கையேடு:HPPA/நிறுவல்/ஊடகம்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:HPPA/Installation/Media and the translation is 100% complete.
HPPA கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
ஜென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை


வன்பொருள் தேவைகள்

துவங்குவதற்கு முன், ஜென்டூவை வெற்றிகரமாக நிறுவுவதற்குத் தேவையான வன்பொருட்களின் பட்டியலை hppa பெட்டியில் இப்போது காணலாம்.


ஆதரிக்கப்பட்ட வன்பொருட்களின் பட்டியலை PA குழு இணையதளத்தில் காணலாம். முறைமையைப் பற்றிய கூடுதல் தகவல்களை Parisc-லினக்ஸ் வன்பொருள் தரவுத்தளம் மற்றும் www.openpa.net இல் உள்ள செயலாக்கி பட்டியல் இல் சென்று பார்க்கவும்.

இப்போதைய முறைமை PA-RISC 1.1 அல்லது 2.0 ஐ பயன்படுத்துகிறதா என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும். இது குழப்பமாக இருந்தால் மேலுள்ள தொடுப்புகளில் சென்று பார்க்கவும்.

நினைவகம் 64 MB
வட்டு அளவு 1.5 GB (இடமாற்று அளவை தவிர்த்து)
இடமாற்று அளவு குறைந்தது 256 MB


ஜென்டூ லினக்ஸ் நிறுவல் ஊடகம்

சிறும நிறுவல் குறுந்தகடு

ஜென்டூ சிறும நிறுவல் குறுந்தகடு ஒரு துவக்கவல்ல படமாகும்: இது ஜென்டூ சூழலை தன்னுள் கொண்டுள்ளது. இதன்மூலம் பயனரால் குறுந்தகடு அல்லது மற்ற நிறுவல் ஊடகம் வாயிலாக லினக்ஸை துவக்க முடியும். துவக்கச் செயலின் போது வன்பொருள் கண்டறியப்பட்டு அதற்குரிய இயக்கி ஏற்றப்படுகிறது. இந்த படம் ஜென்டூ உருவாக்குனர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இணைய இணைப்பு உள்ள எவரும் இதைப் பதிவிறக்கி நிறுவலாம்.

சிறும நிறுவல் CD install-hppa-minimal-<release>.iso என அழைக்கப்படுகிறது.

அவ்வப்போது வெளிவரும் ஜென்டூ நிகழ் பல்திறன்வட்டு (DVD)

அவ்வப்போது ஜென்டூவை நிறுவ ஒரு சிறப்பு பல்திறன்வட்டு படம் உருவாக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள வழிமுறைகள் சிறும நிறுவல் குறுந்தகட்டை மையப்படுத்தி அமைந்துள்ளது. எனவே நிகழ் பல்திறன்வட்டில் இருந்து துவக்கும் போது இவை வேறுபடலாம். ஆனால் நிகழ் பல்திறன்வட்டிலோ அல்லது வேறு எந்த துவக்க வல்ல லினக்ஸ் சூழலிலோ வேர் முனையத்தைப் பெற sudo su - அல்லது sudo -i என்னும் கட்டளையை முனையத்தில் இட்டால் போதும்.

அப்படியென்றால் நிலைகள் என்றால் என்ன?

நிலை3 tarball என்பது ஒரு தனியமைப்பு சார்ந்த சிறும ஜென்டூ சூழலை உள்ளடக்கிய காப்பக கோப்பாகும். இந்த நிலை3 tarball ஐ கொண்டு கையேட்டில் உள்ள ஜென்டூ நிறுவலுக்கான வழிமுறைகளைத் தொடரலாம். முன்னர் இந்த கையேடு மூன்று நிலை tarball களில் ஒன்றைக் கொண்டு எவ்வாறு நிறுவுவது என்பதை விவரித்திருக்கும். நிலை1 மற்றும் நிலை2 tarball கள் பெரும்பாலும் புதிய கட்டமைப்புகளுக்கான உள் பயன்பாடு மற்றும் இயக்கதொடக்க நடைமுறைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் ஜென்டூ இதை இப்பொழுது அளிப்பதில்லை.

நிலை3 tarball களை releases/hppa/autobuilds/ இல் ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வமான ஜென்டூ கண்ணாடிகள் மூலமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். நிலை கோப்புகள் அடிக்கடி புதுப்பிக்கப்படுவதால் இவை அதிகாரப்பூர்வமான நிறுவல் படங்களோடு சேர்த்து அளிக்கப்படுவதில்லை.

பதிவிறக்குதல்

ஊடகத்தை பெறுங்கள்

சிறும நிறுவல் குறுந்தகடுகள் ஜென்டூ லினக்ஸ் பயன்படுத்தும் முன்னிருப்பு நிறுவல் ஊடகமாகும். இது துவக்கக்கூடிய சிறிய அளவிலான ஜென்டூ லினக்ஸ் சூழலை தன்னுள் கொண்டுள்ளது. ஜென்டூவை நிறுவுவதற்குத் தேவையான எல்லா சரியான கருவிகளும் இந்த சூழலில் உள்ளது. இதை பதிவிறக்கப் பக்கத்தில்(பரிந்துரைக்கப்பட்டது) இருந்து கைமுறையாகவோ அல்லது ஏதேனும் ஒரு கண்ணாடிகளில் உள்ள ISO இடத்திற்குச் சென்றோ பதிவிறக்கிக்கொள்ளலாம்.

கண்ணாடி பக்கத்திலிருந்து பதிவிறக்கும்போது சிறும நிறுவல் குறுந்தகட்டை இங்குக் காணலாம்:

 1. releases/ அடைவிற்குச் செல்லவும்.
 2. இலக்க கட்டமைப்பிற்குத் தொடர்புடைய அடைவைத் தேர்வு செய்க (hppa/ போன்றவை).
 3. autobuilds/ அடைவைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. amd64 மற்றும் x86 கட்டமைப்பிற்கு, முறையே current-install-amd64-minimal/ அல்லது current-install-x86-minimal/ அடைவைத் தேர்வு செய்யவும். மற்ற எல்லா கட்டமைப்பிற்கும் current-iso/ என்னும் அடைவிற்குச் செல்லவும்.
குறிப்பு
சில இலக்க கட்டமைப்புகளான arm, mips மற்றும் s390 ஆகியவற்றிற்கு சிறும நிறுவல் குறுந்தகடு இருக்காது. இப்போதுள்ள சூழலில் இவ்வகையான இலக்கங்களுக்கான .iso கோப்புகளைக் கட்டமைப்பதை ஜென்டூ வெளியீடு பொறியியல் செயல்திட்டம் ஆதரிக்கவில்லை.

இந்த இடத்தில் உள்ள .iso என்னும் பின்னொட்டைக் கொண்ட கோப்பு நிறுவல் ஊடக கோப்பாகும். எடுத்துக்காட்டாக, பின்வரும் பட்டியலைக் காண்க:

CODE releases/hppa/autobuilds/current-iso/ இல் உள்ள பதிவிறக்கக்கூடிய கோப்புகளின் எடுத்துக்காட்டு பட்டியல்
[DIR] hardened/                     05-Dec-2014 01:42  -  
[  ] install-hppa-minimal-20141204.iso         04-Dec-2014 21:04 208M 
[  ] install-hppa-minimal-20141204.iso.CONTENTS    04-Dec-2014 21:04 3.0K 
[  ] install-hppa-minimal-20141204.iso.DIGESTS     04-Dec-2014 21:04 740  
[TXT] install-hppa-minimal-20141204.iso.DIGESTS.asc   05-Dec-2014 01:42 1.6K 
[  ] stage3-hppa-20141204.tar.bz2           04-Dec-2014 21:04 198M 
[  ] stage3-hppa-20141204.tar.bz2.CONTENTS       04-Dec-2014 21:04 4.6M 
[  ] stage3-hppa-20141204.tar.bz2.DIGESTS       04-Dec-2014 21:04 720  
[TXT] stage3-hppa-20141204.tar.bz2.DIGESTS.asc     05-Dec-2014 01:42 1.5K

மேலுள்ள எடுத்துக்காட்டில், install-hppa-minimal-20141204.iso என்னும் கோப்பு சிறும நிறுவல் குறுந்தகடு கோப்பாகும். இதோடு சேர்ந்து மற்ற பல கோப்புகளையும் காணலாம்:

 • .CONTENTS கோப்பில் நிறுவல் ஊடகத்தில் உள்ள எல்லா கோப்புகளின் பட்டியலைக் காணலாம். நிறுவல் ஊடகத்தைப் பதிவிறக்கும் முன் குறிப்பிட்ட நிலைப்பொருள் அல்லது இயக்கிகள் அதில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள இந்த கோப்பு உதவும்.
 • .DIGESTS கோப்பில் வெவ்வேறு தற்சார்பு முகவரியாக்க வடிவமைப்புகள்/வினைச்சரங்களில், ISO கோப்பிற்கான புலம் இருக்கும். இந்த கோப்பை பயன்படுத்தி பதிவிறக்கப்பட்ட ISO கோப்பில் ஏதேனும் பிழை உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
 • A .DIGESTS.asc கோப்பில் ISO விற்கான புலத்தோடு அந்த கோப்பிற்கான மறைகுறியீட்டு கையெப்பமும் இருக்கும். மேலுள்ள கோப்பை போல் இதைக் கொண்டு பதிவிறக்கப்பட்ட ISO கோப்பில் ஏதேனும் பிழை உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், அதோடு பதிவிறக்கப்பட்ட கோப்பு ஜென்டூ வெளியீடு பொறியியல் குழுவிடமிருந்து தான் பெறப்பட்டது ஆகையால் இது எங்கும் பிரிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யவும் முடியும்.

இப்போதைக்கு இந்த இடத்தில் உள்ள மற்ற கோப்புகளைத் தவிர்க்கவும் - நிறுவல் மேற்கொண்டு செல்லும்போது இதைப்பற்றி மேலும் காணலாம். .iso கோப்பை பதிவிறக்கவும். பதிவிறக்கியதைச் சரிபார்க்க வேண்டுமென்றால் .iso கோப்பிற்கான .DIGESTS.asc கோப்பையும் சேர்த்துப் பதிவிறக்கவும். .CONTENTS கோப்பை பற்றி மேற்கொண்டு வரும் நிறுவல் வழிமுறைகளில் குறிப்பிடப்போவதில்லை என்பதால் இதைப் பதிவிறக்க வேண்டாம். மேலும் .DIGESTS.asc கோப்பில் உள்ள விவரங்களோடு கூடுதலாக அதன்மேல் ஒரு கையொப்பத்தோடு .DIGESTS கோப்பில் இருக்கும்.

பதிவிறக்கிய கோப்புகளை சரிபார்த்தல்

குறிப்பு
இந்த படி விரும்பினால் மேற்கொள்ளலாமே தவிர ஜென்டூ லினக்ஸ் நிறுவலுக்கு இது கட்டாயத்தேவை இல்லை. ஆயினும் இது பதிவிறக்கப்பட்ட கோப்பு பழுதாகியுள்ளதா என்பதை அறியப் பயன்படுவதாலும், ஜென்டூ உள்கட்டமைப்பு குழு இதை அளித்துள்ளதாலும், இது பரிந்துரைக்கப்படுகிறது.

.DIGESTS மற்றும் .DIGESTS.asc கோப்புகளின் மூலம், சரியான கருவிகளைப் பயன்படுத்தி ISO கோப்பின் ஏற்புடைமையை உறுதிப்படுத்தலாம். சரிபார்த்தல் இரண்டு படிநிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது:

 1. முதலில் நிறுவல் கோப்பு ஜென்டூ வெளியீடு பொறியியல் குழு மூலமாகத் தான் அளிக்கப்பட்டது என்பதை உறுதிசெய்ய மறைகுறியீட்டு கையொப்பம் சரிபார்க்கப்படுகிறது
 2. மறைகுறியீடு ஏற்புடைமை உறுதிப்படுத்தப்பட்ட பின், பதிவிறக்கப்பட்ட கோப்பு பழுதாகவில்லை என்பதை உறுதிசெய்ய சரிகாண்தொகை சரிபார்க்கப்படுகிறது

மைக்கிரோசாஃப்ட் Windows மூலம் சரிபார்த்தல்

மைக்கிரோசாஃப்ட் Windows முறைமையில் சரிகாண்தொகை மற்றும் மறைகுறியீட்டு கையொப்பங்களை சரிபார்ப்பதற்கான சரியான கருவி தொகுப்புகள் நிறுவப்பட்டிருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

முதலில் மறைகுறியீட்டு கையெப்பங்களைச் சரிபார்ப்பதற்கு GPG4Win போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம். இதை நிறுவிய பின்னர் ஜென்டூ வெளியீடு பொறியியல் குழுவிடமிருந்து பொது சாவிகள் இறக்குமதி செய்ய வேண்டும். சாவிகளின் பட்டியல் கையெப்பங்கள் பக்கத்தில் கிடைக்கும். இறக்குமதி செய்தவுடன், பயனர் .DIGESTS.asc கோப்பில் உள்ள கையெப்பத்தைச் சரிபார்க்கலாம்.

முக்கியமானது
இது .DIGESTS.asc கோப்பு சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கிறதே அன்றி .DIGESTS கோப்பை சரிபார்ப்பதில்லை. மேலும், சரிகாண்தொகையும் .DIGESTS.asc கோப்பில் உள்ள மதிப்புகளுக்கு எதிராகச் சரிபார்க்கப்பட வேண்டும் என்பதால் மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளும் .DIGESTS.asc கோப்பை பதிவிறக்குவதைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றது.

சரிகாண்தொகையை சரிபார்ப்பதற்கு Hashcalc செயலியை பயன்படுத்தலாம். இதற்குப் பல மாற்றுகளும் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் இந்த கருவிகள் பயனருக்குக் கணக்கிடப்பட்ட சரிகாண்தொகையை காட்டும். இதைப் பயனர் .DIGESTS.asc கோப்பினுள் உள்ள மதிப்போடு ஒத்துப் போகிறதா என்பதைச் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

லினக்ஸ் மூலம் சரிபார்த்தல்

லினக்ஸ் முறைமைகளில் மறைகுறியீட்டு கையொப்பத்தைச் சரிபார்க்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறை app-crypt/gnupg என்னும் மென்பொருளைப் பயன்படுத்துவதாகும். இந்த தொகுப்பை நிறுவியவுடன், பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தி .DIGESTS.asc கோப்பிற்கான மறைகுறியீட்டு கையொப்பத்தைச் சரிபார்க்கலாம்.

முதலில் கையெப்பங்கள் பக்கத்தில் கிடைக்கும் சரியான சாவிகள் தொப்புகளை பதிவிறக்கவும்:

user $gpg --keyserver hkps://keys.gentoo.org --recv-keys 0xBB572E0E2D182910
gpg: requesting key 0xBB572E0E2D182910 from hkp server pool.sks-keyservers.net
gpg: key 0xBB572E0E2D182910: "Gentoo Linux Release Engineering (Automated Weekly Release Key) <releng@gentoo.org>" 1 new signature
gpg: 3 marginal(s) needed, 1 complete(s) needed, classic trust model
gpg: depth: 0 valid:  3 signed: 20 trust: 0-, 0q, 0n, 0m, 0f, 3u
gpg: depth: 1 valid: 20 signed: 12 trust: 9-, 0q, 0n, 9m, 2f, 0u
gpg: next trustdb check due at 2018-09-15
gpg: Total number processed: 1
gpg:     new signatures: 1

இதற்கு பதிலாக WKD ஐ பயன்படுத்தியும் சாவியை பதிவிறக்கலாம்:

--2019-04-19 20:46:32-- https://gentoo.org/.well-known/openpgpkey/hu/wtktzo4gyuhzu8a4z5fdj3fgmr1u6tob?l=releng
Resolving gentoo.org (gentoo.org)... 89.16.167.134
Connecting to gentoo.org (gentoo.org)|89.16.167.134|:443... connected.
HTTP request sent, awaiting response... 200 OK
Length: 35444 (35K) [application/octet-stream]
Saving to: 'STDOUT'
 
   0K .......... .......... .......... ....         100% 11.9M=0.003s
 
2019-04-19 20:46:32 (11.9 MB/s) - written to stdout [35444/35444]
 
gpg: key 9E6438C817072058: 84 signatures not checked due to missing keys
gpg: /tmp/test2/trustdb.gpg: trustdb created
gpg: key 9E6438C817072058: public key "Gentoo Linux Release Engineering (Gentoo Linux Release Signing Key) <releng@gentoo.org>" imported
gpg: key BB572E0E2D182910: 12 signatures not checked due to missing keys
gpg: key BB572E0E2D182910: 1 bad signature
gpg: key BB572E0E2D182910: public key "Gentoo Linux Release Engineering (Automated Weekly Release Key) <releng@gentoo.org>" imported
gpg: Total number processed: 2
gpg:        imported: 2
gpg: no ultimately trusted keys found

அடுத்ததாக .DIGESTS.asc கோப்பில் உள்ள மறைகுறியீட்டு கையெப்பத்தை சரிபார்க்கவும்:

user $gpg --verify install-hppa-minimal-20141204.iso.DIGESTS.asc
gpg: Signature made Fri 05 Dec 2014 02:42:44 AM CET
gpg:        using RSA key 0xBB572E0E2D182910
gpg: Good signature from "Gentoo Linux Release Engineering (Automated Weekly Release Key) <releng@gentoo.org>" [unknown]
gpg: WARNING: This key is not certified with a trusted signature!
gpg:     There is no indication that the signature belongs to the owner.
Primary key fingerprint: 13EB BDBE DE7A 1277 5DFD B1BA BB57 2E0E 2D18 2910

எல்லாம் சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, இதில் காண்பிக்கும் கைரேகையும் ஜென்டூ கையெப்பங்கள் பக்கத்தில் உள்ள கைரேகையும் ஒன்றா என்பதைச் சரிபார்க்கவும்.

மறைகுறியீட்டு கையொப்பத்தைச் சரிபார்த்த பின், பதிவிறக்கப்பட்ட ISO கோப்பு பழுதாகாமல் உள்ளதா என்பதை உறுதிசெய்ய சரிகாண்தொகையை சரிபார்க்கவும். .DIGESTS.asc கோப்பு பலவித தற்சார்பு முகவரியாக்க வழிமுறைகளைக் கொண்டுள்ளதால், இந்த கோப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள சரிகாண்தொகையை பார்ப்பது சரியான ஒன்றைச் சரிபார்ப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, SHA512 சரிகாண்தொகையை பெற:

user $grep -A 1 -i sha512 install-hppa-minimal-20141204.iso.DIGESTS.asc
# SHA512 HASH
364d32c4f8420605f8a9fa3a0fc55864d5b0d1af11aa62b7a4d4699a427e5144b2d918225dfb7c5dec8d3f0fe2cddb7cc306da6f0cef4f01abec33eec74f3024 install-hppa-minimal-20141204.iso
--
# SHA512 HASH
0719a8954dc7432750de2e3076c8b843a2c79f5e60defe43fcca8c32ab26681dfb9898b102e211174a895ff4c8c41ddd9e9a00ad6434d36c68d74bd02f19b57f install-hppa-minimal-20141204.iso.CONTENTS

மேலுள்ள வெளியீட்டில், install-hppa-minimal-20141204.iso கோப்பிற்கு ஒன்றும் அதற்குத் துணையான .CONTENTS என்னும் கோப்பிற்கு ஒன்றும் ஆக மொத்தம் இரண்டு SHA512 சரிகாண்தொகைகள் காட்டப்பட்டுள்ளது. முதலில் கூறிய சரிகாண்தொகைதான் கவனத்திற்குரியது ஏனெனில் இது கணக்கிடப்பட்ட SHA512 சரிகாண்தொகையோடு ஒப்பிடப்படும். இதை உற்பத்தி செய்ய:

user $sha512sum install-hppa-minimal-20141204.iso
364d32c4f8420605f8a9fa3a0fc55864d5b0d1af11aa62b7a4d4699a427e5144b2d918225dfb7c5dec8d3f0fe2cddb7cc306da6f0cef4f01abec33eec74f3024 install-hppa-minimal-20141204.iso

இரண்டு சரிகாண்தொகைகளும் பொருந்துவதால், கோப்பு பழுதாகவில்லை. நிறுவலைத் தொடரலாம்.

வட்டில் எழுதல்

வெறும் பதிவிறக்கிய ISO கோப்பை கொண்டு ஜென்டூ நிறுவலைத் தொடங்க முடியாது. ISO கோப்பில் உள்ள முழு தகவல்களும் ஒரு குறுந்தகட்டில் துவங்குவதற்காக எழுத வேண்டும். துவக்க வேண்டிய குறுந்தகட்டில் ISO கோப்பை எழுதாமல் அதில் உள்ள தகவல்களை எழுத வேண்டும். இதைச் செய்யக் கீழே சில பொதுவான முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. கூடுதல் அறிவுறுத்தல்களுக்கு ISO கோப்பை எழுதல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்னும் பக்கத்தைக் காணவும்.

மைக்குரோசாஃப்ட் Windows 7 அல்லது அதற்கு மேல் உள்ளவற்றின் மூலம் குறுந்தகட்டில் எழுதல்

மைக்குரோசாஃப்ட் Windows 7 அல்லது அதற்கு மேல் உள்ள பதிப்புகளில் மூன்றாவதாள் சார்ந்த மென்பொருட்களின் துணையின்றி ஒரு ஒளியியலூடகத்தை ஏற்றி ISO படத்தை எழுத முடியும். இதற்கு முதலில் எழுதக்கூடிய தகட்டை சொருகி ISO கோப்பு இருக்கும் இடத்திற்கு சென்று Windows Explorer இல் உள்ள அந்த கோப்பின் மேல் வலச் சொடுக்கு செய்து பின் Burn Image என்பதை தேர்வு செய்யவும்.

லினக்ஸின் மூலம் குறுந்தகட்டில் எழுதல்

லினக்ஸில் app-cdr/cdrtools தொகுப்பில் உள்ள cdrecord என்னும் கருவியின் உதவியோடு கொண்டு ISO கோப்புகளை எழுதலாம்.

ISO கோப்பை /dev/sr0 என்னும் குறுந்தகடு சாதனத்தில் எழுத (இதுதான் இந்த முறைமையில் உள்ள முதல் குறுந்தகடு சாதனம் - தேவைப்பட்டால் சரியான சாதன கோப்பிற்கு மாற்றவும்):

user $cdrecord dev=/dev/sr0 install-hppa-minimal-20141204.iso

வரைகலைப் பணிச்சூழலை விரும்பும் பயனர்கள் kde-apps/k3b தொகுப்பின் ஒரு பகுதியான K3B ஐ பயன்படுத்தலாம். K3B யில் Tools ற்கு சென்று Burn CD Image ஐ பயன்படுத்தவும்.

துவக்குதல்

நிறுவல் குறுந்தகட்டை துவக்குதல்

Note
நிறுவல் குறுந்தகடு அல்லது வேறு ஏதாவது ஊடகத்தைத் துவக்குவதில் இடர்பாடு ஏற்பட்டால், PA-RISC லினக்ஸ் துவக்குதலை எவ்வாறு செய்வது என்னும் பக்கத்திற்குச் சென்று படிக்கவும்.

HPPA முறைமையைத் துவக்கவும். துவக்கச் செயலின்போது, பின்வருவதை ஒத்த செய்தி திரையில் தோன்றும்:

CODE HPPA துவக்க செய்தி
Searching for Potential Boot Devices.
To terminate search, press and hold the ESCAPE key.

இந்த செய்தி தோன்றும்போது, விருப்பத்தேர்வு பட்டி தோன்றும் வரை Esc விசையை அழுத்திப் பிடித்திருக்கவும். இதற்குச் சற்று நேரம் எடுக்கும், பொறுமையாகக் காத்திருக்கவும். இயல்பாக, BOOT_ADMIN முனையத்தினுள் நுழையும். விருப்பத்தேர்வு பட்டி தோன்றும்போது BOOT_ADMIN முனையத்தினுள் நுழைய Enter Boot Administration mode ஐ தேர்வு செய்யவும். இது '>' எனத் தொடங்கும் கட்டளை தூண்டியை அளிக்கும்.

ஜென்டூ நிறுவல் குறுந்தகட்டை CD-ROM இல் வைக்கவும். CD-ROM இயக்ககத்தின் SCSI ID தெரியாத நிலையில், search கட்டளையைச் செயல்படுத்தும்போது PA-RISC நிலையம் அதனைத் தேடும்.

>search
Searching for Devices with Bootable Media.
To terminate search, please press and hold the ESCAPE key.

இப்போது PA-RISC நிலையம் கிடைக்கும் எல்லா துவக்க ஊடகங்களையும் காட்டும். இந்த கட்டளையின் எடுத்துக்காட்டு விளைவு இதோ:

CODE கிடைக்கும் துவக்க ஊடகங்கள்
சாதன தேர்வு      சாதனத்தின் பாதை     சாதனத்தின் வகை மற்றும் பயன்கூறுகள்
---------------------------------------------------------------------------
 
P0          scsi.5.0        TOSHIBA CD-ROM XM-3301TA
                         IPL
P1          scsi.2.0        COMPAQ ST32550N
                         IPL
P2          lan.0010a7-06d1b6.3.6  server
                         IPL

CD-ROM ஐ துவக்க உடன் செல்லும் சாதன பாதை தேவை. எடுத்துக்காட்டாக, மேலுள்ள எடுத்துக்காட்டில் உள்ள TOSHIBA CD-ROM இல் இருந்து துவக்க, பின்வரும் கட்டளையை இடவும்:

>boot scsi.5.0 ipl
Trying scsi.5.0

ipl (தொடக்க நிரல் ஏற்றி) உறைசொல்லானது palo (PA-RISC துவக்க ஏற்றி) விடம் ஊடாடும் பயன்முறைக்குள் நுழையச் சொல்கிறது. இது கர்னல் துவக்க அளவுருக்கள் போன்றவற்றை மாற்ற அனுமதிக்கும்.

துவக்கச் செயல் வெற்றியடைந்தவுடன், palo ஊடாடும் பயன்முறையைத் தொடங்கும்:

CODE PALO ஊடாடும் பயன்முறை
Boot path initialized.
Attempting to load IPL.
 
 
HARD Booted.
palo ipl 1.5 root@hope Sat Apr 23 18:06:47 CEST 2005
 
Boot image contains:
  0/vmlinux32 6241293 bytes @ 0x3904000
  0/vmlinux64 8352719 bytes @ 0x3ef8000
  0/ramdisk 1007589 bytes @ 0x105800
 
Information: No console specified on kernel command line. This is normal.
PALO will choose the console currently used by firmware (serial).Current command line:
0/vmlinux initrd=initrd TERM=linux root=/dev/ram0 init=/linuxrc cdroot looptype=squashfs loop=/livecd.squashfs hda=scsi console=ttyS0
 0: 0/vmlinux
 1: initrd=initrd
 2: TERM=linux
 3: root=/dev/ram0
 4: init=/linuxrc
 5: cdroot
 6: looptype=squashfs
 7: loop=/livecd.squashfs
 8: hda=scsi
 9: console=ttyS0
 
<#>  edit the numbered field
'b'  boot with this command line
'r'  restore command line
'l'  list dir

இந்த அளவுருக்கள் பெரும்பாலான சூழல்களில் பொருந்தும்.

கூடுதல் தனிச்சிறப்புகள் தேவைப்பட்டால், கட்டளை வரியின் இறுதியில் பொருத்தமான உறைசொற்களை சேர்க்கவும். உறைசொல்லை சேர்ப்பதற்கு, கடைசி புலத்தைத் திருத்தி ஒரு இடைவெளி விட்டு உங்கள் உறைசொல்லை இடவும். இந்நாள்வரை செயல்படுத்தப்பட்டுள்ள உறைசொற்கள் cdcache மற்றும் noload மட்டுமே. cdcache ஆனது நிறுவல் குறுந்தகடு இடம் RAM இல் ஏறுமாறு சொல்கிறது, இதன்மூலம் குறுந்தகட்டைப் பின்னர் இறக்கிக்கொள்ளலாம். noload=கூறு1[,கூறு2[,...]] ஆனது குறிப்பிட்ட கூறுகள் ஏறுவதை வெளிப்படையாக முடக்குகிறது.

(or 'b' to boot with this command line)?9
console=ttyS0 hdb=scsi

இப்போது கர்னல் துவக்க அளவுருக்கள் அமைக்கப்பட்டுவிட்டதால், இதைத் துவக்கவும்.

(or 'b' to boot with this command line)?b

இது இப்போதைய முனையத்தில் வேர் ("#") தூண்டியை விளைவிக்கும். Alt+F2, Alt+F3 மற்றும் Alt+F4 விசை கூட்டுகளை அழுத்துவதன் மூலம் மற்ற முனையங்களுக்கு மாறிக் கொள்ளலாம். முதல் முனையத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு Alt+F1 ஐ அழுத்தவும்.


கூடுதல் வன்பொருள் உள்ளமைவு

நிறுவல் ஊடகம் துவங்கும்போது, எல்லா வன்பொருள் சாதனங்களையும் கண்டறிந்து, அதற்கான ஆதரவை வழங்கும் கர்னல் கூறுகளை ஏற்ற முயலும். பெரும்பாலான சூழல்களில் இது மிகவும் சிறப்பாகவே வேளை செய்கிறது என்றாலும் சில நேரங்களில் முறைமைக்குத் தேவையான கர்னல் கூறுகளைத் தானியக்க-ஏற்றம் செய்யாமல் போகலாம். PCI தானியக்க-கண்டறிதல் சில முறைமையின் வன்பொருட்களை மறந்துவிட்டால், அதற்கான கர்னல் கூறுகளை கைமுறையாகத்தான் ஏற்ற வேண்டும்.

அடுத்த எடுத்துக்காட்டில் 8139too கூறு (குறிப்பிட்ட வகையான வலையமைப்பு இடைமுகங்களை ஆதரிக்கிறது) வை ஏற்றுகிறது:

root #modprobe 8139too

விரும்பினால்: பயனர் கணக்குகள்

மற்றவர்கள் நிறுவல் சூழலை அணுக வேண்டிய தேவை இருந்தால் அல்லது நிறுவல் ஊடகத்தில் வேர்-அல்லாத பயனராகக் கட்டளைகளை இயக்க வேண்டிய தேவை இருந்தால் (பாதுகாப்பு காரணங்களுக்காக வேர் உரிமை இல்லாமல் irssi இல் அரட்டை அடிப்பது போன்றவை), கூடுதலாக ஒரு பயனர் கணக்கை உருவாக்கி வேர் கடவுச்சொல்லை வலுவானதாக அமைக்க வேண்டும்.

வேர் கடவுச்சொல்லை மாற்ற, passwd கட்டளையை பயன்படுத்தவும்:

root #passwd
New password: (புதிய கடவுச்சொல்லை இடுக)
Re-enter password: (புதிய கடவுச்சொல்லை மீண்டும் இடுக)

ஒரு பயனர் கணக்கை உருவாக்க, முதலில் அவரின் விவரங்களையும் பின் அவர் கணக்கிற்கான கடவுச்சொல்லையும் இடவும். இதை useradd மற்றும் passwd என்னும் கட்டளைகளைக் கொண்டு செய்து முடிக்கலாம்.

பின்வரும் எடுத்துக்காட்டில் john என்னும் பயனர் உருவாக்கப்படுகிறார்:

root #useradd -m -G users john
root #passwd john
New password: (john ற்கான கடவுச்சொல்லை இடுக)
Re-enter password: (இட்ட கடவுச்சொல்லை மீண்டும் இடுக)

தற்போதுள்ள வேர் பயனரில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட பயனர் கணக்கிற்கு மாற, su கட்டளையை பயன்படுத்தவும்:

root #su - john

விரும்பினால்: நிறுவும்போது நிறுவல் ஆவணங்களை பார்க்க

TTY க்கள்

ஜென்டூ கையேட்டை நிறுவலின் போது பார்க்க, முதலில் மேற்கூறியவாறு ஒரு பயனர் கணக்கை உருவாக்கவும். பின் புதிய முனையத்திற்கு Alt+F2 என்னும் விசை சேர்க்கையை அழுத்தவும்.

நிறுவலின் போது, இணைய இணைப்பு வேளை செய்யத் துடங்கியவுடன் ஜென்டூ கையேட்டில் உலாவ links கட்டளையைப் பயன்படுத்தலாம்.

user $links https://wiki.gentoo.org/wiki/Handbook:HPPA/ta

மூல முனையத்திற்கு பின்செல்ல, Alt+F1 கூட்டுவிசையை அழுத்தவும்.

GNU திரை

திரை (Screen) பயன்பாடு முன்னிருப்பாக அதிகாரப்பூர்வமான ஜென்டூ நிறுவல் ஊடகத்தில் நிறுவப்பட்டுள்ளது. முன்னர் கூறியதுபோல் நிறுவல் வழிமுறைகளைப் பார்ப்பதற்குப் பல TTY களை பயன்படுத்துவதை விட screen முறையைக் கொண்டு பிரிந்த திரைகளாகக் காண்பதை சில கைதேர்ந்த லினக்ஸ் ஆர்வலர்கள் பயனுள்ளதாகக் கருதுகின்றனர்.

விரும்பினால்: SSH மறைநிரலை தொடங்குதல்

மற்ற பயனர்கள் நிறுவலின் போது முறைமையை அணுகுவதை அனுமதிப்பதற்கு (ஒருவேளை நிறுவலின்போது தேவைப்படும் துணைக்கு அல்லது தொலைநிலையாகச் செய்ய), ஒரு பயனர் கணக்கு உருவாக்கப்பட்டு (ஆவணத்தில் முன்னர் கூறியது போல்) SSH மறைநிரல் துவக்கப்பட்டிருக்க வேண்டும்.

OpenRC init இல் SSH மறைநிரலை தொடங்க, பின்வரும் கட்டளையை பயன்படுத்தவும்:

root #rc-service sshd start
குறிப்பு
பயனர் தனது முறைமையில் உள்நுழைந்தவுடன், அதற்கான புரவலன் சாவி உறுதிப்படுத்தப்பட வேண்டும் (கைரேகை என அழைக்கப்படுவதன் மூலம்) என்னும் செய்தியைக் காணப்படும். இது பொதுவாக முதன்முறையாக SSH சேவையகத்தோடு இணைக்கப்படும்போது ஏற்படலாம். அதே முறைமையெல்லாம் நிறுவப்பட்டு, புதிதாக நிறுவப்பட்ட முறைமையில் எவரேனும் உள்நுழைந்தால், SSH பயனர் புரவலன் சாவி மாற்றப்பட்டதாக எச்சரிப்பார். இதற்குக் காரணம் பயனர் இப்போது முற்றிலும் வேறு SSH சேவையகத்தில் (நிறுவல் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிகழ் சூழல் இல்லாமல் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜென்டூ முறைமையில்) உள்நுழைந்துள்ளார். பயனர் முறைமையில் புரவலன் சாவியை மாற்ற அப்போது திரையில் தெரியும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

sshd ஐ பயன்படுத்த, வலையமைப்பு முறையாக வேளை செய்ய வேண்டும். அடுத்து வலையமைப்பை உள்ளமைத்தல் என்னும் பகுதியில் தொடரவும்.