OpenRC இல் இருந்த systemd க்கான ஏமாற்றுத்தாள்
From Gentoo Wiki
இந்த கட்டுரை OpenRC இல் இருந்து systemd க்கு சமீபத்தில் மாறிய பயனர்களுக்கானதாகும். இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் OpenRC கட்டளைகள் மற்றும் அதற்கு நிகரான systemd கட்டளைகளின் பட்டியலைக் கொண்டுள்ளது.
குறிப்பு
பின்வரும் அட்டவணையானது ஒரு முழுமையான பட்டியல் கிடையாது. மேலும் இது கைமுறை பக்கத்தைப் படிப்பதற்கு மாற்றாக எழுதப்படவில்லை.
பின்வரும் அட்டவணையானது ஒரு முழுமையான பட்டியல் கிடையாது. மேலும் இது கைமுறை பக்கத்தைப் படிப்பதற்கு மாற்றாக எழுதப்படவில்லை.
கட்டளை | OpenRC | systemd | கருத்துக்கள் |
---|---|---|---|
ஒரு சேவையைத் துவக்க | /etc/init.d/<service> start rc-service <service> start |
systemctl start <service> | |
ஒரு சேவையை நிறுத்த | /etc/init.d/<service> stop rc-service <service> stop |
systemctl stop <service> | |
ஒரு சேவையை மீள்துவக்க | /etc/init.d/<service> restart rc-service <service> restart |
systemctl restart <service> | |
சேவையின் நிலையை அறிந்து கொள்ள | /etc/init.d/<service> status rc-service <service> status |
systemctl status <service> | |
தெரிந்த தொடங்கல் குறுநிரல்களை காண்பிக்க | rc-status rc-update show |
systemctl list-units | ஓடுநிலைகளில் இருக்கும் குறுநிரல்களை காட்டும் |
எல்லா தொடங்கல் குறுநிரல்களையும் காண்பிக்க | ls /etc/init.d/ rc-update -v show |
systemctl list-unit-files --type=service | எல்லா நிறுவப்பட்ட குறுநிரல்களையும் காட்டும் |
தொடங்கலில் சேவையைச் செயல்படுத்த | rc-update add <service> <runlevel> | systemctl enable <service> | |
தொடங்கலில் சேவையை முடக்க | rc-update del <service> <runlevel> | systemctl disable <service> |
பின்வரும் அட்டவணையானது நிகரான OpenRC கட்டளைகள் எதுவும் இல்லாத சில பயனுள்ள systemd கட்டளைகளின் பட்டியலைக் கொண்டுள்ளது.
கட்டளை | தொடரியல் | கருத்துக்கள் |
---|---|---|
தானியக்கமாக உருவான சேவையை முடக்க | systemctl mask <service> | தேவைக்கேற்ப அலகு கோப்புகளை உருவாக்கும், systemd இல் இருக்கும் தானியக்கமாக உருவாக்கப்படும் சேவைகள் (பொதுவாகச் சேமிப்பகத்தால் தூண்டப்பட்ட சேவைகள்) ஐ முடக்குகிறது. |
சேவைக்குத் தொடர்புள்ள எல்லா செயல்முறைகளையும் நிறுத்த | systemctl kill <service> | |
இன்று நடந்த நிகழ்வு குறிப்புப்பதிவுகளை, சமீபத்திய நிகழ்வுகள் முதலாவதாகக் காட்ட | journalctl -r --since=today | |
ஒரு குறிப்பிட்ட சேவையின் நிகழ்வு குறிப்புப்பதிவுகளை காட்ட | journalctl _SYSTEMD_UNIT=<service>.service |