்துதல் முன்னிருப்பாகும். REMOTE_LIST_URI=https://qa-reports.gentoo.org/output/repos/repositories.xml # இதற்கு மாற்றாக: மூல ஜென்டூ பட்டியல். #REMOTE_LIST_URI=https://api.gentoo.org/overlays/repositories.xml # repositories.xml பதுக்கத்தைச் சேமித்து வைப்பதற்கான அடைவாகும். # wget இன் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த கோப்பு # எப்போது "repositories.xml" என அழைக்கப்படும். REMOTE_LIST_CACHEDIR=~/.cache/eselect-repo # மாற்றங்களுக்காகத் தொலைநிலை கருவூல பட்டியலைச் சரிபார்ப்பதற்கான # இடைவேளை (வினாடிகளில்). முன்னிருப்பு 2 ஓரைகள் REMOTE_LIST_REFRESH=$(( 2 * 3600 ))
பயன்பாடு
பயனர்கள் மற்றும் உருவாக்குநர்கள் தங்கள் கருவூலங்களை பொது நுகர்விற்காகப் பதிவு செய்வதை ஜென்டூ அனுமதிக்கிறது. eselect repository ஆனது அறிந்த பட்டியலை எடுத்துக் கொண்டு வந்து படிக்கும்.
பதிவு செய்யப்பட்ட கருவூலங்களைப் பட்டியலிடல்
root #
eselect repository list
Available repositories: [1] foo [2] bar [3] baz [4] cross # [5] good * [6] my_overlay @
- Installed, enabled repositories are suffixed with a * character.
- Repositories suffixed with #, need their sync information updated (via disable/enable) or were customized by the user.
- Repositories suffixed with @ are not listed by name in the official, published list.
- Adding the
-i
optional parameter will only list installed repositories
பதிவு செய்யப்பட்ட கருவூலங்களைச் சேர்த்தல்
தொடரியல்: enable (<பெயர்>|<குறியீட்டெண்>)
root #
eselect repository enable foo bar baz
பதிவு செய்யப்படாத கருவூலங்களைச் சேர்த்தல்
தொடரியல்: add <பெயர்> <ஒத்திசைவு-வகை> <ஒத்திசைவு-url>
root #
eselect repository add test git https://github.com/test/test.git
உள்ளடக்கங்களை நீக்காமல் கருவூலங்களை முடக்குதல்
தொடரியல்: disable [-f] (<பெயர்>|<குறியீட்டெண்>)...
root #
eselect repository disable foo bar
பதிவு செய்யப்படாத கருவூலங்கள் மற்றும் ஒத்திசைவு பண்புக்கூறுகள் எதுவும் இல்லாதவற்றுக்கு -f
விருப்பத்தேர்வு தேவைப்படும்
உள்ளடக்கங்களை நீக்கி கருவூலங்களை முடக்குதல்
தொடரியல்: remove [-f] (<பெயர்>|<குறியீட்டெண்>)...
root #
eselect repository remove bar baz
பதிவு செய்யப்படாத கருவூலங்கள் மற்றும் ஒத்திசைவு பண்புக்கூறுகள் எதுவும் இல்லாதவற்றுக்கு -f
விருப்பத்தேர்வு தேவைப்படும்
இதையும் காண்க
- Eselect — a tool for administration and configuration on Gentoo systems.