Translations:Handbook:Parts/11/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
கோப்புகள் மற்றும் அடைவுகள்
Portage பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ள, முதலில் அது கோப்புகள் மற்றும் தரவுகளை எங்குச் சேமிக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும்.
மாறிகள்
உள்ளமைவுக் கோப்பில் சில விருப்பத்தேர்வுகளை அமைப்பது மூலமாகவும், சூழல் மாறிகளாகவும், Portage ஐ முழுமையாக உள்ளமைக்க முடியும்.
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
சென்டூ மென்பொருட்களை நிலைப்புத்தன்மை மற்றும் கட்டமைப்புக்கான ஆதரவு ஆகியவற்றை பொருத்து வெவ்வேறு கிளைகளாகப் பிரித்தளிக்கிறது. "மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்" என்னும் பகுதி இவ்வகையான கிளைகளை எவ்வாறு உள்ளமைப்பது மற்றும் தனித்தனியாக இவற்றை எவ்வாறு மேலெழுதுவது என்பதைப் பற்றி விவரிக்கிறது.
கூடுதல் கருவிகள்
சென்டூ பயன்பாட்டை இன்னும் மேம்படுத்துவதற்கான சில கூடுதல் கருவிகளை Portage கொண்டுள்ளது. dispatch-conf மற்றும் பல கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்துகொள்ள இதைப் படிக்கவும்.
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
தனிப்பயன் தொகுப்பு கருவூலத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தேவையான தொகுப்புகளை எவ்வாறு ஒத்திசைப்பது, எவ்வாறு தொகுப்புகளை உட்செலுத்துவது போன்றவற்றுக்கான உதவிகுறிப்புகளை இந்த பகுதி உங்களுக்கு அளிக்கிறது.
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
காலங்கள் செல்ல செல்ல, Portage தன்னை பரிணமித்துக் கொண்டு முதிர்ச்சியடைகிறது. புதிய தனிச்சிறப்புகள் தொடர்ந்து சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலும் அவை மிகவும் அனுபவமுள்ள பயனர்களுக்கே பயனளிக்கிறது. இந்த பகுதியில் Portage இன் சில புதிய தனிச்சிறப்புகளைக் காணலாம்.