கையேடு:Alpha/நிறுவல்/முறைமை
கோப்பு முறைமை தகவல்
fstab ஐ பற்றி
லினக்ஸின் கீழ், முறைமையால் பயன்படுத்தப்படும் எல்லா பகிர்வுகளும் /etc/fstab என்னும் கோப்பில் பட்டியலிட வேண்டும். இந்த கோப்பானது பகிர்வுகளுக்கான ஏற்றப்புள்ளி (கோப்பு முறைமை கட்டுமானத்தில் இதைக் காணலாம்), எவ்வாறு இவை ஏற்றப்பட வேண்டும் மற்றும் எவ்வகையான சிறப்பு விருப்பத்தேர்வுகளைக் கொண்டு ஏற்றப்பட வேண்டும் (தானியக்கமாகவா, அல்லது கைமுறையாகவா, பயனர்கள் பகிர்வுகளை ஏற்றலாமா வேண்டாமா முதலியவை) என்பதைக் கொண்டுள்ளது.
fstab கோப்பை உருவாக்கல்
/etc/fstab கோப்பு அட்டவணை போல் உள்ள தொடரியலைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு வரியும் வெள்ளை இடைவெளியால் பிரிக்கப்பட்ட ஆறு புலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு புலமும் அதன் சுய பொருளைக் கொண்டுள்ளது:
- முதல் புலம் ஏற்றப்பட வேண்டிய சிறப்புத் தொகுதி சாதனம் அல்லது தொலைநிலை கோப்பு முறைமையைக் காண்பிக்கிறது. சாதன கோப்பிற்கான பாதை, கோப்பு முறைமை முத்திரைகள் மற்றும் UUID க்கள், பகிர்வு முத்திரைகள் மற்றும் UUID க்கள் முதலிய சிறப்புத் தொகுதி சாதன கணுக்களுக்கான பலவகையான சாதன அடையாளங்காட்டிகள் கிடைக்கின்றன.
- இரண்டாம் புலம் பகிர்வு ஏற்றப்பட வேண்டிய ஏற்றுப்புள்ளியைக் காண்பிக்கிறது.
- மூன்றாவது புலம் பகிர்வால் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமையைக் காண்பிக்கிறது.
- நான்காவது புலம் mount கட்டளை பகிர்வை ஏற்ற விரும்பும்போது பயன்படுத்தும் ஏற்ற விருப்பத்தேர்வுகளைக் காண்பிக்கிறது. ஒவ்வொரு கோப்பு முறைமையும் அதன் சுய ஏற்ற விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துவதால், முழு பட்டியலுக்கு mount இன் கைமுறை பக்கத்தை (man mount) காணப் பயனர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பல ஏற்ற விருப்பத்தேர்வுகளைக் காற்புள்ளியால் பிரித்து அளிக்கலாம்.
- ஐந்தாவது புலம் பகிர்வைக் கொட்டிவைக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கக் கொட்டிடம் பயன்படுத்துகிறது. இது பொதுவாக 0 (சுழியம்) என விடப்படும்.
- ஆறாவது புலம் முறைமை முறையாக இடைநிறுத்தப்படாத சூழலில் எந்த வரிசையில் கோப்பு முறைமைகள் சரிபார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க fsck பயன்படுத்துகிறது. வேர் கோப்பு முறைமை 1 எனவும் மற்றவை 2 எனவும் இருக்கும் (முறைமை சரிபார்க்கத் தேவையில்லை என்றால் 0 எனக் குறிப்பிடலாம்)
ஜென்டூவால் அளிக்கப்பட்ட முன்னிருப்பு /etc/fstab கோப்பு ஏற்கத்தக்க fstab கோப்பு இல்லையென்றாலும் ஒருவகை வார்ப்புருவாகக் கருதலாம்.
root #
nano -w /etc/fstab
மீதமுள்ள உரையில், நாம் முன்னிருப்பு /dev/sd* தொகுதி சாதன கோப்புகளைப் பகிர்வுகளாகப் பயன்படுத்துவோம்.
கோப்புமுறைமை முத்திரைகள் மற்றும் UUID க்கள்
MBR (BIOS) மற்றும் GPT ஆகிய இரண்டும் கோப்பு முறைமை முத்திரைகள் மற்றும் கோப்பு முறைமை UUID களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளன. தொகுப்பு சாதனங்களை mount கட்டளை மூலம் தேடி ஏற்றுவதற்கு மாற்றாக இந்த பண்புகளை /etc/fstab என்னும் கோப்பில் வரையறுக்கலாம். கோப்பு முறைமையின் முத்திரைகள் மற்றும் UUID கள் முறையே LABEL மற்றும் UUID என்னும் முன்னொட்டு மூலம் அடையாளங்காட்டப்படுகிறது. இதை blkid கட்டளையைக் கொண்டு காணலாம்.
root #
blkid
பகிர்வில் உள்ள கோப்பு முறைமை துடைத்தெறியப்பட்டால், அதற்குத் தொடர்புடைய கோப்பு முறைமை முத்திரைகள் மற்றும் UUID மதிப்புகளும் மாற்றப்பட்டிருக்கும் அல்லது நீக்கப்பட்டிருக்கும்.
தனித்துவம் காரணமாக, MBR-பாணியில் உள்ள பகிர்வு அட்டவணையைப் பயன்படுத்தும் படிப்பவர்கள், /etc/fstab கோப்பில் ஏற்றக்கூடிய கனவளவுகளை வரையறுக்கும்போது முத்திரைகளுக்குப் பதிலாக UUID க்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
பகிர்வு முத்திரைகள் மற்றும் UUID க்கள்
GPT வழியைத் தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு /etc/fstab கோப்பில் பகிர்வை வரையறுக்க இன்னும் கூடுதல் 'திடமான' விருப்பத்தேர்வுகள் உள்ளன. பகிர்வுகளுக்கு என்ன கோப்பு முறைமை தேர்வு செய்யப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாமல், பகிர்வு முத்திரை மற்றும் பகிர்வு UUID பயன்படுத்தி தொகுதி சாதனங்களில் உள்ள தனி பகிர்வுகளை அடையாளம் காணலாம். பகிர்வின் முத்திரைகள் மற்றும் UUID கள் முறையே PARTLABEL மற்றும் PARTUUID என்னும் முன்னொட்டு மூலம் அடையாளங்காட்டப்படுகிறது. இதை blkid கட்டளையைக் கொண்டு காணலாம்.
root #
blkid
பகிர்வு முத்திரைகளுக்கு எல்லா நேரத்திலும் இந்த கருத்து உண்மையாக இருப்பதில்லை என்றாலும், fstab இல் உள்ள பகிர்வுகளை அடையாளம் காண UUID ஐ பயன்படுத்தும்போது எதிர்காலத்தில் கோப்பு முறைமை மாற்றப்பட்டாலும், குறிப்பிட்ட கனவளவை தேடும்போது துவக்க ஏற்றிக் குழப்பமடையாது என்னும் பொறுப்புறுதியை அளிக்கிறது. அடிக்கடி மறுதொடக்கம் செய்யப்படும் முறைமைகள், வழக்கமாகச் சேர்க்க மற்றும் நீக்கப்படும் SATA தொகுதி சாதனங்கள் ஆகியவற்றில், fstab கோப்பில் பகிர்வுகளை வரையறுக்கப் பழைய முன்னிருப்பு தொகுதி சாதன கோப்புகள் (/dev/sd*N) ஐ பயன்படுத்துவது இடர்மிகு செயலாகும்.
தொகுப்பு சாதன கோப்புகளைப் பெயரிடல் ஆனது எவ்வாறு மற்றும் எந்த வரிசையில் வட்டுக்கள் முறைமையோடு இணைக்க வேண்டும் போன்ற பல காரணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது. முன் துவக்கச் செயலின்போது எந்த சாதனம் முதலில் கர்னலால் கண்டறியப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து இது வெவ்வேறு வரிசைகளிலும் காட்டலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு, வட்டு வரிசைகளோடு தொடர்ந்து விளையாட விரும்பாதவர்களுக்கு, முன்னிருப்பு தொகுப்பு சாதன கோப்புகள் ஒரு எளிமையான மற்றும் நேர்மையான வழியாகும்.
எவ்வாறு /boot/ பகிர்விற்கான விருப்பத்தேர்வுகளை எழுதுவது என்பதை நாம் இப்போது பார்ப்போம். இது வெறும் ஒரு எடுத்துக்காட்டு என்பதால் முன்னதாக நிறுவலில் எடுக்கப்பட்ட பகிர்வு முடிவுகள் அடிப்படையில் மாற்றியமைக்கவும். நம்முடைய alpha பகிர்வு எடுத்துக்காட்டில், /boot/ என்பது பொதுவாக ext2 வை கோப்பு முறைமையாகக் கொண்ட /dev/sda1 ஆகும். துவக்கச் செயலின் போது இது சரிபார்க்கப்பட வேண்டும் என்பதால் நாம் இவ்வாறு எழுதுவோம்:
/etc/fstab
/etc/fstab கோப்பிற்கான எடுத்துக்காட்டு /boot வரி/dev/sda1 /boot ext2 defaults 0 2
சில பயனர்கள் தங்கள் முறைமையின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் /boot/ பகிர்வு தானியக்கமாக ஏற்றப்படுவதை விரும்புவதில்லை. இவ்வகை பயனர்கள் defaults என இருப்பதை noauto என மாற்ற வேண்டும். இதன் பொருளாக ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் இந்த பகிர்வைக் கைமுறையாக ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
முன்னர் முடிவெடுக்கப்பட்ட பகிர்வு திட்டங்கள், CD-ROM இயக்ககங்கள் போன்ற சாதனங்கள், இதர பகிர்வுகள் அல்லது இயக்ககங்கள் (பயன்படுத்தப்பட்டிருந்தால்) ஆகியவற்றிற்குப் பொருந்தும் விதிகளைச் சேர்க்கவும்.
கீழே /etc/fstab கோப்பிற்கான இன்னும் விரிவாக்கப்பட்ட எடுத்துக்காட்டைக் காணலாம்:
/etc/fstab
முழு /etc/fstab எடுத்துக்காட்டு/dev/sda1 /boot ext2 defaults,noatime 0 2 /dev/sda2 none swap sw 0 0 /dev/sda3 / ext4 noatime 0 1 /dev/cdrom /mnt/cdrom auto noauto,user 0 0
மூன்றாவது புலத்தில் auto
எனப் பயன்படுத்தப்பட்டிருக்கும்போது, கோப்பு முறைமையை என்னவாக இருக்கும் என்பதை mount கணிக்குமாறு செய்கிறது. பல கோப்பு முறைமைகளுள் ஒன்றைக் கொண்டு அகற்றுத்தகு ஊடகம் உருவாக்கப்படுவதால் இது பரிந்துரைக்கப்படுகிறது. நான்காவது புலத்தில் உள்ள user
விருப்பத்தேர்வு வேர்-அல்லாத பயனர்களும் குறுந்தகட்டை ஏற்றுவதை இயலக்கூடியதாகச் செய்கிறது.
செயல்திறனை மேம்படுத்த, பெரும்பாலான பயனர்கள் noatime
என்னும் ஏற்ற விருப்பத்தேர்வைச் சேர்க்க வேண்டி வரும். இதன் விளைவாக அணுகல் நேரம் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதால் முறைமை வேகமாக வேளை செய்யும் (இருந்தாலும் பொதுவாக இது தேவைப்படாது). திடநிலை இயக்கக (SSD) பயனர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது, இவர்கள் இதோடு சேர்த்து, TRIM
கட்டளையை வேளை செய்ய வைக்கும் discard
ஏற்ற விருப்பத்தேர்வையும் இயக்க வேண்டும்.
/etc/fstab கோப்பை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்தவுடன், சேமித்து விட்டு வெளியேறவும்.
வலையமைப்பு தகவல்கள்
புரவலன் மற்றும் கள தகவல்கள்
பயனர்கள் எடுக்கும் முடிவுகளுள் ஒன்று தங்கள் கணினிக்கு ஒரு நல்ல பெயரை இடுதலாகும். இது பார்க்க எளிமையானதாகத் தோன்றினாலும் பெரும்பாலான பயனர்கள் தங்கள் லினக்ஸ் கணினிக்கு ஒரு பொருத்தமான பெயரை இடுவதில் சிரமப்படுகின்றனர். இது இறுதி முடிவு இல்லை, பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளவும். கீழுள்ள எடுத்துக்காட்டில், homenetwork என்னும் களத்தினுள் tux என்னும் புரவலன் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
OpenRC
root #
nano -w /etc/conf.d/hostname
# தேர்ந்தெடுக்கப்பட்ட புரவலன் பெயரைப் hostname மாறியாக அமைக்கவும் hostname="tux"
இரண்டாவதாக, ஒரு கள பெயர் தேவைப்பட்டால், அதை /etc/conf.d/net கோப்பில் அமைக்கவும். இது இணையச் சேவையாளர் (ISP) அல்லது வலையமைப்பு மேலாளர் செய்யச் சொன்னால் அல்லது வலையமைப்பு DHCP சேவையகத்திற்குப் பதிலாக DNS சேவையகத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே தேவைப்படும். முறைமையானது இயங்குநிலை IP முகவரி ஒதுக்கீடு மற்றும் வலையமைப்பு உள்ளமைவுகளுக்கு DHCP ஐ பயன்படுத்தினால் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
/etc/conf.d/net கோப்பு இயல்பாக இருப்பதில்லை. ஆகையால் இதை உருவாக்க வேண்டும்.
root #
nano -w /etc/conf.d/net
# தேர்ந்தெடுக்கப்பட்ட களப் பெயரைப் dns_domain_lo மாறியாக அமைக்கவும் dns_domain_lo="homenetwork"
எந்த கள பெயரும் உள்ளமைக்கப்படவில்லை என்றால், பயனர்கள் உள்நுழையும் திரையில் "இது புரவலன் பெயர். (எதுவுமில்லை)" என்னும் செய்திகளைப் பெறுவர். இதைப் பின்னர் /etc/issue கோப்பை திருத்தி அதிலுள்ள
.\O
சரத்தை நீக்குவதன் மூலம் சரிசெய்யலாம்.NIS களம் தேவைப்பட்டால் (இது என்னவென்றே தெரியாத பயனர்களுக்கு இது கண்டிப்பாகப் பயன்படாது) வரையறுத்துக்கொள்ளவும்:
root #
nano -w /etc/conf.d/net
# தேர்ந்தெடுக்கப்பட்ட NIS களப் பெயரைப் nis_domain_lo மாறியாக அமைக்கவும் nis_domain_lo="my-nisdomain"
DNS மற்றும் NIS ஐ உள்ளமைப்பதை பற்றிய மேலும் விவரங்களுக்கு, /usr/share/doc/netifrc-*/net.example.bz2 என்பதில் அளிக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை bzless கட்டளையைப் பயன்படுத்திப் படிக்கவும். மேலும், DNS/NIS நிறுவல்களை மேலாண்மை செய்வதற்கு உதவி தேவைப்பட்டால் net-dns/openresolv தொகுப்பை நிறுவிக்கொள்ளலாம்.
systemd
To set the system hostname on systemd, run hostnamectl.
For setting the hostname to "tux", one would run:
root #
hostnamectl hostname tux
Network
dhcpcd (any init system)
An alternative to using neticrc is dhcpcd. See Dhcpcd for more details.
To install:
root #
emerge --ask net-misc/dhcpcd
To enable and then start the service on OpenRC systems:
root #
rc-update add dhcpcd default
root #
rc-service dhcpcd start
To enable and start the service on systemd systems:
root #
systemctl enable --now dhcpcd
netifrc (primarily OpenRC)
This is one particular way of setting up the network using Netifrc on OpenRC. Other methods exist for simpler setups like Dhcpcd.
There are many options available for configuring network interfaces. This section covers a only a few methods. Choose the one which seems best suited to the setup needed.
வலையமைப்பை உள்ளமைத்தல்
ஜென்டூ நிறுவலின்போது, ஏற்கனவே வலையமைப்பு உள்ளமைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அது நிறுவல் குறுந்தகட்டிற்கானதே தவிர நிறுவப்பட்ட சூழலுக்கானதில்லை. இப்போது, நிறுவப்பட்ட ஜென்டூ லினக்ஸ் முறைமைக்காக வலையமைப்பு உள்ளமைக்கப்படுகிறது.
பிணைத்தல், பாலமிடுதல், 802.1Q VLAN கள், கம்பியில்லா வலையமைத்தல் போன்ற மேம்பட்ட தலைப்புகளை உள்ளடக்கிய வலையமைப்பை பற்றிய மேலும் விரிவான தகவல்களை ஜென்டூ வலையமைப்பு உள்ளமைவு பிரிவில் காணலாம்.
எல்லா வலையமைத்தல் தகவல்களும் /etc/conf.d/net கோப்பில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இது நேர்மையான ஆனால் இயல்புணர்வு இல்லாத தொடரியலைப் பயன்படுத்துகிறது. கவலைப்பட வேண்டாம், எல்லாம் கீழே விளக்கப்பட்டுள்ளது. பல வகையான உள்ளமைவுகளை கொண்ட முழு கருத்திடப்பட்ட எடுத்துக்காட்டு /usr/share/doc/netifrc-*/net.example.bz2 கோப்பில் கிடைக்கும்.
முதலில் net-misc/netifrc தொகுப்பை நிறுவவும்:
root #
emerge --ask --noreplace net-misc/netifrc
DHCP இயல்பாக பயன்படுத்தப்படுகிறது. இந்த DHCP வேளை செய்ய DHCP பயனர் நிறுவப்பட வேண்டும். தேவையான முறைமை கருவிகளை நிறுவுதல் என்னும் பிரிவில் இது பின்னர் விவரிக்கப்படும்.
குறிப்பிட்ட DHCP விருப்பத்தேர்வுகளினால் அல்லது DHCP ஐ முழுவதுமாக பயன்படுத்தாத காரணத்தால் வலையமைப்பு உள்ளமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், /etc/conf.d/net ஐ திறந்து:
root #
nano -w /etc/conf.d/net
IP முகவரி தகவல்கள் மற்றும் வழியிடல் தகவல்களை முறையே config_eth0 மற்றும் routes_eth0 களில் அமைக்கவும்:
இது வலையமைப்பு இடைமுகம் eth0 ஆக இருக்கும் எனக் கருதுகிறது. இருப்பினும் இது பெருமளவில் முறைமை சார்ந்தது. அண்மைக் காலத்து நிறுவல் ஊடகமாக இருப்பின், இடைமுகத்தின் பெயர் நிறுவல் குறுந்தகடு துவங்கும்போது இருந்த இடைமுக பெயராகத் தான் இருக்கும் எனக் கருதுவது பரிந்துரைக்கப்படுகிறது. இதைப் பற்றிய மேலும் தகவல்கள் வலையமைப்பு இடைமுக பெயரிடல் இல் காணலாம்.
/etc/conf.d/net
நிலையான IP வரையறுத்தல்config_eth0="192.168.0.2 netmask 255.255.255.0 brd 192.168.0.255" routes_eth0="default via 192.168.0.1"
DHCP ஐ பயன்படுத்த, config_eth0 என்பதை வரையறுக்கவும்:
/etc/conf.d/net
DHCP வரையறுத்தல்config_eth0="dhcp"
எல்லா இருக்கக்கூடிய விருப்பத்தேர்வுகளின் பட்டியலுக்கு /usr/share/doc/netifrc-*/net.example.bz2 ஐ படிக்கவும். குறிப்பிட்ட DHCP விருப்பத்தேர்வுகள் அமைக்க வேண்டும் என்றால் தவறாமல் DHCP கைமுறை பக்கத்தைப் படிக்கவும்.
முறைமை பல வலையமைப்பு இடைமுகங்களைக் கொண்டிருந்தால், மேலுள்ள படிகளை மீண்டும் config_eth1, config_eth2 முதலியவற்றிற்கும் செய்யவும்.
இப்போது, உள்ளமையைச் சேமித்துத் தொடர்வதற்கு வெளியேறவும்.
வலையமைப்பைத் துவக்கத்தில் தானியக்கமாகத் தொடங்குதல்
வலையமைப்பு இடைமுகங்களைத் துவக்கத்தில் செயல்படுத்த, அவற்றை முன்னிருப்பு ஓடுநிலையில் சேர்க்க வேண்டும்.
root #
cd /etc/init.d
root #
ln -s net.lo net.eth0
root #
rc-update add net.eth0 default
முறைமைக்குப் பல வலையமைப்பு இடைமுகங்கள் இருப்பின், net.eth0 ற்கு நாம் செய்தது போலப் பொருத்தமான net.* கோப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
முறைமை துவக்கப்பட்ட பிறகு நாம் ஊகித்த வலையமைப்பு இடைமுகத்தின் பெயர் (இப்போது eth0
எனக் குறிக்கப்பட்டுள்ளது) தவறானதாக இருந்தால், இதைச் சரிசெய்யப் பின்வரும் கட்டளையைச் செயல்படுத்தவும்:
- /etc/conf.d/net கோப்பில் சரியான இடைமுக பெயரைக் கொண்டு புதுப்பிக்கவும் (
eth0
என்பதற்குப் பதிலாகenp3s0
என மாற்றுவதைப் போன்று). - புதிய குறியீட்டுத் தொடுப்பை உருவாக்கவும் (/etc/init.d/net.enp3s0 போன்று).
- பழைய குறியீட்டுத் தொடுப்பை நீக்கவும் (rm /etc/init.d/net.eth0)
- புதிய குறியீட்டுத் தொடுப்பை முன்னிருப்பு ஓடுநிலையில் சேர்க்கவும்.
- rc-update del net.eth0 default பயன்படுத்தி பழைய குறியீட்டுத் தொடுப்பை முன்னிருப்பு ஓடுநிலையிலிருந்து நீக்கவும்.
hosts கோப்பு
அடுத்து லினக்ஸிற்கு வலையமைப்பு சூழலைப் பற்றித் தெரிவிக்கவும். இது /etc/hosts கோப்பில் வரையறுக்கப்பட்டு, பெயர் சேவையகத்தால் தீர்க்கப்படாத புரவலன்களின் புரவலன் பெயர்களை IP முகவரிகளாகத் தீர்க்க உதவுகிறது.
root #
nano -w /etc/hosts
/etc/hosts
வலையமைத்தல் தகவல்களை நிரப்புதல்# இது இப்போதைய முறைமையை வரையறுக்கிறது. இவ்வாறாக அமைக்கவும் 127.0.0.1 tux.homenetwork tux localhost # வலையமைப்பில் உள்ள கூடுதல் முறைமைகளை வரையறுக்க விரும்பினால் 192.168.0.5 jenny.homenetwork jenny 192.168.0.6 benny.homenetwork benny
தொடர்வதற்கு, சேமித்து பின் உரை திருத்தியை விட்டு வெளியேறவும்.
விரும்பினால்: PCMCIA ஐ வேளை செய்ய வைத்தல்
PCMCIA பயனர்கள் இப்போது sys-apps/pcmciautils தொகுப்பை நிறுவ வேண்டும்.
root #
emerge --ask sys-apps/pcmciautils
முறைமை தகவல்
வேர் கடவுச்சொல்
வேர் கடவுச்சொல்லை அமைக்க passwd கட்டளையைப் பயன்படுத்தவும்.
root #
passwd
லினக்ஸின் வேர் கணக்கு எல்லா செயல்களையும் செய்யவல்ல ஒரு திறன்மிகு கணக்காகும், ஆகையால் இதற்காக ஒரு கடினமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பின் வரும் பகுதிகளுள் ஒன்றில் அன்றாட பயன்பாட்டிற்காகக் கூடுதலாக ஒரு வழக்கமான பயனர் கணக்கு உருவாக்கப்படும்.
Init மற்றும் துவக்க உள்ளமைவு
OpenRC
முறைமையின் சேவைகள், இயக்க தொடக்கம் மற்றும் இயக்க நிறுத்தம் ஆகியவற்றை உள்ளமைக்க ஜென்டூ (குறைந்தது OpenRC ஐ பயன்படுத்தும்போதாவது) /etc/rc.conf கோப்பை பயன்படுத்துகிறது. இந்த /etc/rc.conf கோப்பை திறந்து அதில் உள்ளக் கருத்துக்களை உலாவவும். அமைப்புகளைத் திறனாய்வு செய்து தேவைப்படும் இடங்களில் மாற்றிக் கொள்ளவும்.
root #
nano -w /etc/rc.conf
அடுத்து, விசைப்பலகை உள்ளமைவுகளை கையாள /etc/conf.d/keymaps கோப்பை திறக்கவும். உள்ளமைத்து சரியான விசைப்பலகையைத் தேர்வு செய்ய இதைத் திருத்தவும்.
root #
nano -w /etc/conf.d/keymaps
keymap மாறிக்குச் சிறப்புக் கவனம் செலுத்தவும். தவறான விசை வரைபடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது வினோதமான விளைவுகளை ஏற்படும்.
இறுதியாக, மணிக்கூடு விருப்பத்தேர்வுகளை அமைப்பதற்கு /etc/conf.d/hwclock கோப்பை திருத்தவும். இதை உங்கள் தேவைக்கு ஏற்ப திருத்திக் கொள்ளவும்.
root #
nano -w /etc/conf.d/hwclock
வன்பொருள் மணிக்கூடு UTC ஐ பயன்படுத்தவில்லை என்றால், கோப்பில் clock="local"
என அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இல்லையென்றால் முறைமையானது மணிக்கூடு சரிதல் தன்மையைக் காட்டலாம்.
systemd
It's recommended to run systemd-firstboot --prompt --setup-machine-id to ensure the system is setup correctly, but the necessary steps can be run individually too.