கையேடு:பாகங்கள்/நிறுவல்/கருநிரல்/பகிர்ந்தளிப்பு-கருநிரல்
பகிர்ந்தளிப்பு கருநிரல்கள்
பகிர்ந்தளிப்பு கருநிரல்கள் கருநிரலை கட்டவிழ்த்து உள்ளமைத்து தொகுத்து பின் நிறுவும் மொத்த செயல்களையும் செய்யும் ebuild களாகும். @world இற்றைப்படுத்தலின் ஒரு பாகமாக கருநிரலை புதிய பதிப்பிற்குத் தொகுப்பு மேலாளர் இற்றைப்படுத்துவது இந்த வழிமுறையால் விளையும் முதன்மை பயனாகும். இதற்கு அதிமாக ஈடுபட தேவையில்லை. emerge கட்டளையை இயக்கினால் போதும். பகிர்ந்தளிப்பு கருநிரல்கள் முன்னிருப்பாகப் பெரும்பான்மையான வன்பொருட்களை ஆதரிக்கும் உள்ளமைவை கொண்டுள்ளது. இருப்பினும் இவற்றைத் தனிப்பயனாக்க savedconfig மற்றும் config துண்டுகளைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு கருநிரல் உள்ளமைவை திருத்தியமைத்தல் பற்றிய செயல்திட்ட பக்கத்தை காணவும்.
சரியான installkernel தொகுப்பை நிறுவுதல்
பகிர்ந்தளிப்பு கருநிரல்களை பயன்படுத்தத் துவங்குவதற்கு முன் முறைமைக்கான சரியான installkernel தொகுப்பு நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும். systemd-boot (முன்பு gummiboot) ஐ துவக்கஏற்றியாக பயன்படுத்தினால் இவ்வாறு நிறுவவும்:
root #
emerge --ask sys-kernel/installkernel-systemd-boot
மரபுவழி /boot இடுவெளியை (எடுத்துக்காட்டாக GRUB, LILO முதலியவை) பயன்படுத்தினால் முன்னிருப்பாக gentoo திரிபு நிறுவப்பட்டுவிடும். இருப்பினும் ஏதேனும் ஐயம் இருந்தால் திரிபை வெளிப்படையாகக் குறிப்பிட்டு நிறுவவும்:
root #
emerge --ask sys-kernel/installkernel-gentoo
பகிர்ந்தளிப்பு கருநிரலை நிறுவுதல்
மூலத்திலிருந்து சென்டூ ஒட்டுகளுடன் கருநிரலை உருவாக்க இதைச் செய்யவும்:
root #
emerge --ask sys-kernel/gentoo-kernel
கருநிரலை மூலங்களை உள்ளூரில் தொகுக்க விரும்பாத முறைமை செயலாட்சியர்கள் இதற்குப் பதிலாக முன்-தொகுக்கப்பட்ட கருநிரல் படங்களைப் பயன்படுத்தலாம்:
root #
emerge --ask sys-kernel/gentoo-kernel-bin
இற்றைப்படுத்தலும் சுத்தம் செய்தலும்
கருநிரல் நிறுவப்பட்டதும் இனி வரும் காலங்களில் தொகுப்பு மேலாளரானது இதன் புதிய பதிப்புகளுக்குத் தானியக்கமாக இற்றைப்படுத்தும். சுத்தம் செய்யுமாறு கோரும்வரை முந்தைய பதிப்புகளைத் தொகுப்பு மேலாளர் வைத்திருக்கும். வட்டு வெற்றிடத்தை அதிகப்படுத்த அவ்வப்போது emerge ஐ --depclean
விருப்பத்தேர்வுடன் இயக்கவும்:
root #
emerge --depclean
இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட பழைய கருநிரல் பதிப்பை மட்டும் நீக்குவதற்கு:
root #
emerge --prune sys-kernel/gentoo-kernel sys-kernel/gentoo-kernel-bin
நிறுவலுக்கு/இற்றைப்படுத்தலுக்கு பின் செய்ய வேண்டிய பணிகள்
பகிர்ந்தளிப்பு கருநிரலானது மற்ற தொகுப்புகளால் நிறுவப்பட்டுள்ள கருநிரல் கூறுகளை மீள் உருவாக்கும் ஆற்றல் கொண்டவை. linux-mod.eclass ஆனது dist-kernel
USE கொடி ஒன்றை அளிக்கிறது. இது virtual/dist-kernel இனுள் துணை செருகுவாய் சார்புநிலையைக் கட்டுப்படுத்துகிறது.
sys-fs/zfs sys-fs/zfs-kmod போன்ற தொகுப்புகளில் இந்த USE கொடியைச் செயல்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு புதிய கருநிரல் இற்றைப்படுத்தலின்போது தானியக்கமாக இதை மீள் உருவாக்கித் தேவைப்பட்டால் initramfs ஐ மீண்டும் உற்பத்தி செய்யும்.
initramfs ஐ கைமுறையாக மீள் உருவாக்கல்
தேவைப்பட்டால் கருநிரல் இற்றைப்படுத்தலுக்குப் பின் கைமுறையாக மீள் உருவாக்கத்தைத் தூண்ட இதை இயக்கவும்:
root #
emerge --ask @module-rebuild
துவக்கத்தில் கருநிரல் கூறுகள் (எ.கா. ZFS) ஏதேனும் தேவைப்பட்டால் இந்த கட்டளையைக் கொண்டு initramfs ஐ மீள் உருவாக்கவும்:
root #
emerge --config sys-kernel/gentoo-kernel
root #
emerge --config sys-kernel/gentoo-kernel-bin