ஊடலை உள்ளீடு சாதனங்கள்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Bluetooth input devices and the translation is 95% complete.
Other languages:

இந்த கட்டுரை ஊடலை சுட்டி போன்ற ஊடலை உள்ளீடு சாதனங்களை லினக்ஸ் முறைமையில் அமைப்பதைப் பற்றி விவரிக்கிறது.

நிறுவல்

கருநிரல்

ஊடலை மற்றும் evdev ஆகிய இவ்விரண்டின் ஆதரவு கருநிரலில் இன்றியமையாததாகும். பின்வரும் விருப்பத்தேர்வுகளும் தேவைப்படுகிறது.

முக்கியமானது
சில வன்பொருட்களில் உள்ளீடு சாதனத்திற்குச் சிறப்பு இயக்கிகள் தேவைப்படலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். தேவைப்பட்டால் Special HID devices இன் கீழ்க் காணவும்.
கருநிரல்
Device Drivers  --->
    [*] HID Devices  --->
          Special HID drivers  --->
                <*> ...
[*] Networking support  --->
    <*>   Bluetooth subsystem support  --->
          <*>   L2CAP protocol support
          <*>   HIDP protocol support

BlueZ அமைப்புகள்

பயனர்-இடைவெளி HID ஆதரவைச் செயல்படுத்த /etc/bluetooth/input.conf இல் உள்ள UserspaceHID இன் மதிப்பை true என மாற்றவும்:

கோப்பு /etc/bluetooth/input.conf
# பயனர் இடைவெளி உள்ளீடு தனியமைப்பில் HID வரைமுறையைச் செயல்படுத்துகிறது
# முன்னிருப்பு false என அமைக்கப்பட்டுள்ளது(HIDP ஆனது HIDP கருநிரல் கூறில் கையாளப்படுகிறது)
UserspaceHID=true

பயனர்-இடைவெளி HID ஆதரவிற்கு HID சாதனங்களுக்கான பயனர்-இடைவெளி I/O இயக்கியும் (CONFIG_UHID) செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்:

கருநிரல் பயனர்-இடைவெளி HID ஆதரவை செயல்படுத்துதல்
Device Drivers --->
    HID support --->
        <*>   User-space I/O driver support for HID subsystem

உள்ளமைவு

உள்ளீடு சாதனங்களை உள்ளமைக்க தனித்துவமான பணித்தள மேலாண்மை கருவிகளைப் பயன்படுத்தவும்:

Some Bluetooth input devices are initially not in HID mode, but in HCI mode. This is handled by udev in /lib/udev/rules.d/97-hid2hci.rules. Additional devices can be added in a custom rule file which needs to be placed in /etc/udev/rules.d. Refer to the udev article for more details.

இதையும் காண்க

  • ஊடலை — ஊடலை கட்டுப்படுத்திகள் மற்றும் சாதனங்களின் உள்ளமைவு மற்றும் பயன்பாட்டை விவரிக்கிறது.