கையேடு:IA64/நிறுவல்/பற்றி

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:IA64/Installation/About and the translation is 100% complete.
IA64 கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
ஜென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை

முன்னுரை

வரவேற்பு

முதலில் ஜென்டூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! தேர்வுகள் மற்றும் செயல்திறன் நிறைந்த உலகில் நீங்கள் அடியெடுத்து வைக்க உள்ளீர்கள். ஜென்டூவில் எல்லாமே தேர்வுகளைப் பற்றியதுதான். ஜென்டூவை நிறுவும் போது, இது பல முறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது - பயனர்கள் தாங்கள் எவ்வளவு தொகுக்க வேண்டும், ஜென்டூவை எப்படி நிறுவுவது, எந்த கணினி அளவுமேவு பதிப்பைப் பயன்படுத்த வேண்டும் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

Openness

Gentoo's premier tools are built from simple programming languages. Portage, Gentoo's package maintenance system, is written in Python. Ebuilds, which provide package definitions for Portage are written in bash. Our users are encouraged to review, modify, and enhance the source code for all parts of Gentoo.

By default, packages are only patched when necessary to fix bugs or provide interoperability within Gentoo. They are installed to the system by compiling source code provided by upstream projects into binary format (although support for precompiled binary packages is included too). Configuring Gentoo happens through text files.

For the above reasons and others: openness is built-in as a design principal.

Choice

ஜென்டூ தூய்மை அத்துடன் நெகிழ்வுடைய வடிவமைப்பைக் கொண்டுள்ள வேகமான மற்றும் நவீன மீ-வழங்கலாகும். இது கட்டற்ற மென்பொருள் சூழலில் கட்டமைக்கப்பட்டதால் இதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பயனர்களிடமிருந்து மறைப்பதில்லை. ஜென்டூவால் பயன்படுத்தப்படும் Portage என்னும் தொகுப்பு மேலாண்மை முறைமை Python மொழியில் எழுதப்பட்டது. இதன்மூலம், பயனர் இதன் மூல நிரல் ஆவணங்களை எளிதாகப் பார்க்கவோ திருத்தவோ இயலும். ஜென்டூவின் பொதிகட்டல் முறைமை மூல நிரலைப் பயன்படுத்துகிறது (ஆயினும் முன்-தொகுத்த தொகுப்புகளுக்கான ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது). மேலும் இதன் உள்ளமைவு வழக்கமான உரை கோப்புகள் மூலமாக நடக்கிறது. சுருக்கமான கூற வேண்டும் என்றால் எல்லா இடங்களிலும் வெளிப்படைத்தன்மை.

When installing Gentoo, choice is made clear throughout the Handbook. System administrators can choose two fully supported init systems (Gentoo's own OpenRC and Freedesktop.org's systemd), partition structure for storage disk(s), what file systems to use on the disk(s), a target system profile, remove or add features on a global (system-wide) or package specific level via USE flags, bootloader, network management utility, and much, much more.

As a development philosophy, Gentoo's authors try to avoid forcing users onto a specific system profile or desktop environment. If something is offered in the GNU/Linux ecosystem, it's likely available in Gentoo. If not, then we'd love to see it so. For new package requests please file a bug report or create your own ebuild repository.

Power

Being a source-based operating system allows Gentoo to be ported onto new computer instruction set architectures and also allows all installed packages to be tuned. This strength surfaces another Gentoo design principal: power.

A system administrator who has successfully installed and customized Gentoo has compiled a tailored operating system from source code. The entire operating system can be tuned at a binary level via the mechanisms included in Portage's make.conf file. If so desired, adjustments can be made on a per-package basis, or a package group basis. In fact, entire sets of functionality can be added or removed using USE flags.

தேர்வுகள்தான் ஜென்டூவை ஓட வைக்கிறது என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். நாங்கள் எந்த பயனரையும் அவர்கள் விரும்பாத தேர்வுகளைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதில்லை. இதற்கு மாறாக எவரேனும் கருதினால், தயவுசெய்து ஒரு வழுவறிக்கையை தாக்கல் செய்யவும்.

எவ்வாறு நிறுவல் வடிவமைக்கப்பட்டுள்ளது

ஜென்டூ நிறுவலை அடுத்த பகுதிகளுடன் தொடர்புடைய 10 படிகள் கொண்ட செயல்முறையாகக் காணலாம். ஒவ்வொரு படியும் ஒரு குறிப்பிட்ட நிலையை விளைவிக்கிறது:

படிகள் விளைவுகள்
1 பயனர் ஜென்டூவை நிறுவப் பணிச்சூழலில் ஆயத்தமாக உள்ளார்.
2 ஜென்டூவை நிறுவுவதற்குத் தேவையான இணைய இணைப்பு ஆயத்த நிலையில் உள்ளது.
3 வன்தட்டுகள் ஜென்டூவை நிறுவ ஏற்றப்பட்டது.
4 நிறுவல் சூழல் ஆயத்தப்படுத்தப்பட்டு பயனர் புதிய சூழலுக்குள் செல்வதற்கு chroot செய்ய ஆயத்தமாகிறார்.
5 எல்லா ஜென்டூ நிறுவல்களிலும் பொதுவாக இருக்கும் கரு தொகுப்புகள் நிறுவப்பட்டு விட்டன.
6 லினக்ஸ் கர்னல் நிறுவப்பட்டுவிட்டது.
7 பெரும்பாலான ஜென்டூ முறைமை உள்ளமைவுக் கோப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டது.
8 தேவையான முறைமை கருவிகள் நிறுவப்பட்டுவிட்டது.
9 முறையான துவக்க ஏற்றியை நிறுவி உள்ளமைக்கப்பட்டுவிட்டது.
10 புதிதாக நிறுவப்பட்ட ஜென்டூ லினக்ஸ் சூழல் ஆராய்வதற்கு ஆயத்தமாகிவிட்டது.

எந்த இடங்களில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தேர்வு வழங்கப்படுகிறதோ கையேடு அந்த இடங்களில் ஒவ்வொரு தேர்விற்கான நிறை, குறைகளை எடுத்துரைக்க முயலும். உரை முன்னிருப்பு தேர்வை ("முன்னிருப்பு:" எனத் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்) கொண்டு முன்னோக்கி நகர்ந்தாலும், அதற்கான மாற்றுத் தேர்வுகளுக்கான ("மாற்று:" எனத் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்) விளக்கங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஜென்டூ இந்த முன்னிருப்பு தேர்வுகளைப் பரிந்துரைக்கிறது எனக் கருத வேண்டாம். இவையனைத்தும் பயனர்கள் பெரும்பாலும் இதைத் தேர்வு செய்வார்கள் என்னும் அனுமானமாகும்.

சில சமயங்களில் சில வழிகளை விரும்பினால் பின்பற்றலாம். அத்தகைய வழிகள் "விரும்பினால்:" எனக் குறிப்பிட்டிருக்கும். இது ஜென்டூ நிறுவலுக்கு முக்கியமில்லை. ஆனால் சில விருப்ப வழிகள் அதற்கு முன் எடுக்கப்படும் முடிவை பொறுத்துள்ளது. இவ்வாறான சூழலில், முடிவை எடுக்கப்படும்போதும், விருப்ப வழியை விளக்குவதற்கு முன்னும் வழிமுறைகள் படிப்பவர்க்கு அறிவுறுத்தப்படும்.

ஜென்டூவிற்கான நிறுவல் விருப்பத்தேர்வுகள்

ஜென்டூவை பல வகையில் நிறுவலாம். இதை எங்கள் துவக்க வல்ல ISO படங்கள் முதலிய அதிகாரப்பூர்வமான ஜென்டூ நிறுவல் ஊடகத்தை பதிவிறக்கி நிறுவலாம். நிறுவல் ஊடகத்தை ஒரு USB குச்சியில் நிறுவியோ வலை-துவக்க சூழலின் மூலமாகவோ அணுகலாம். மாற்றாக, எற்கனவே நிறுவப்பட்ட வழங்கல் அல்லது ஜென்டூ-அல்லாத துவக்கவல்ல தகடு (Knoppix போன்ற) அதிகாரப்பூர்வமற்ற ஊடகம் வாயிலாகவும் நிறுவலாம்.

இந்த ஆவணம் அதிகாரப்பூர்வமான ஜென்டூ நிறுவல் ஊடகத்தை கொண்டு (சில சமயங்களில் வலை-துவக்கம் கொண்டு) நிறுவதை விவரிக்கிறது.

குறிப்பு
ஜென்டூ அல்லாத துவக்கவல்ல ஊடகத்தைப் பயன்படுத்தி நிறுவல் போன்ற மற்ற நிறுவல் வழிகளுக்கான உதவிக்கு, மாற்றுவழி நிறுவல் வழிகாட்டியை காணவும்.

இத்துடன் உங்களுக்கு மேலும் பயனுள்ளதாக அமைய ஜென்டூ உதவிக்குறிப்புகள் என்னும் இந்த ஆவணத்தை நாங்கள் உங்களுக்கு ​அளிக்கிறோம்

பிரச்சனைகள்

நிறுவலில் (அல்லது நிறுவல் ஆவணத்தில்) ஏதேனும் இடர்ப்பாடு காணப்பட்டால், வழு கண்காணிப்பு முறைமை என்னும் இணையப்பக்கத்திற்குச் சென்று ஏற்கனவே இதைப் போன்ற வழுவுள்ளதா எனப் பார்க்கவும். இல்லையென்றால் அதற்கான ஒரு புதிய வழுவறிக்கையை உருவாக்கவும். வழுவிற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்த உருவாக்குநர்களைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை, அவர்கள் ஒன்றும் கடித்துத் தின்றுவிட மாட்டார்கள்.

ஆவணம் ஒவ்வொரு கட்டமைப்புக்கும் வேறுபட்டு இருந்தாலும், மற்ற கட்டமைப்புகளுக்கான குறிப்புகளையும் கொண்டிருக்கும். காரணம் ஜென்டூ கையேட்டின் பெரும்பகுதி எல்லா கட்டமைப்புகளுக்கும் பொருந்தக்கூடிய உரைகளைக் கொண்டுள்ளது (ஒரே உரையை மீண்டும் எழுதுவதைத் தவிர்க்க). குழப்பங்களைத் தவிர்க்க இவ்வகை குறிப்புகள் குறைவாக வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சிக்கல் பயனர் சிக்கலா (ஆவணங்களைச் சரியாகப் படித்த பிறகும் சில பிழைகள் ஏற்படுதல்) அல்லது மென்பொருள் சிக்கலா (நிறுவல்/ஆவணங்களை நன்றாகச் சோதித்த பிறகும் எங்களால் ஏற்பட்ட பிழைகள்) என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தயங்காமல் irc.libera.chat இல் உள்ள #gentoo (webchat) வின் IRC அலைத்தடத்தில் சேரலாம். இதற்கு மட்டுமல்லாமல் எல்லா ஜென்டூ சார்ந்த அரட்டைகளில் பங்கெடுக்க மேற்கூறிய IRC அலைத்தடத்தில் சேர உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இதைப் பற்றிப் பேசுகையில், ஜென்டூ தொடர்பாக ஏதேனும் கூடுதல் கேள்விகள் இருந்தால், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கட்டுரையைப் பாருங்கள். மேலும் ஒரு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம் ஜென்டூ மன்றத்தில் உள்ளது.