கையேடு:MIPS/வலையமைத்தல்/சேர்த்தல்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:MIPS/Networking/Extending and the translation is 100% complete.
MIPS கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை

தரமான செயற்கூறு கொக்கிகள்

தொடக்க/நிறுத்த செயல்பாடுகளைச் சுற்றியுள்ளது என அழைக்கப்படும் நான்கு செயற்கூறுகளை /etc/conf.d/net கோப்பில் வரையறுக்கலாம். இந்த செயற்கூறுகளானது இடைமுக பெயரை முதலாகக் கொண்டு அழைக்கப்படும். இதன்மூலம் ஒரு செயல்கூறால் பல தகவிகளை கட்டுப்படுத்த இயலும்.

இடைமுகத்தின் உள்ளமைவு அல்லது உள்ளமைவு-இன்மை தொடரலாம் என்பதைக் காட்டுவதற்கு preup() மற்றும் predown() செயலாற்றிகளின் திரும்பு மதிப்புகள் 0 (வெற்றி) ஆக இருக்க வேண்டும். preup() ஆனது ஒரு சுழியம்-அல்லாத மதிப்பைத் திரும்பி அளித்தால், இடைமுக உள்ளமைவு நிறுத்தப்பட்டுவிடும். predown() ஆனது ஒரு சுழியம்-அல்லாத மதிப்பைத் திரும்பி அளித்தால், உள்ளமைவு-இன்மையைத் தொடர்வதற்கு இடைமுகத்தை அனுமதிக்காது.

postup() மற்றும் postdown() செயலாற்றியின் திரும்பு மதிப்புகள் தோல்வியைச் சுட்டிக்காட்டினாலும் அவற்றை ஒன்றும் செய்யத் தேவையில்லை என்பதால் அவை தவிர்க்கப்பட்டுள்ளது.

${IFACE} ஆனது செயல்படுத்தப்படும்/செயலணைக்கப்படும் இடைமுகத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ${IFVAR} ஆனது பாஷ் ஆல் அனுமதிக்கப்படும் மாறி பெயராக மாற்றப்பட்டுள்ள ${IFACE} ஆகும்.

கோப்பு /etc/conf.d/netமுன்/பின் செயல்படுதல்/செயலிழத்தல் செயலாற்றிகளின் எடுத்துக்காட்டுக்கள்
preup() {
  # இடைமுகத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு 
  # முன் அதன் இணைப்பைச் சோதிக்கிறது. இது சில வலையமைப்பு 
  # தகவிகளில் மட்டுமே வேலை செய்யும். மேலும் இது சரியாக 
  # வேலை செய்வதற்கு ethtool என்னும் தொகுப்பு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
  if ethtool ${IFACE} | grep -q 'Link detected: no'; then
    ewarn "No link on ${IFACE}, aborting configuration"
    return 1
  fi
  
  # வெற்றியடைந்த பின் 0 விற்கு திரும்புவதற்கு
  return 0
}
  
predown() {
  # NFS root ற்காக சோதித்து, செயலிழக்கும் இடைமுகங்களுக்கான அனுமதியை
  # மறுப்பதே இந்த குறுநிரலின் முன்னிருப்பாகும். predown() செயலாற்றியை
  # நீங்கள் குறிப்பிட்டால், இந்த ஏரணத்தை நீங்கள் மேலெழுத கூடும் என்பதை
  # நினைவில் வைத்துக்கொள்ளவும். 
  # இருப்பினும் உங்களுக்கு இது தேவை என்றால், இதோ... 
  if is_net_fs /; then
    eerror "root filesystem is network mounted -- can't stop ${IFACE}"
    return 1
  fi
  
  # வெற்றியடைந்த பின் 0 விற்கு திரும்புவதற்கு
  return 0
}
  
postup() {
  # இந்த செயலாற்றியை கொண்டு ஒரு இயங்குநிலை DNS சேவையைப்
  # பதிவு செய்யப் பயன்படுத்தலாம். மேலும், இடைமுகம் செயல்பாட்டிற்கு
  # வந்தபின் இதன்மூலம் அஞ்சல்களை அனுப்ப/பெறப் பயன்படுத்தலாம்.
       return 0
}
  
postdown() {
  # இந்த செயற்கூறு முழுமை பெறுவதற்காக வேண்டி இங்கு உள்ளது... 
  # இதில் என்ன வில்லங்கமாகச் செய்யலாம் என்று இன்னும் நான் 
  # தீர்மானிக்கவில்லை ;-)
  return 0
}
குறிப்பு
செயற்கூறுகளை எழுதுவதைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள, /usr/share/doc/netifrc-*/net.example.bz2 ஐ படிக்கவும்

கம்பியில்லா கருவிகள் செயற்கூறு கொக்கிகள்

குறிப்பு
இது WPA Supplicant உடன் வேலை செய்யாது - ஆனால் postup() செயற்கூறில் ${ESSID} மற்றும் ${ESSIDVAR} ஆகிய இரண்டு மாறிகளும் கிடைக்கும்.

கூட்டு செயல்பாடுகளைச் சுற்றியுள்ளது என அழைக்கப்படும் இரண்டு செயற்கூறுகளை /etc/conf.d/net கோப்பில் வரையறுக்கலாம். இந்த செயற்கூறுகளானது இடைமுக பெயரை முதலாகக் கொண்டு அழைக்கப்படும். இதன்மூலம் ஒரு செயல்கூறால் பல தகவிகளை கட்டுப்படுத்த இயலும்.

இடைமுகத்தின் உள்ளமைவு அல்லது உள்ளமைவு-இன்மை தொடரலாம் என்பதைக் காட்டுவதற்கு preassociate() செயலாற்றிகளின் திரும்பு மதிப்புகள் 0 (வெற்றி) ஆக இருக்க வேண்டும். preassociate() ஆனது ஒரு சுழியம்-அல்லாத மதிப்பைத் திரும்பி அளித்தால், இடைமுக உள்ளமைவு நிறுத்தப்பட்டுவிடும்.

postassociate() செயலாற்றியின் திரும்பு மதிப்புகள் தோல்வியைச் சுட்டிக்காட்டினாலும் அவற்றை ஒன்றும் செய்யத் தேவையில்லை என்பதால் அவை தவிர்க்கப்பட்டுள்ளது.

${ESSID} ஆனது முறைமை இணைக்கப்பட்டுள்ள அணுகல் புள்ளியின் ESSID க்கு அமைக்கப்பட்டுள்ளது. ${ESSIDVAR} ஆனது பாஷ் ஆல் அனுமதிக்கப்படும் மாறி பெயராக மாற்றப்பட்டுள்ள ${ESSID} ஆகும்.

கோப்பு /etc/conf.d/netமுன்/பின் கூட்டமைப்பு செயற்கூறுகள்
preassociate() {
  # கீழுள்ளது leap_user_ESSID மற்றும் leap_pass_ESSID ஆகிய
  # இரண்டு உள்ளமைவு மாறிகளைச் சேர்க்கிறது. இவை இரண்டும் 
  # இணைக்கப்படவுள்ள ESSID க்காக உள்ளமைக்கப்பட்டவுடன் நாம் 
  # CISCO LEAP குறுநிரலை இயக்குவோம்.
  
  local user pass
  eval user=\"\$\{leap_user_${ESSIDVAR}\}\"
  eval pass=\"\$\{leap_pass_${ESSIDVAR}\}\"
  
  if [[ -n ${user} && -n ${pass} ]]; then
    if [[ ! -x /opt/cisco/bin/leapscript ]]; then
      eend "For LEAP support, please emerge net-misc/cisco-aironet-client-utils"
      return 1
    fi
    einfo "Waiting for LEAP Authentication on \"${ESSID//\\\\//}\""
    if /opt/cisco/bin/leapscript ${user} ${pass} | grep -q 'Login incorrect'; then
      ewarn "Login Failed for ${user}"
      return 1
    fi
  fi
  
  return 0
}
  
postassociate() {
  # இந்த செயற்கூறு முழுமை பெருவதற்காக வேண்டி இங்கு உள்ளது... 
  # இதில் என்ன வில்லங்கமாக செய்யலாம் என்று இன்னும் நான் 
  # தீர்மானிக்கவில்லை ;-)
  
  return 0
}
குறிப்பு
predown() மற்றும் postdown() செயற்கூறுகளில் ${ESSID} மற்றும் ${ESSIDVAR} ஆனது கிடைக்கவில்லை.
குறிப்பு
தனிப்பயன் செயற்கூறுகளை எழுதுவதைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள, /usr/share/doc/netifrc-*/net.example.bz2 ஐ படிக்கவும்.