கையேடு:MIPS/நிறுவல்/வலையமைத்தல்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:MIPS/Installation/Networking and the translation is 100% complete.
MIPS கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை


தானியக்க வலையமைப்பு கண்டறிதல்

ஒருவேளை ஏற்கனவே வேளை செய்து கொண்டிருக்கலாம்?

முறைமை DHCP சேவையகத்தைக் கொண்ட ஈத்தர்வலை வலையமைப்போடு இணைக்கப்பட்டிருந்தால், பெரும்பாலான நேரங்களில் வலையமைப்பு உள்ளமைவுகள் தானாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். அப்படியென்றால் நிறுவல் குறுந்தகட்டில் உள்ள வலையமைப்பை-சோதிக்கும் கட்டளைகளான ssh, scp, ping, irssi, wget மற்றும் links உடனடியாக வேளை செய்யும்.

இடைமுக பெயர்களை அறிந்துகொள்ளுதல்

ifconfig கட்டளை

வலையமைப்பு உள்ளமைக்கப்பட்டிருந்தால், ifconfig கட்டளையை அளித்தவுடன் ஒன்று அல்லது பல வலையமைப்பு இடைமுகங்கள் (lo விற்கு அடுத்து) பட்டியலிடப்பட்டிருக்கும். கீழுள்ள எடுத்துக்காட்டில் eth0 ஐ காணலாம்:

root #ifconfig
eth0      Link encap:Ethernet  HWaddr 00:50:BA:8F:61:7A
          inet addr:192.168.0.2  Bcast:192.168.0.255  Mask:255.255.255.0
          inet6 addr: fe80::50:ba8f:617a/10 Scope:Link
          UP BROADCAST RUNNING MULTICAST  MTU:1500  Metric:1
          RX packets:1498792 errors:0 dropped:0 overruns:0 frame:0
          TX packets:1284980 errors:0 dropped:0 overruns:0 carrier:0
          collisions:1984 txqueuelen:100
          RX bytes:485691215 (463.1 Mb)  TX bytes:123951388 (118.2 Mb)
          Interrupt:11 Base address:0xe800 

முன்னறிந்து கொள்ளக் கூடிய வலையமைப்பு இடைமுக பெயர்களில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக, முறைமையில் உள்ள இடைமுக பெயர் பழைய eth0 பெயரிடல் வழக்கத்தை விடச் சற்று மாறுபட்டிருக்கும். அண்மை நிறுவல் ஊடகம் eno0, ens1 அல்லது enp5s0 போன்ற வழக்கமான வலையமைப்பு இடைமுக பெயர்களைக் காண்பிக்கலாம். உள்ளூர் வலையமைப்பிற்கு தொடர்புள்ள IP முகவரியைக் கொண்ட ifconfig கட்டளை அளிக்கும் வெளியீட்டில் இடைமுகத்தைத் தேடவும்.

துணுக்கு
வழக்கமான ifconfig கட்டளையை இட்ட பிறகும் இடைமுக பெயர்கள் எதுவும் தோன்றவில்லையென்றால், அதே கட்டளையை -a என்னும் விருப்பத்தேர்வோடு சேர்த்து முயற்சி செய்து பார்க்கவும். இந்த விருப்பத்தேர்வு பயன்கூறு நிரலை முறைமையில் உள்ள இயங்கு நிலையிலுள்ள அல்லது இயங்கு நிலையில் இல்லாத எல்லா வலையமைப்பு இடைமுகங்களையும் காண்பிக்கக் கட்டாயப்படுத்துகிறது. ifconfig -a கட்டளையும் எந்தவொரு விளைவையும் தரவில்லை என்றால் வன்பொருள் பழுதாகியிருக்கலாம் அல்லது இடைமுகத்திற்கான இயக்கி கர்னலில் ஏற்றப்படாமல் இருக்கலாம். இவ்விரு சூழலும் இந்த கையேட்டிற்கு அப்பாற்பட்டவை. உதவிக்கு #gentoo (webchat) ஐ தொடர்புகொள்ளவும்.

ip கட்டளை

ifconfig கட்டளைக்கு மாற்றாக இடைமுக பெயர்களை அறிந்துகொள்ள ip கட்டளையையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ip addr என்னும் கட்டளையின் வெளியீட்டைப் பின்வருமாறு காணலாம் (இது மற்றொரு முறைமையிலிருந்து எடுக்கப்பட்ட வெளியீடு என்பதால் மேலுள்ள எடுத்துக்காட்டை விட மாறுபட்டதாக இருக்கலாம்):

root #ip addr
2: eno1: <BROADCAST,MULTICAST,UP,LOWER_UP> mtu 1500 qdisc pfifo_fast state UP group default qlen 1000
    link/ether e8:40:f2:ac:25:7a brd ff:ff:ff:ff:ff:ff
    inet 10.0.20.77/22 brd 10.0.23.255 scope global eno1
       valid_lft forever preferred_lft forever
    inet6 fe80::ea40:f2ff:feac:257a/64 scope link 
       valid_lft forever preferred_lft forever

இந்த எடுத்துக்காட்டில் இடைமுகத்தின் பெயரான eno1 தெளிவாக எண்ணை அடுத்து வருவதை காணலாம்.

இதைத் தொடர்ந்து வரும் பகுதிகளில், இயக்கத்தில் உள்ள இடைமுகத்தின் பெயர் eth0 என்னும் அனுமானத்தில் கையேடு நகரும்.

விரும்பினால்: ஏதாவது பதிலாளிகளை உள்ளமைத்தல்

இணையத்தை பதிலாளி மூலம் அணுகினால், நிறுவலின் போது பதிலாளி விவரங்களை அமைப்பது கட்டாய தேவையாகும். பதிலாளியை வரையறுப்பது எளிய செயலாகும்: இதற்கு பதிலாளியின் சேவையக விவரங்கள் அடங்கிய ஒரு மாறியை வரையறுத்தால் போதுமானது.

Certain text-mode web browsers such as links can also make use of environment variables that define web proxy settings; in particular for the HTTPS access it also will require the https_proxy environment variable to be defined. While Portage will be influenced without passing extra run time parameters during invocation, links will require proxy settings to be set.

பெரும்பாலான சூழல்களில், சேவையகத்தின் புரவலன் பெயரைக் கொண்டு மாறியை வரையறுத்தால் போதும். எடுத்துக்காட்டாக, பதிலாளியின் பெயர் proxy.gentoo.org என இருந்து அதன் துறை 8080 ஆக இருந்தால்.

குறிப்பு
The # symbol in the following commands is a comment. It has een added for clarity only and does not need to be typed when entering the commands.

HTTP பதிலாளியை அமைப்பதற்கு (HTTP மற்றும் HTTPS போக்குவரத்துகளுக்கு):

root #export http_proxy="http://proxy.gentoo.org:8080"

ஒருவேளை பதிலாளிக்கு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் தேவைப்பட்டால், மாறிக்கான பின்வரும் தொடரியலை பயன்படுத்தவும்:

குறிமுறை பதிலாளி மாறிக்கு பயனர்பெயர்/கடவுச்சொல் ஆகியவற்றை சேர்த்தல்
http://username:password@proxy.gentoo.org:8080

Start links using the following parameters for proxy support:

user $links -http-proxy ${http_proxy} -https-proxy ${https_proxy}

FTP பதிலாளியை அமைப்பதற்கு:

root #export ftp_proxy="ftp://proxy.gentoo.org:8080"

Start links using the following parameter for a FTP proxy:

user $links -ftp-proxy ${ftp_proxy}

RSYNC பதிலாளியை அமைப்பதற்கு:

root #export RSYNC_PROXY="proxy.gentoo.org:8080"

வலையமைப்பை சோதித்தல்

உங்கள் இணையச் சேவையாளரின் DNS சேவையகம் (/etc/resolv.conf இல் காணலாம்) மற்றும் நீங்கள் விரும்பும் ஒரு இணையப்பக்கத்தை பிங் செய்து முயலவும். இதன்மூலம் வலையமைப்பு நன்றாக வேளை செய்கிறது என்றும் வலையமைப்பு தொகுப்புகள் இணையத்தைச் சென்றடைகிறது என்றும் DNS பெயர் தீர்மானம் முறையாக வேலை செய்கிறது என்றும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

root #ping -c 3 www.gentoo.org

இவையெல்லாம் சரியாக வேளை செய்தால், இப்பகுதியின் மீதமுள்ள வழிமுறைகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக நிறுவல் வழிமுறைகளின் அடுத்த பகுதியான (தகடுகளை ஆயத்தப்படுத்துதல்) பகுதிக்குச் செல்லலாம்.

தானியக்க வலையமைப்பு உள்ளமைத்தல்

வலையமைப்பு உடனடியாக வேளை செய்யவில்லை என்றால், சில நிறுவல் ஊடகங்கள் net-setup (வழக்கமான அல்லது கம்பியில்லா வலையமைப்புகளுக்கு), pppoe-setup (ADSL பயனாளர்களுக்கு) அல்லது pptp (PPTP பயனாளர்களுக்கு) போன்ற கட்டளைகளைப் பயன்படுத்தப் பயனர்களை அனுமதிக்கிறது.

நிறுவல் ஊடகத்தில் இவ்வகையான கருவிகள் எதுவும் இல்லையென்றால், கைமுறையாக வலையமைப்பை உள்ளமைத்தல் இல் தொடரவும்.

முன்னிருப்பு: net-setup ஐ பயன்படுத்துதல்

தானியக்கமாக உள்ளமைக்கப்படாத வலையாக்கத்தை அமைப்பதற்கான எளிமையான வழி net-setup என்னும் குறுநிரலை இயக்குவதாகும்:

root #net-setup eth0

net-setup வலையமைப்பு சூழலை பற்றி சில கேள்விகளை கேட்கும். எல்லாம் முடிந்தவுடன் வலைய இணைப்பு வேளை செய்ய வேண்டும். மேலே கூறியவாறு வலைய இணைப்பை சோதித்து பார்க்கவும். சோதனை வெற்றிகரமாக முடிந்தால், வாழ்த்துக்கள்! இப்பகுதியின் மீதமுள்ள வழிமுறைகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக நிறுவல் வழிமுறைகளின் அடுத்த பகுதியான தகடுகளை ஆயத்தப்படுத்துதல் பகுதிக்குச் செல்லவும்.

வலையமைப்பு இன்னமும் வேளை செய்யவில்லை என்றால், கைமுறையாக வலையமைப்பை உள்ளமைத்தல் இல் தொடரவும்.

இதற்குப் பதிலாக: PPP ஐ பயன்படுத்துதல்

இணையத்தோடு இணைப்பை உருவாக்க PPPoE தேவைப்படலாம் என்பதை அனுமானித்து, எல்லா வகையான நிறுவல் குறுந்தகட்டிலும் ppp ஐ சேர்த்து நிலைமையை எளிமையாக்கப்பட்டுள்ளது. அளித்துள்ள pppoe-setup குறுநிரலைக் கொண்டு இணைப்பை உள்ளமைக்கவும். இந்நிறுவலின் போது ADSL இணக்கியோடு இணைக்கப்பட்டிருக்கும் ஈத்தர்வலை சாதனத்தின் பெயர், பயனர்பெயர், கடவுச்சொல், DNS சேவையகங்களின் IP முகவரிகள் மற்றும் அடிப்படை தீயரண் தேவையா இல்லையா என்னும் கேள்விகள் கேட்கப்படும்.

root #pppoe-setup
root #pppoe-start

ஏதேனும் தவறு நிகழ்ந்தால், etc/ppp/pap-secrets அல்லது /etc/ppp/chap-secrets இல் உள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் சரியாக உள்ளதா என்பதையும் சரியான ஈத்தர்வலை சாதனத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். ஈத்தர்வலை சாதனம் இல்லையென்றால் அதற்குப் பொருத்தமான வலைய கூறுகள் ஏற்றப்பட வேண்டும். இந்நிலையில் பொருத்தமான வலைய கூறுகளை எவ்வாறு ஏற்றுவது என்பதைப் பற்றிய விளக்கத்தை கைமுறையாக வலையமைப்பை உள்ளமைத்தல் இல் தொடர்ந்து காணலாம்.

எல்லாம் சரியாக வேளை செய்தால், தகடுகளை ஆயத்தப்படுத்துதலில் தொடரவும்.

இதற்குப் பதிலாக: PPTP ஐ பயன்படுத்துதல்

PPTP ஆதரவு தேவைப்பட்டால் நிறுவல் குறுந்தகட்டில் அளிக்கப்பட்டுள்ள pptpclient ஐ பயன்படுத்தவும். ஆனால் அதற்கு முன் உள்ளமைவு சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். /etc/ppp/pap-secrets அல்லது /etc/ppp/chap-secrets கோப்பில் சரியான பயனர்பெயர்/கடவுச்சொல் சேர்க்கை உள்ளவாறு திருத்தவும்:

root #nano -w /etc/ppp/chap-secrets

பிறகு தேவைப்பட்டால் /etc/ppp/options.pptp ஐ சரிசெய்துகொள்ளவும்:

root #nano -w /etc/ppp/options.pptp

எல்லாம் முடிந்தவுடன், சேவையகத்தோடு இணைக்க pptp கட்டளையை (options.pptp இல் அமைக்க முடியாத விருப்பத்தேர்வுகளோடு) இயக்கவும்:

root #pptp <server ipv4 address>

இப்போது தகடுகளை ஆயத்தப்படுத்துதல் இல் தொடரலாம்.

கைமுறையாக வலையமைப்பை உள்ளமைத்தல்

பொருத்தமான வலையமைப்பு கூறுகளை ஏற்றுதல்

நிறுவல் குறுந்தகடு துவங்கும்போது, எல்லா வன்பொருள் சாதனங்களையும் கண்டறிய முயற்சி செய்து கண்டறிந்த வன்பொருள் சாதனங்களுக்கான ஆதரவுக்காக அதற்குரிய கர்னல் கூறுகளை (இயக்கிகளை) ஏற்றும். பெரும்பாலான சூழல்களில் இது சிறப்பாக பணியினை செய்கிறது. இருந்தாலும் சில சமயங்களில் வலையமைப்பு வன்பொருளோடு சரியாக உரையாடுவதற்கான கர்னல் கூறுகள் தானாக ஏற்றப்படுவதில்லை.

net-setup அல்லது pppoe-setup தோல்வியடைந்தால், வலையமைப்பு அட்டை உடனடியாக கண்டறியாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகப் பயனர் கைமுறையாக உரிய கர்னல் கூறுகளை ஏற்ற வேண்டும்.

வலையமைத்தலுக்கு என்ன கர்னல் கூறுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ள, ls கட்டளையைப் பயன்படுத்தவும்:

root #ls /lib/modules/`uname -r`/kernel/drivers/net

வலையமைப்பு சாதனத்திற்கான இயக்கி கண்டறியப்பட்டால், கர்னல் கூறை ஏற்றுவதற்கு modprobe கட்டளையைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, pcnet32 கூறை ஏற்றுவதற்கு:

root #modprobe pcnet32

வலையமைப்பு அட்டை இப்போது கண்டறியப்படுகிறதா என்பதைச் சோதிப்பதற்கு ifconfig கட்டளையைப் பயன்படுத்தவும். கண்டறியப்பட்ட வலையமைப்பு அட்டை ஏறக்குறைய இதைப்போல் காணப்படும் (இதில் eth0 வெறும் எடுத்துக்காட்டு மட்டுமே):

root #ifconfig eth0
eth0      Link encap:Ethernet  HWaddr FE:FD:00:00:00:00  
          BROADCAST NOARP MULTICAST  MTU:1500  Metric:1
          RX packets:0 errors:0 dropped:0 overruns:0 frame:0
          TX packets:0 errors:0 dropped:0 overruns:0 carrier:0
          collisions:0 txqueuelen:0 
          RX bytes:0 (0.0 b)  TX bytes:0 (0.0 b)

பதிலாகப் பின்வரும் பிழை தோன்றினால், வலையமைப்பு அட்டை கண்டறியப்படவில்லை என்று பொருள்:

root #ifconfig eth0
eth0: error fetching interface information: Device not found

முறைமையில் கிடைக்கக்கூடிய வலையமைப்பு இடைமுக பெயர்களை /sys கோப்பு முறைமையைக் கொண்டு பட்டியலிடலாம்:

root #ls /sys/class/net
dummy0  eth0  lo  sit0  tap0  wlan0

மேலுள்ள எடுத்துக்காட்டில், 6 இடைமுகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் eth0 பெரும்பாலும் ஈத்தர்வலை தகவியையும், wlan0 என்பது கம்பியில்லா ஒன்றையும் குறிக்கும்.

வலையமைப்பு அட்டை இப்போது கண்டறியப்பட்டுவிட்டது என்னும் அனுமானத்தில் net-setup அல்லது pppoe-setup ஐ இப்போது முயற்சி செய்து பார்க்கவும் (இப்போது வேளை செய்திருக்க வேண்டும்). மேலும், தீவிரமான பயனர்களுக்குக் கைமுறையாக எவ்வாறு வலையமைப்பை உள்ளமைப்பது பற்றிய விளக்கத்தையும் அளித்துள்ளோம்.

உங்கள் வலையமைப்பு நிறுவலைப் பொருத்து பின்வரும் பிரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்யவும்:

DHCP ஐ பயன்படுத்துதல்

DHCP (மாறும் புரவலன் உள்ளமைவு வரைமுறை) தானாக வலையமைப்பு தகவல்களை (IP முகவரி, வலைமுகமூடி, ஒலிபரப்பு முகவரி, தலைவாயில், பெயர் சேவையகங்கள் முதலியன) பெறுதலைச் சாத்தியமாக்குகிறது. DHCP சேவையகம் வலையமைப்பில் இருந்தால் (அல்லது இணையச் சேவையாளர் DHCP சேவையை வழங்கியிருந்தால்) மட்டுமே இது வேளை செய்யும். வலையமைப்பு இடைமுகம் இவ்வகை தகவல்களைத் தானியக்கமாகப் பெற, dhcpcd ஐ பயன்படுத்தவும்:

root #dhcpcd eth0

DHCP சேவையகத்தால் வழங்கப்பட்ட புரவலன் பெயர் மற்றும் திரளப்பெயரை முறைமை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என சில வலையமைப்பு மேலாளர்கள் கருதுவர். இந்த சூழலில் இதைப் பயன்படுத்தவும்:

root #dhcpcd -HD eth0

இது வேளை செய்தால் (கூகுளின் 8.8.8.8 அல்லது கிளவுட்ஃபிலேரின் 1.1.1.1 போன்ற சேவையக முகவரிகள் வேளை செய்கிறதா சோதித்துப் பார்க்கவும்), எல்லாம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து செல்ல ஆயத்தமாகிவிட்டீர்கள். மீதமுள்ள பக்கத்தைத் தவிர்த்துவிட்டு நேரடியாக தகடுகளை ஆயத்தப்படுத்துதல் பகுதிக்குச் செல்லவும்.

கம்பியில்லா அணுகலை ஆயத்தப்படுத்தல்

குறிப்பு
iw கட்டளைக்கான ஆதரவு கட்டமைப்பு-சார்ந்ததாக இருக்கலாம். இந்த கட்டளை வேளை செய்யவில்லை என்றால் உங்கள் இப்போதைய கட்டமைப்பில் net-wireless/iw தொகுப்பு இருப்பில் உள்ளதா எனப் பார்க்கவும். net-wireless/iw தொகுப்பு நிறுவப்படாத வரை iw கட்டளையைப் பயன்படுத்த இயலாது.

கம்பியில்லா (802.11) அட்டையைப் பயன்படுத்தும்போது, மேற்கொண்டு செல்வதற்கு முன் கம்பியில்லா அமைப்புகளை உள்ளமைக்கப்பட்டிருக்க வேண்டும். அட்டையில் உள்ள இப்போதைய கம்பியில்லா அமைப்புகளைக் காண iw கட்டளையைப் பயன்படுத்தலாம். iw கட்டளையை இட்ட பின் திரையில் இவ்வாறாகத் தோன்றும்:

root #iw dev wlp9s0 info
Interface wlp9s0
	ifindex 3
	wdev 0x1
	addr 00:00:00:00:00:00
	type managed
	wiphy 0
	channel 11 (2462 MHz), width: 20 MHz (no HT), center1: 2462 MHz
	txpower 30.00 dBm

தற்போதுள்ள இணைப்பை சரிபார்க்க:

root #iw dev wlp9s0 link
Not connected.

அல்லது

root #iw dev wlp9s0 link
Connected to 00:00:00:00:00:00 (on wlp9s0)
	SSID: GentooNode
	freq: 2462
	RX: 3279 bytes (25 packets)
	TX: 1049 bytes (7 packets)
	signal: -23 dBm
	tx bitrate: 1.0 MBit/s
குறிப்பு
சில கம்பியில்லா அட்டைகள் wlp9s0 ற்கு பதிலாக wlan0 அல்லது ra0 என்னும் சாதன பெயர்களை கொண்டிருக்கும். சரியான சாதன பெயரை அறிய ip link என்னும் கட்டளையை இயக்கவும்.

பெரும்பாலான பயனர்களுக்கு, வலையமைப்போடு இணைப்பதற்கு ESSID (என அழைக்கப்படும் கம்பியில்லா வலையமைப்பின் பெயர்) மற்றும் விரும்பினால் WEP சாவி ஆகிய இவ்விரண்டு அமைப்புகள் மட்டுமே தேவைப்படும்.

  • முதலில் இடைமுகம் இயக்கத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:
root #ip link set dev wlp9s0 up
  • GentooNode என்னும் பெயரைக் கொண்டுள்ள திறந்த வலையமைப்போடு இணைப்பதற்கு:
root #iw dev wlp9s0 connect -w GentooNode
  • பதினறும WEP சாவியைக் கொண்டு இணைப்பதற்கு, d: என்னும் முன்னொட்டைத் தொடர்ந்து சாவியை உள்ளிடவும்:
root #iw dev wlp9s0 connect -w GentooNode key 0:d:1234123412341234abcd
  • ASCII WEP சாவியைக் கொண்டு இணைப்பதற்கு:
root #iw dev wlp9s0 connect -w GentooNode key 0:some-password
குறிப்பு
கம்பியில்லா வலையமைப்பு WPA அல்லது WPA2 வை கொண்டு அமைக்கப்பட்டால், wpa_supplicant ஐ பயன்படுத்த வேண்டி வரும். ஜென்டூ லினக்ஸில் கம்பியில்லா வலையமைப்பை உள்ளமைப்பதை பற்றிய மேலும் விவரங்களுக்கு, சென்டூ கையேட்டில் உள்ள கம்பியில்லா வலையமைப்பு பகுதியைப் படிக்கவும்.

iw dev wlp9s0 link ஐ பயன்படுத்தி கம்பியில்லா அமைப்புகளை உறுதிப்படுத்தவும். கம்பியில்லா வலையமைப்பு வேளை செய்ய தொடங்கினால் IP நிலை வலையமைப்பு விருப்பத்தேர்வுகளை உள்ளமைப்பது பற்றி விவரிக்கும் வலையமைப்பு கலைச்சொற்களைப் புரிந்துகொள்ளுதல் என்னும் அடுத்த பிரிவிற்கு செல்லவும். இல்லையென்றால் முன்னர் விளக்கியது போல் net-setup கருவியை பயன்படுத்தவும்.

வலையமைப்பு கலைச்சொற்களைப் புரிந்துகொள்ளுதல்

குறிப்பு
IP முகவரி, ஒலிபரப்பு முகவரி, வலைமுகமூடி மற்றும் பெயர்-சேவையகங்கள் ஆகியவற்றை அறிந்திருந்தால், இந்த துணை பிரிவைத் தவிர்த்துவிட்டு ifconfig மற்றும் route ஐ பயன்படுத்துதல் இல் தொடரவும்.

மேற்கூறியவை எல்லாம் தோல்வியடைந்தால், வலையமைப்பு கைமுறையாகத்தான் உள்ளமைக்க வேண்டும். இது கடினமான பணியே கிடையாது. இருந்தாலும் வலையமைப்பு கலைச்சொற்கள் மற்றும் கருத்துக்களின் அடிப்படை அறிவு இதற்குத் தேவைப்படலாம். இந்த பிரிவைப் படித்து முடித்தவுடன், தலைவாயில் என்றால் என்ன, வலைமுகமூடி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு ஒலிபரப்பு முகவரி உருவாகிறது மற்றும் முறைமைகளுக்கு ஏன் பெயர்-சேவையகங்கள் தேவைப்படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களைப் பயனர்கள் அறிந்துகொள்வார்கள்.

வலையமைப்பில், புரவலன்கள் அவற்றின் IP முகவரியால் (இணைய நெறிமுறை முகவரி) அடையாளங்காட்டப்படுகிறது. இத்தகைய முகவரி 0 மற்றும் 255 எண்ணிற்குள் உள்ள நான்கு எண்களின் கூட்டாக அறியப்படுகிறது. இது IPv4 (IP பதிப்பு 4) ஐ பயன்படுத்தும்போது உள்ள நிலை என்றாலும். உண்மையில் IPv4 முகவரி 32 இருமங்களை (ஒன்று மற்றும் சுழியங்களை) கொண்டுள்ளது. இதைப் பின்வரும் எடுத்துக்காட்டில் நாம் காணலாம்:

குறிமுறை IPv4 முகவரியின் எடுத்துக்காட்டு
IP முகவரி (எண்களில்):   192.168.0.2
IP முகவரி (இருமங்களில்):     11000000 10101000 00000000 00000010
                            -------- -------- -------- --------
                              192      168       0        2
குறிப்பு
IPv4 இன் கால்வழியினரான IPv6 128 இருமங்களை (ஒன்று மற்றும் சுழியங்களை) பயன்படுத்துகிறது. இந்த பிரிவில் IPv4 முகவரிகளுக்குக் கவனம் செலுத்தப்படுகிறது.

இத்தகைய IP முகவரி புரவலன் மற்றும் எல்லா அணுகக்கூடிய வலையமைப்புகளை பொருத்தவரை தனித்துவமானதாகும் (அதாவது ஒருவர் அணுக விரும்பும் ஒவ்வொரு புரவலனும் தனித்துவமான IP முகவரியைக் கொண்டிருக்கும்). வலையமைப்பிற்கு உள்ளும் வெளியும் உள்ள புரவலன்களை வேறுபடுத்துவதற்கு, IP முகவரிகள் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: வலையமைப்பு பாகம் மற்றும் புரவலன் பாகம்.

பிரித்தல் ஒன்றுகளின் திரள்களைத் தொடர்ந்து சுழியங்களின் திரள்களைக் கொண்ட வலைமுகமூடியால் எழுதப்படுகிறது. IP முகவரியின் பாகமான வலையமைப்பு பாகத்தை ஒன்றுகளால் வரைபடமாக்கலாம். இதனை அடுத்துள்ளது புரவலன் பாகம். வழக்கம்போல் வலைமுகமூடியையும் IP முகவரியாக எழுதலாம்.

குறிமுறை வலையமைப்பு/புரவலன் பிரித்தலுக்கான எடுத்துக்காட்டு
IP முகவரி:          192      168      0         2
                 11000000 10101000 00000000 00000010
வலைமுகமூடி:    11111111 11111111 11111111 00000000
                    255      255     255        0
                 +--------------------------+--------+
                          வலையமைப்பு        புரவலன்

இதில் 192.168.0.14 என்பது எடுத்துக்காட்டு வலையமைப்பின் ஒரு பகுதியே தவிர 192.168.1.2 இல்லை.

ஒலிபரப்பு முகவரி என்னும் IP முகவரியில் உள்ள வலையமைப்பு-பாகம் மட்டும் மாறுபடுமே தவிரப் புரவலன்-பாகத்தில் 1 கள் மட்டுமே இருக்கும். வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு புரவலனும் இந்த IP முகவரியைக் கவனிக்கும். உண்மையில் இது தொகுப்புகளை ஒலிபரப்பு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

குறிமுறை ஒலிபரப்பு முகவரி
IP முகவரி:    192      168      0         2
             11000000 10101000 00000000 00000010
ஒலிபரப்பு:    11000000 10101000 00000000 11111111
                192      168      0        255
            +--------------------------+--------+
                     வலையமைப்பு        புரவலன்

இணையத்தில் உலாவ, வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணினியும் எந்த புரவலன் இணைய இணைப்பைப் பகிர்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். இந்த புரவலன், தலைவாயில் என அழைக்கப்படுகிறது. இது ஒரு வழக்கமான புரவலன் என்பதால் இதற்கு வழக்கமான IP முகவரி இருக்கும் (எடுத்துக்காட்டாக 192.168.0.1).

முன்னதாக ஒவ்வொரு புரவலனும் தனக்கென ஒரு IP முகவரியைக் கொண்டிருக்கும் எனக் கூறினோம். இந்த புரவலனைப் பெயர் மூலமாக (IP முகவரிக்குப் பதிலாக) அணுகுவதற்கு நமக்குப் பெயரை (dev.gentoo.org போன்ற) IP முகவரியாக (64.5.62.82 போன்ற) மாற்றும் ஒரு சேவை தேவை. இந்த சேவையை நாம் பெயர் சேவை என அழைக்கிறோம். இந்த சேவையைப் பயன்படுத்த, தேவையான பெயர் சேவையகங்கள் /etc/resolv.conf இல் வரையறுக்கப்பட வேண்டும்.

சில சூழல்களில், தலைவாயில் பெயர்-சேவையகங்களாகச் சேவையாற்றுகின்றன. மற்றபடி இணையச் சேவையாளரால் வழங்கப்பட்ட பெயர்-சேவையகங்கள் இந்த கோப்பில் இட வேண்டும்.

சுருக்கமாகக் கூறினால் மேற்கொண்டு செல்வதற்கு முன் பின்வரும் விவரங்கள் தேவை:

வலையமைப்பு உருப்படிகள் எடுத்துக்காட்டு
முறைமை IP முகவரி 192.168.0.2
வலைமுகமூடி 255.255.255.0
ஒலிபரப்பு 192.168.0.255
தலைவாயில் 192.168.0.1
பெயர்-சேவையக(ங்கள்) 195.130.130.5, 195.130.130.133

ifconfig மற்றும் route ஐ பயன்படுத்துதல்

sys-apps/net-tools தொகுப்பில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி கைமுறையாக வலையமைப்பை அமைத்தல் பொதுவாக மூன்று படிநிலைகளைக் கொண்டுள்ளது:

  1. ifconfig கட்டளையைப் பயன்படுத்தி IP முகவரியை ஒதுக்குதல்.
  2. route கட்டளையைப் பயன்படுத்தி தலைவாயிலுக்கு வழியிடலை அமைத்தல்.
  3. இறுதியாக /etc/resolv.conf கோப்பில் ஏற்புடைய பெயர்-சேவையக IP களை இடுதல்.

ஒரு IP முகவரியை ஒதுக்க IP முகவரி, ஒலிபரப்பு முகவரி மற்றும் வலைமுகமூடி ஆகியவை தேவை. பின்வரும் கட்டளையில் ${IP_ADDR} க்கு பதிலாக இலக்க IP முகவரியையும், ${BROADCAST} க்கு பதிலாக இலக்க ஒலிபரப்பு முகவரியையும், ${NETMASK} க்கு பதிலாக இலக்க வலைமுகமூடியையும் மாற்றி இயக்கவும்.

root #ifconfig eth0 ${IP_ADDR} broadcast ${BROADCAST} netmask ${NETMASK} up

வழியிடலை உள்ளமைப்பதற்கு route கட்டளையைப் பயன்படுத்தவும், இதில் ${GATEWAY} மதிப்புக்குப் பதிலாகப் பொருத்தமான தலைவாயில் IP முகவரியைப் பயன்படுத்தவும்.

root #route add default gw ${GATEWAY}

இப்போது உரை திருத்தியைக் கொண்டு /etc/resolv.conf கோப்பை திறக்கவும்:

root #nano -w /etc/resolv.conf

பெயர்-சேவையக(ங்களை) நிரப்புவதற்குப் பின்வரும் வார்ப்புருவில் ${NAMESERVER1} மற்றும் ${NAMESERVER2} க்கு பதிலாகத் தேவைக்கேற்ப பெயர்-சேவையக IP முகவரிகளைப் பயன்படுத்தவும். இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட பெயர்-சேவையகத்தைச் சேர்க்கலாம்.

கோப்பு /etc/resolv.confமுன்னிருப்பு resolv.conf அளவுரு
nameserver ${பெயர்சேவையகம்1}
nameserver ${பெயர்சேவையகம்2}

இப்போது வலையமைப்பு சரியாக வேளை செய்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளச் சேவையக முகவரிகளை (கூகுளின் 8.8.8.8 அல்லது கிளவுட்ஃபிலேரின் 1.1.1.1 போன்ற) வேளை செய்கிறதா எனச் சோதித்துப் பார்க்கவும். வலையமைப்பு இணைக்கப்பட்டு விட்டால், கையேட்டின் அடுத்த பகுதியான தகடுகளை ஆயத்தப்படுத்துதல் இல் தொடரவும்.