Translations:Handbook:Parts/Installation/Kernel/77/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
முழுமையாக தானியக்கமாக்கப்பட்ட அணுகுமுறை: பகிர்ந்தளிப்பு கருநிரல்கள்
பகிர்ந்தளிப்பு கருநிரல் ஆனது லினக்சு கருநிரலை உள்ளமைத்து தானியக்கமாக உருவாக்கி பின் அதற்கு தொடர்புடைய கூறுகள் மற்றும் (விரும்பினால், எனினும் இது முன்னிருப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது) initramfs கோப்புடன் நிறுவ பயன்படுத்தப்படுகிறது. மற்ற முறைமை தொகுப்பை போல கருதப்படுவதால் எதிர்கால கருநிரல் இற்றைப்படுத்தல்களை தானியக்கமாக தொகுப்பு மேலாளர் பார்த்துக்கொள்ளும். தனிப்பயனாக்கல் தேவைப்பட்டால் தனிப்பயனாக்கப்பட்ட கருநிரல் உள்ளமைவு கோப்பை அளிக்கலாம். இது குறைவாக ஈடுபட வேண்டிய செயல்முறை என்பதால் புதிய சென்டூ பயனர்களுக்கு இது பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும். மேலும் இது முறைமை செயலாட்சியரிடமிருந்து குறைந்த அளவிலான ஈடுபாட்டையை எதிர்ப்பார்க்கிறது.
கலப்பின அணுகுமுறை: Genkernel
புதிய கருநிரல் மூலங்கள் முறைமை தொகுப்பு மேலாளர் மூலம் நிறுவப்படுகிறது. முறைமை செயலாட்சியர்கள் லினக்சு கருநிரலை உள்ளமைத்து தானியக்கமாக உருவாக்கி பின் அதற்கு தொடர்புடைய கூறுகள் மற்றும் (விரும்பினால், எனினும் இது முன்னிருப்பாக செயல்படுத்தப்படுவது இல்லை) initramfs கோப்புடன் நிறுவுவதற்கு சென்டூவின் genkernel கருவியை பயன்படுத்துவார்கள். தனிப்பயனாக்கல் தேவைப்பட்டால் தனிப்பயனாக்கப்பட்ட கருநிரல் உள்ளமைவு கோப்பை அளிக்கலாம். எதிர்கால கருநிரல் உள்ளமைவு, தொகுத்தல் மற்றும் நிறுவலுக்கு eselect kernel, genkernel போன்ற கட்டளைகளை ஒவ்வொரு இற்றைப்படுத்தலின்போதும் இயக்குவதற்கு முறைமை செயலாட்சியரின் ஈடுபாடு தேவைப்படுகிறது.
முழுமையாக கைமுறை அணுகுமுறை
புதிய கருநிரல் மூலங்கள் முறைமை தொகுப்பு மேலாளர் மூலம் நிறுவப்படுகிறது. கருநிரல் கைமுறையாக உள்ளமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பின் eselect kernel மற்றும் make கட்டளைகளை பயன்படுத்தி நிறுவப்படுகிறது. எதிர்காலத்தில் கருநிரலை இற்றைப்படுத்த இந்த செயல்களை (உள்ளமைத்தல், உருவாக்குதல் மற்றும் நிறுவுதல்) கைமுறையாக மீண்டும் செய்ய வேண்டி இருக்கும். இது அதிகமாக ஈடுபட வேணடிய செயல்முறை என்பதால் கருநிரல் இற்றைப்படுத்தல் செயல்முறையில் அதிக கட்டுப்படுத்தும் ஆற்றலை அளிக்கிறது.