கையேடு:IA64/பாகங்கள்/கர்னல்
கட்டமைப்பு சார்ந்த கர்னல் உள்ளமைவு
சரியான முறைமை வகை மற்றும் செயலாக்கி வகையைத் தேர்வு செய்யவும். DIG இணக்கம் ஒரு நல்ல முன்னிருப்பு தேர்வாகும். SGI முறைமையில் நிறுவும்போது SGI முறைமை வகை தேர்ந்தெடுத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும், இல்லையென்றால் கர்னலானது பூட்டிக்கொண்டு துவக்க மறுக்கும்.
System type --->
(Change according to the system)
DIG-compliant
Processor type --->
(Change according to the system)
Itanium 2
தொகுத்தல் மற்றும் நிறுவுதல்
இப்போது உள்ளமைவு முடிந்துவிட்டதால், கர்னலை தொகுத்து நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது. உள்ளமைவை விட்டு வெளியேறித் தொகுத்தல் செயல்முறையைத் தொடங்கவும்:
root #
make && make modules_install
make -jX ஐ பயன்படுத்தி இணை உருவாக்கல்களைச் செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதில்
X
என்பது உருவாக்கல் செயல்பாடுகளால் துவக்க அனுமதிக்கப்படும் இணை வேளைகளின் எண்ணிக்கைகளாகும். இது முன்னர் கூறிய MAKEOPTS மாறியைக் கொண்ட /etc/portage/make.conf ஐ பற்றிய வழிகாட்டுதல்களை ஒத்ததாகும்.கர்னல் தொகுத்தலை முடித்தவுடன், கர்னல் படத்தை / என்னும் இடத்தில் நகலெடுத்து வைக்கவும். உங்கள் கர்னல் தேர்விற்குப் பொருந்தும் எந்த பெயராயினும் அதைப் பயன்படுத்தி பின் அதை நினைவில் வைத்துக்கொள்ளவும். ஏனெனில் இது பின்வரும் துவக்க ஏற்றியை உள்ளமைத்தல் பகுதியில் தேவைப்படும். vmlinuz ற்கு பதிலாக நிறுவிய கர்னலின் பெயர் மற்றும் பதிப்பை மறக்காமல் மாற்றவும்.
root #
cp vmlinux.gz /boot/vmlinuz