கையேடு:SPARC/நிறுவல்/அடிப்படை
Chroot செய்தல்
விரும்பினால்: கண்ணாடிகளை தேர்வு செய்தல்
வழங்கல் கோப்புகள்
It is safe to skip this step when using non-Gentoo installation media. The app-portage/mirrorselect package can be emerged later within the stage3 (after Entering the new environment) and the actions defined in this section can be performed at that point.
மூலநிரல் கோப்புகளை விரைவாகப் பதிவிறக்க வேகமான கண்ணாடி தளத்தைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்கிறோம். Portage make.conf கோப்பினுள் உள்ள GENTOO_MIRRORS மாறியைக் கண்டறிந்து அதில் பட்டியலிடப்பட்டுள்ள கண்ணாடி தளங்களைப் பயன்படுத்தும். ஜென்டூ கண்ணாடி பட்டியலில் முறைமை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள (பெரும்பாலும் வேகமானதாக இருக்கும் என்பதால்) கண்ணாடி தளத்தை (அல்லது கண்ணாடி தளங்களை) தேட முடியும். இதை எளிமையாக்கும் நோக்கில், நாங்கள் பயனர்களுக்கு நல்ல இடைமுகத்தைக் கொண்டுள்ள mirrorselect கருவியை அளிக்கிறோம். இதன்மூலம் தேவையான கண்ணாடி தளங்களைத் தேர்வு செய்யப் பட்டியலில் விருப்பமான கண்ணாடி தளங்களைக் கண்டறிந்து Spacebar விசையை அழுத்தி ஒன்று அல்லது அதற்கு மேல் உள்ள கண்ணாடி தளங்களைத் தேர்வு செய்யவும்.
root #
mirrorselect -i -o >> /mnt/gentoo/etc/portage/make.conf
ஜென்டூ ebuild கருவூலம்
கண்ணாடி தளங்களைத் தேர்வு செய்வதில் உள்ள இரண்டாவது முக்கியமான படிநிலை /etc/portage/repos.conf/gentoo.conf கோப்பு மூலம் ஜென்டூ ebuild கருவூலத்தை உள்ளமைத்தல். இந்த கோப்பு தொகுப்பு கருவூலத்தை (Portage ற்கு மென்பொருள் தொகுப்புகளைப் பதிவிறக்கி நிறுவுவதற்குத் தேவையான ebuild கள் மற்றும் அதனைச் சார்ந்த தகவல்களை உள்ளடக்கிய கோப்புகளின் திரளாகும்) புதுப்பிப்பதற்குத் தேவையான ஒத்திசைவு தகவல்களைக் கொண்டுள்ளது.
கருவூலத்தை சில எளிமையான படிநிலைகளில் உள்ளமைத்துவிடலாம். முதலில், ஏற்கனவே இல்லையென்றால் repos.conf அடைவை உருவாக்கவும்:
root #
mkdir --parents /mnt/gentoo/etc/portage/repos.conf
அடுத்து, Portage ஆல் வழங்கப்பட்ட ஜென்டூ கருவூல உள்ளமைவு கோப்பை repos.conf (புதிதாக உருவாக்கப்பட்ட) அடைவில் நகலெடுத்து வைக்கவும்:
root #
cp /mnt/gentoo/usr/share/portage/config/repos.conf /mnt/gentoo/etc/portage/repos.conf/gentoo.conf
உரை திருத்தியைக் கொண்டு அல்லது cat கட்டளையைப் பயன்படுத்திப் பார்வையிடவும். கோப்பின் உள்ளில் .ini வடிவமைப்பிலிருந்து இவ்வாறாகக் காட்சியளிக்கும்:
/mnt/gentoo/etc/portage/repos.conf/gentoo.conf
[DEFAULT] main-repo = gentoo [gentoo] location = /var/db/repos/gentoo sync-type = rsync sync-uri = rsync://rsync.gentoo.org/gentoo-portage auto-sync = yes sync-rsync-verify-jobs = 1 sync-rsync-verify-metamanifest = yes sync-rsync-verify-max-age = 24 sync-openpgp-key-path = /usr/share/openpgp-keys/gentoo-release.asc sync-openpgp-key-refresh-retry-count = 40 sync-openpgp-key-refresh-retry-overall-timeout = 1200 sync-openpgp-key-refresh-retry-delay-exp-base = 2 sync-openpgp-key-refresh-retry-delay-max = 60 sync-openpgp-key-refresh-retry-delay-mult = 4
மேலுள்ள பட்டியலில் உள்ள முன்னிருப்பு sync-uri மாறியின் மதிப்பு சுழல் முறையில் கண்ணாடி இடத்தை தீர்மானிக்கிறது. இது ஜென்டு கட்டுமானத்தில் உள்ள கற்றையகல அழுத்தத்தைக் குறைத்து, குறிப்பிட்ட ஒரு கண்ணாடி தளம் அணைவரியில் இருக்கும் சூழலில் இது தோல்வி-ஏற்படா முறையை அளித்து உதவுகிறது. உள்ளூர் மற்றும் தனியார் Portage கண்ணாடியைப் பயன்படுத்தும்போது தவிர மற்ற நேரங்களில் முன்னிருப்பு URI ஐ தக்க வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்களுக்கு, Portage இன் உட்செருகு ஒத்திசைவு API கான அதிகாரப்பூர்வ விவரக்கூற்று Portage செயல்திட்டத்தின் ஒத்திசைவு கட்டுரையில் காணலாம்.
DNS விவரங்களை நகலெடுத்து வைத்தல்
புதிய சூழலுக்குள் நுழைவதற்கு முன் இன்னும் ஒரு செயல் செய்ய வேண்டியுள்ளது. அது /etc/resolv.conf கோப்பில் உள்ள DNS விவரங்களை நகலெடுப்பதாகும். புதிய சூழலுக்குள் சென்ற பிறகும் வலையமைப்பு வேளை செய்வதை உறுதிசெய்துகொள்ள இது தேவையானதாகும். /etc/resolv.conf கோப்பு வலையமைப்பிற்கான பெயர்-சேவையகங்களைக் கொண்டுள்ளது.
இந்த தகவல்களை நகலெடுப்பதற்கு, cp கட்டளையைப் பயன்படுத்தும்போது --dereference
விருப்பத்தேர்வை அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம். ஒருவேளை /etc/resolv.conf என்பது ஒரு குறியீட்டுத் தொடுப்பாக இருந்தால் இதை நகலெடுக்காமல் இது காட்டும் இலக்கு கோப்பை நகலெடுக்கும். இல்லையென்றால், புதிய சூழலில் உள்ள குறியீட்டுத் தொடுப்பு இல்லாத ஒரு கோப்பை நோக்கி இருக்கும் (பெரும்பாலும் தொடுப்பு காட்டும் இலக்கு புதிய சூழலுக்குள் கிடைக்காமல் போகலாம்).
root #
cp --dereference /etc/resolv.conf /mnt/gentoo/etc/
தேவையான கோப்பு முறைமைகளை ஏற்றுதல்
இன்னும் சில நேரத்தில், லினக்ஸ் வேர் புதிய இடத்திற்கு மாறிவிடும். புதிய சூழல் சரியாக வேளை செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள, சில கோப்பு முறைமைகள் அங்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
கிடைக்கும்படி செய்ய வேண்டிய கோப்பு முறைமைகள்:
- /proc/ இது ஒரு போலி-கோப்பு முறைமையாகும் (பார்ப்பதற்கு வழக்கமான கோப்புகள் போலத் தோன்றினாலும் இவை போகிற போக்கில் உருவாக்கப்பட்டவை). இதனைப் பயன்படுத்தி லினக்ஸ் கர்னலானது சூழலுக்குத் தகவல்களைத் தெரியப்படுத்துகிறது.
- /sys/ இதுவும் /proc/ ஐ போல் ஒரு போலி-கோப்பு முறைமையாகும். /proc/ விட மேம்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இது ஒருகாலத்தில் இதற்கு மாற்றாகப் பார்க்கப்பட்டது.
- /dev/ என்பது வழக்கமான கோப்பு முறைமையாகும். இது லினக்ஸ் சாதன மேலாளரால் (பொதுவாக udev) ஓரளவு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.
- /run/ என்பது PID கோப்புகள் அல்லது பூட்டுகள் போன்ற இயக்க நேரத்தில் உற்பத்தியாகும் கோப்புகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு தற்காலிக கோப்பு முறைமையாகும்.
/proc/ இருப்பிடம் /mnt/gentoo/proc/ இன் மேல் ஏற்றப்படும். மற்றவை கட்டி-ஏற்றப்படுகிறது. இறுதியாகக் கூறப்பட்டதன் பொருள், எடுத்துக்காட்டாக, /mnt/gentoo/sys/ என்பது உண்மையில் /sys/ ஆக இருக்கும் (ஒரே கோப்பு முறைமையில் இது வெறும் இரண்டாவது நுழைவு புள்ளிதான்), ஆனால் /mnt/gentoo/proc/ பொருத்தவரை இது கோப்பு முறைமையில் (எடுத்துக்காட்டாக பேசுகையில்) உள்ள ஒரு புதிய ஏற்றுப்புள்ளியாகும்.
root #
mount --types proc /proc /mnt/gentoo/proc
root #
mount --rbind /sys /mnt/gentoo/sys
root #
mount --make-rslave /mnt/gentoo/sys
root #
mount --rbind /dev /mnt/gentoo/dev
root #
mount --make-rslave /mnt/gentoo/dev
root #
mount --bind /run /mnt/gentoo/run
root #
mount --make-slave /mnt/gentoo/run
--make-rslave
செயல்பாடுகள் systemd ஆதரவிற்கு நிறுவலில் பின்னர் தேவைப்படும்.ஜென்டூ அல்லாத ஊடகத்தைப் பயன்படுத்தும்போது, இது போதாமல் போகலாம். சில வழங்கல்கள் /dev/shm ஐ /run/shm/ ற்கான குறியீட்டுத் தொடுப்பாக உருவாக்குகின்றன என்றாலும் இவை chroot செய்தபிறகு, செல்லாததாகி விடுகிறது. /dev/shm/ ஐ முறையான tmpfs ஏற்ற முன்னணியாகச் செய்வது இதைச் சரிசெய்யும்.
root #
test -L /dev/shm && rm /dev/shm && mkdir /dev/shm
root #
mount --types tmpfs --options nosuid,nodev,noexec shm /dev/shm
பயன்முறை 1777 அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
root #
chmod 1777 /dev/shm /run/shm
புதிய சூழலுக்குள் நுழைதல்
இப்போது எல்லா பகிர்வுகளும் துவக்கப்பட்டு அடிப்படை சூழல் நிறுவப்பட்டுவிட்டதால், புதிய நிறுவல் சூழலினுள் chroot செய்து நுழைவதற்கான நேரம் வந்துவிட்டது. இதன் பொருள், அமர்வானது அதன் வேரை (அணுகக்கூடியதிலேயே மிகவும் உயர்நிலை இருப்பிடம்) இப்போதுள்ள நிறுவல் சூழலில் (நிறுவல் குறுந்தகடு அல்லது மற்ற நிறுவல் ஊடகத்தில்) இருந்து நிறுவல் முறைமைக்கு (அதாவது துவக்கப்பட்ட பகிர்வுகளுக்கு) மாற்றும். வேரை மாற்றுவதால் (change root) இந்த செயலை chroot என அழைக்கிறோம்.
chroot செயலை மூன்று படிநிலைகளில் செய்து முடிக்கலாம்:
- வேர் இருப்பிடம் நிறுவல் ஊடகத்தில் உள்ள / இல் இருந்து பகிர்வுகளில் உள்ள /mnt/gentoo/ க்கு chroot மூலம் மாற்றப்படும்.
- source கட்டளையைப் பயன்படுத்தி /etc/profile இல் உள்ள சில அமைப்புகளை நினைவகத்தில் மறு ஏற்றப்படுகிறது.
- நாம் chroot சூழலுக்குள் உள்ளோம் என்பதை நினைவு படுத்த முதன்மை தூண்டியை மாற்றப்படுகிறது.
root #
chroot /mnt/gentoo /bin/bash
root #
source /etc/profile
root #
export PS1="(chroot) ${PS1}"
இந்த இடத்திலிருந்து, மேற்கொள்ளப்படும் எல்லா செயல்களும் உடனடியாக ஜென்டூ லினக்ஸ் சூழலில் எதிரொளிக்கும். ஐயத்திற்கு இடமின்றி நிறுவலை முடிப்பதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவலில் இன்னும் சில பக்கங்கள் உள்ளதைக் காணலாம்.
இந்த இடத்திற்குப் பிறகு எங்காவது ஜென்டூ நிறுவல் தடைப்பட்டால், இந்த படிநிலையிலிருந்து மீண்டும் தொடர கண்டிப்பாக வாய்ப்புள்ளது. வட்டை மீண்டும் பகிர்வு செய்ய வேண்டிய தேவையில்லை! எளிமையாக வேர் பகிர்வை ஏற்றிய பின் மேலுள்ள DNS தகவலை நகலெடுத்து வைத்தல் பிரிவில் கூறப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றி வேலைசெய்து கொண்டிருக்கும் சூழலுக்குள் மீண்டும் செல்லவும். மேலும் இது துவக்க ஏற்றிச் சிக்கல்களைத் தீர்க்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் தகவல்களை chroot கட்டுரையில் காணலாம்.
Portage ஐ உள்ளமைத்தல்
இணையத்தை கொண்டு ஜென்டூ ebuild கருவூல நொடிப்பெடுப்பை நிறுவுதல்
அடுத்த படிநிலை ஜென்டூ ebuild கருவூலத்தின் நொடியெடுப்பை நிறுவுதலாகும். இந்த நொடியெடுப்பானது கிடைக்கும் மென்பொருட்களின் தலைப்புகள் (நிறுவலுக்காக), எந்த தனியமைப்பை முறைமை மேலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும், தொகுப்பு அல்லது தனியமைப்பு சார்ந்த செய்தி உருப்படிகள் முதலியவற்றை Portage ற்கு தெரிவிக்கும் கோப்புகளின் திரள்களைக் கொண்டுள்ளது.
emerge-webrsync ஐ கட்டுப்படுத்தப்பட்ட தீயரண்களுக்கு பின்னால் உள்ளவர்களும் (இது நொடிப்பெடுப்பை பதிவிறக்குவதற்கு HTTP/FTP நெறிமுறையைப் பயன்படுத்துவதால்), வலையமைப்பு கற்றையகலத்தை சேமிக்க விரும்புவோர்களும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. வலையமைப்பு அல்லது கற்றையகல கட்டுப்படுத்தல்கள் எதுவும் இல்லாத படிப்பவர்கள் இதை வெளிப்படையாகத் தவிர்த்து அடுத்த பிரிவிற்குச் செல்லலாம்.
இது ஜென்டூவின் கண்ணாடி தளங்களுள் ஒன்றிலிருந்து அண்மை நொடியெடுப்பை (நாள் அடிப்படையில் வெளிவரும்) எடுத்துவந்து முறைமையில் நிறுவும்:
root #
emerge-webrsync
செயல்பாட்டின் போது, emerge-webrsync பயன்கூறு நிரலானது /var/db/repos/gentoo/ இருப்பிடம் காணவில்லை என முறையிடலாம். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் இதைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை - கருவி அதற்குரிய இடத்தை உருவாக்கும்.
இந்த இடத்திலிருந்து, சில புதுப்பித்தல்களை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என Portage குறிப்பிடலாம். இதற்குக் காரணம், நிலை கோப்பு மூலம் நிறுவப்பட்ட முறைமை தொகுப்புகளுக்கான புதிய பதிப்புகள் இப்போது கிடைக்கப் பெறலாம்; கருவூல நொடியெடுப்பின் மூலம் புதிய தொகுப்புகளைப் பற்றி இப்போது Portage அறிந்திருக்கும். தொகுப்பு புதுப்பித்தல்களை இப்போதைக்கு தவிர்த்துக்கொள்ளலாம்; இதை ஜென்டூ நிறுவல் முடியும் வரை தள்ளிப் போடலாம்.
விரும்பினால்: ஜென்டூ ebuild கருவூலத்தை புதுப்பித்தல்
ஜென்டூ ebuild கருவூலத்தை அண்மை பதிப்பிற்குப் புதுப்பிக்க வாய்ப்புள்ளது. முன் கூறிய emerge-webrsync கட்டளை மிக சமீபத்திய நொடிப்பெடுப்பை நிறுவியிருக்கும் (பெரும்பாலும் 24 மணிக்குள் வெளிவந்த), ஆகையால் இந்த படியை விரும்பினால் தொடரலாம்.
கடைசியாக வெளிவந்த தொகுப்பு புதுப்பித்தல்கள் தேவைப்படுகிறது என வைத்துக்கொள்வோம் (1 மணிக்கு முன்பு வரை வெளிவந்தவை). அப்போது emerge --sync ஐ பயன்படுத்தவும். இந்த கட்டளை rsync நெறிமுறையைப் பயன்படுத்தி ஜென்டூ ebuild கருவூலத்தை (emerge-webrsync கட்டளை மூலம் முன்னதாக எடுத்துவரப்பட்டதை) புதுப்பித்து முறைமையை அண்மை நிலையில் வைக்கிறது.
root #
emerge --sync
சட்ட இடையகங்கள் அல்லது தொடர் முனையங்கள் போன்ற மெதுவான முனையங்களில் செயல்பாடுகளை வேகப்படுத்த --quiet
விருப்பத்தேர்வைப் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கப்படுகிறது.
root #
emerge --sync --quiet
செய்தி உருப்படிகளை படித்தல்
ஜென்டூ ebuild கருவூலம் ஒத்திசைக்கும்போது, பின்வரும் செய்தியை ஒத்த தகவல் செய்திகளை Portage வெளியிடலாம்:
* IMPORTANT: 2 news items need reading for repository 'gentoo'.
* Use eselect news to read news items.
ஜென்டூ ebuild கருவூலத்தின் மூலம் தீவிரமான செய்திகளைப் பயனர்களுக்குத் தெரிவிப்பதற்கான உரையாடல் ஊடகத்தை அளிப்பதற்காகச் செய்தி உருப்படிகள் உருவாக்கப்பட்டன. இதை மேலாண்மை செய்ய eselect news ஐ பயன்படுத்தவும். ஜென்டூ சார்ந்த பயன்கூறு நிரலான eselect என்னும் செயலி முறைமையை மேலாண்மை செய்வதற்கான பொதுவான மேலாண்மை இடைமுகத்தை அனுமதிக்கிறது. இந்த வழக்கில், eselect இல் news
கூறு சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
news
கூறிற்கு, மூன்று செயல்பாடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன:
list
மூலம் இருக்கும் செய்தி உருப்படிகளின் மேலோட்டத்தைக் காணலாம்.read
மூலம் செய்தி உருப்படிகளைப் படிக்கலாம்.purge
மூலம் செய்தி உருப்படிகளைப் படித்தவுடன் மீண்டும் படிக்க இயலாத வகையில் நீக்கவிடலாம்.
root #
eselect news list
root #
eselect news read
செய்தி படிப்பானைப் பற்றி மேலும் தகவல்கள் அதன் கைமுறை பக்கத்தில் காணலாம்:
root #
man news.eselect
சரியான தனியமைப்பைத் தேர்வு செய்தல்
Desktop profiles are not exclusively for desktop environments. They are still suitable for minimal window managers like i3 or sway.
தனியமைப்பு எந்தவொரு ஜென்டூ முறைமைக்கும் கட்டுமான தொகுதியாகும். இது USE, CFLAGS மற்றும் பல முக்கியமான மாறிகளுக்கு முன்னிருப்பு மதிப்புகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட தொகுப்பு பதிப்புகளின் வரம்பை முறைமையோடு பூட்டி வைக்கிறது. இந்த அமைப்புகள் எல்லாம் ஜென்டூ Portage உருவாக்குநர்களால் பராமரிக்கப்படுகிறது.
முறைமை இப்போது எந்த தனியமைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை காண, eselect கட்டளையில் இப்போது profile
என்னும் கூறையும் சேர்த்து இயக்கவும்:
root #
eselect profile list
Available profile symlink targets: [1] default/linux/sparc/ * [2] default/linux/sparc//desktop [3] default/linux/sparc//desktop/gnome [4] default/linux/sparc//desktop/kde
கட்டளையின் வெளியீடு வெறும் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, இது காலத்திற்கு தகுந்தவாறு மாறலாம்.
Systemd ஐ பயன்படுத்தினால், தனியமைப்பு பெயரில் systemd என்பது சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். OpenRC ஐ பயன்படுத்தினால், தனியமைப்பு பெயரில் systemd என்பது சேர்க்கப்படாமல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இதில் இருப்பதைப் போல், சில கட்டமைப்புகளுக்கான திரைபலக துணை தனியமைப்புக்களும் கிடைக்கின்றன.
தனியமைப்பு திறமுயர்த்தலை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. துவக்கத் தனியமைப்பைத் தேர்வு செய்யும்போது, துவக்கத்தில் நிலை3 ஆல் பயன்படுத்தப்பட்ட பதிப்பிற்குத் தொடர்புடைய அதே பதிப்பை கொண்ட தனியமைப்பு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்து கொள்ளவும். ஒவ்வொரு புதிய தனியமைப்பு பதிப்பும் அதன் குடிபெயர்தல் வழிகாட்டுதல்களைக் கொண்ட செய்தி உருப்படி மூலம் அறிவிக்கப்படுகிறது. புதிய தனியமைப்பிற்கு மாறுவதற்கு முன் மறக்காமல் இதைப் படித்து பின் இதில் உள்ளதைப் பின்பற்றவும்.
sparc கட்டமைப்பிற்கான தனியமைப்புகளைப் பார்வையிட்ட பின், பயனர்கள் முறைமைக்கான வெவ்வேறு தனியமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்:
root #
eselect profile set 2
developer
துணை தனியமைப்பு ஜென்டூ லினக்ஸ் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டது. ஆகையால் வழக்கமான பயனர்கள் பயன்படுத்துவதற்குத் தகுந்ததல்ல.@world தொகுப்பை புதுப்பித்தல்
இந்த இடத்தில், அடிப்படை முறைமையை நிறுவுவதற்கு முறைமையின் @world தொகுப்பை புதுப்பிக்கவும்.
பின்வரும் படிநிலையானது நிலை3 உருவாக்கலிலிருந்தும் தனியமைப்பைத் தேர்வு செய்தலுக்கு பிறகும் ஏற்பட்ட USE கொடி மாற்றங்கள் மற்றும் ஏதாவது புதுப்பித்தல்களை முறைமையில் இடுவதற்கான கட்டாய தேவையாகும்:
root #
emerge --ask --verbose --update --deep --newuse @world
முழு அளவிலான திரைப்புலச் சூழல் தனியமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த செயல்பாடு நிறுவல் செயல்பாட்டின் நேர அளவை கணிசமாக அதிகரிக்கும். நேர நெருக்கடியில் உள்ளவர்கள் இந்த 'குத்துமதிப்பு விதியை' பயன்படுத்தலாம்: எவ்வளவு குறைவாகத் தனியமைப்பு பெயர் உள்ளதோ, அவ்வளவு குறைவாக முறைமையின் @world தொகுப்பு அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்; எவ்வளவு குறைவாக @world தொகுப்பு அளவு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவ்வளவு குறைவான தொகுப்புகள் தான் முறைமைக்குத் தேவைப்படும். இதை இன்னொரு விதமாகக் கூற வேண்டும் என்றால்:
default/linux/amd64/
என்னும் தனியமைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது குறைந்த அளவிலான தொகுப்புகள் மட்டுமே நிறுவலுக்குத் தேவைப்படும். ஆனால்default/linux/amd64//desktop/gnome/systemd
என்னும் தனியமைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது init முறைமையை OpenRC இல் இருந்து Systemd ற்கு மாற்றுவதாலும், GNOME திரைப்புலச் சூழல் சட்டகம் நிறுவப்படவிருப்பதாலும் நிறையத் தொகுப்புகள் நிறுவலுக்குத் தேவைப்படும்.
USE மாறிகளை உள்ளமைத்தல்
USE மாறி ஜென்டூ தனது பயனர்களுக்கு அளிக்கும் திறன்மிகு மாறிகளுள் ஒன்றாகும். இதன்மூலம் பல்வேறு நிரல்களை சில உருப்படிகளின் ஆதரவு இருந்தும் இல்லாமலும் தொகுக்கலாம். எடுத்துக்காட்டாக, சில நிரல்கள் GTK+ கான ஆதரவுடனும் அல்லது Qt கான ஆதரவுடனும் தொகுக்கலாம். மற்றவற்றை SSL கான ஆதரவு இருந்தும் இல்லாமலும் தொகுக்கலாம். சில நிரல்களை X11 (X-சேவையகம்) ஆதரவிற்குப் பதிலாகச் சட்ட இடையகத்திற்கான (svgalib) ஆதரவைக் கொண்டும் தொகுக்கலாம்.
பெரும்பாலான வழங்கல்கள் தொகுப்புகளைத் தொகுக்கும்போது வாய்ப்புள்ள எல்லா ஆதரவுகளையும் கொண்டு தொகுப்பதால், நிரலின் அளவும் அதன் துவக்க நேரமும் கணிசமாகக் கூடுகிறது, மேலும் இதற்குத் தேவையான சார்புநிலை தொகுப்புக்களும் மலைபோல் கூவிய துவங்கிவிடுகின்றன. ஜென்டூவின் மூலம் பயனர்கள் ஒரு தொகுப்பு என்ன விருப்பத்தேர்வுகளுடன் தொகுக்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்க முடியும். இந்த இடத்தில் தான் USE இன் பணி துவங்குகிறது.
USE மாறியில் பயனர் வரையறுக்கும் திறவுச்சொல் தொகுப்பு-விருப்பத்தேர்வுகளோடு இணைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ssl
என்பது SSL ஆதரவு தேவைப்படும் நிரல்களைத் தொகுக்கும்போது அதன் ஆதரவோடு சேர்த்துத் தொகுக்கும். -X
ஆனது X-சேவையகத்திற்கான ஆதரவை நீக்கிவிடும் (முன் உள்ள கழித்தல் (-) குறியைக் கவனிக்கவும்). gnome gtk -kde -qt5
எனக் குறிப்பிடும்போது KDE (மற்றும் Qt) கான ஆதரவு இல்லாமல் Gnome (மற்றும் GTK+) க்கான ஆதரவைக் கொண்டு நிரல்களைத் தொகுத்து, முறைமை முழுவதையும் GNOME ற்கானதாக அமைக்கும் (இதைக் கட்டமைப்பு ஆதரித்தால்).
முன்னிருப்பு USE அமைப்புகள் முறைமையால் பயன்படுத்தப்படும் ஜென்டூ தனியமைப்பின் make.defaults கோப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஜென்டூ தனது தனியமைப்புகளுக்கு (சிக்கலான) மரபுரிமை முறைமையைப் பயன்படுத்துகிறது, எனினும் இதை இந்த நிலையில் நாம் காணப்போவதில்லை. இப்போது செயல்பாட்டில் உள்ள USE அமைப்புகளைக் காண்பதற்கான எளிமையான வழி emerge --info ஐ இயக்கி USE எனத் தொடங்கும் வரியைக் காணுதலே ஆகும்.
root #
emerge --info | grep ^USE
USE="X acl alsa amd64 berkdb bindist bzip2 cli cracklib crypt cxx dri ..."
மேலுள்ள எடுத்துக்காட்டு துண்டாக்கிக் காட்டப்பட்டுள்ளது. உண்மையான USE மதிப்புகளின் பட்டியல் இதை விட மிகப் பெரியது.
கிடைக்கும் USE கொடிகளைப் பற்றிய முழு விளக்கமும் முறைமையில் உள்ள /var/db/repos/gentoo/profiles/use.desc என்னும் இருப்பிடத்தில் கண்டறியலாம்.
root #
less /var/db/repos/gentoo/profiles/use.desc
less கட்டளைக்குள், மேலும் கீழும் செல்ல முறையே ↑ மற்றும் ↓ விசையையும், வெளியேற q விசையையும் அழுத்தவும்.
எடுத்துக்காட்டாக, பல்திறன்வட்டு, ALSA மற்றும் குறுந்தகடு பதிவுசெய்தல் ஆதரவுடன் கூடிய KDE/Plasma அடிப்படையிலான முறைமைக்குத் தேவையான USE கொடிகளை அமைப்பதைக் காண்பித்துள்ளோம்:
root #
nano -w /etc/portage/make.conf
/etc/portage/make.conf
பல்திறன்வட்டு, ALSA மற்றும் குறுந்தகடு பதிவுசெய்தல் ஆதரவுடன் கூடிய KDE/Plasma அடிப்படையிலான முறைமைக்குத் தேவையான USE கொடிகளைச் செயல்படுத்துதல்USE="-gtk -gnome qt5 kde dvd alsa cdr"
/etc/portage/make.conf கோப்பில் USE கொடி வரையறுக்கப்படும்போது, முன்னிருப்பு பட்டியலில் அது சேர்த்தலோ (அல்லது கழித்தல் - குறியைக் கொண்டு தொடங்கப்பட்டால், நீக்கலோ) செய்யப்படும். எதாவது முன்னிருப்பு USE அமைப்புகளை இருந்தால் அதைத் தவிர்த்து விட்டு முழுமையாக தாங்களாகவே மேலாண்மை செய்ய விரும்பும் பயனர்கள் make.conf கோப்பில் உள்ள USE வரையறுத்தலை -*
ஐ கொண்டு தொடங்க வேண்டும்:
/etc/portage/make.conf
முன்னிருப்பு USE கொடிகளை தவிர்த்தல்USE="-X acl alsa"
வாய்ப்புகள் இருந்தாலும், சில தொகுப்புகளில் முரண்பாடு மற்றும் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட USE கொடிகள் முன்னிருப்பாக உள்ளமைக்கப்பட்டிருப்பதால்
-*
(மேலுள்ள எடுத்துக்காட்டில் உள்ளதுபோல்) அமைப்பது ஊக்கங்கெடுக்கப்பட்டுள்ளது.CPU_FLAGS_*
Some architectures (including AMD64/X86, ARM, PPC) have a USE_EXPAND variable called CPU_FLAGS_ARCH (replace ARCH with the relevant system architecture as appropriate).
This is used to configure the build to compile in specific assembly code or other intrinsics, usually hand-written or otherwise extra,
and is not the same as asking the compiler to output optimized code for a certain CPU feature (e.g. -march=
).
Users should set this variable in addition to configuring their COMMON_FLAGS as desired.
A few steps are needed to set this up:
root #
emerge --ask app-portage/cpuid2cpuflags
Inspect the output manually if curious:
root #
cpuid2cpuflags
Then copy the output into package.use:
root #
echo "*/* $(cpuid2cpuflags)" > /etc/portage/package.use/00cpu-flags
VIDEO_CARDS
The VIDEO_CARDS USE_EXPAND variable should be configured appropriately depending on the available GPU(s). The Xorg guide covers how to do this. Setting VIDEO_CARDS is not required for a console only install.
விரும்பினால்: ACCEPT_LICENSE மாறியை உள்ளமைத்தல்
எல்லா ஜென்டூ தொகுப்புகளும் அதற்குக் கீழுள்ள உரிமங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நிறுவுவதற்கு முன் குறிப்பிட்ட உரிமங்கள் அல்லது உரிம குழுக்கள் அடிப்படையில் மென்பொருளைப் பயனர் தேர்ந்தெடுத்து நிறுவ முடியும்.
- System wide in the selected profile.
- System wide in the /etc/portage/make.conf file.
- Per-package in a /etc/portage/package.license file.
- Per-package in a /etc/portage/package.license/ directory of files.
ஜென்டூ, தனியமைப்பில் முன் வரையறுக்கப்பட்ட மதிப்போடு வருகிறது. எடுத்துக்காட்டாக:
user $
portageq envvar ACCEPT_LICENSE
@FREE
இதை /etc/portage/make.conf கோப்பில் மாற்றங்கள் செய்வது மூலம் முறைமை முழுமைக்குமானதாக தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, திறந்த மூல முன்னெடுப்பு அல்லது திறந்த மென்பொருள் வரையறுத்தலைப் பின்பற்றும் உரிமங்களை மட்டுமே முன்னிருப்பு மதிப்பு அனுமதிக்கும்:
/etc/portage/make.conf
ACCEPT_LICENSE ஐ தனிப்பயனாக்கல்ACCEPT_LICENSE="-* @FREE"
ஒவ்வொரு தொகுப்புகளுக்குமான விதிவிலக்குகள் பின் தேவைப்பட்டால் அல்லது விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம், எடுத்துக்காட்டாக:
/etc/portage/package.license/kernel
மாதிரி உரிம ஒப்புதல்app-arch/unrar unRAR sys-kernel/linux-firmware @BINARY-REDISTRIBUTABLE sys-firmware/intel-microcode intel-ucode
root #
mkdir /etc/portage/package.license
/etc/portage/package.license/kernel
Example how to accept licenses per-packageapp-arch/unrar unRAR sys-kernel/linux-firmware @BINARY-REDISTRIBUTABLE sys-firmware/intel-microcode intel-ucode
ebuild இல் உள்ள LICENSE மாறியானது ஜென்டூ உருவாக்குநர்கள் மற்றும் பயனர்களுக்கான வழிகாட்டி மட்டுமே, சட்ட வாக்குமூலம் இல்லை. மேலும் இது நடைமுறையில் எதிரொலிக்கும் என எந்த பொறுப்புறுதியும் இல்லை. அதனால் இதை நம்பி இருக்க வேண்டாம். பயன்படுத்தப்படும் எல்லா கோப்புகளையும் சேர்த்துத் தொகுப்பை ஆழமாகச் சரிபார்க்கவும்.
ஜென்டூ கருவூலத்தில் வரையறுக்கப்பட்டுள்ள உரிம குழுக்கள் ஜென்டூ உரிம செயற்றிட்டத்தால் மேலாண்மை செய்யப்படுகிறது. இவை:
குழு பெயர் | விளக்கம் |
---|---|
@GPL-COMPATIBLE | கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட GPL இசைவுடை மென்பொருள் [உரிமம் 1] |
@FSF-APPROVED | கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் (@GPL-COMPATIBLE ஐ சேர்த்து) |
@OSI-APPROVED | திறந்த மூல முன்னெடுப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமங்கள் [உரிமம் 2] |
@MISC-FREE | வகையுறா உரிமங்கள் பெரும்பாலும் கட்டற்ற மென்பொருள் அதாவது கட்டற்ற மென்பொருள் வரையறுத்தலைப் பின்பற்றக்கூடியதாக இருக்கும் [உரிமம் 3] ஆனால் FSF மற்றும் OSI ஆகிய இவ்விரண்டாலும் ஏற்றுக் கொள்ளப்படாதவை |
@FREE-SOFTWARE | @FSF-APPROVED, @OSI-APPROVED மற்றும் @MISC-FREE ஆகிய மூன்றின் கூட்டு |
@FSF-APPROVED-OTHER | "திறந்த ஆவணப்படுத்தல்" மற்றும் "மென்பொருள் மற்றும் ஆவணங்கள் தவிர நடைமுறை பயன்பாட்டின் பணிகள்" (எழுத்துருக்களோடு சேர்த்து) ஆகியவற்றிற்கான FSF ஆல் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமங்கள் |
@MISC-FREE-DOCS | கட்டற்ற வரையறுத்தலைப் பின்பற்றும் கட்டற்ற ஆவணங்கள் மற்றும் இதர பணிகளுக்கான (எழுத்துருக்களோடு சேர்த்து) வகையுறா உரிமங்கள் [உரிமம் 4] ஆனால் இவை @FSF-APPROVED-OTHER இல் பட்டியலிடப்படவில்லை |
@FREE-DOCUMENTS | @FSF-APPROVED-OTHER மற்றும் @MISC-FREE-DOCS ஆகிய இரண்டின் கூட்டு |
@FREE | பயன்படுத்த, பகிர, திருத்த மற்றும் திருத்தியதைப் பகிர விடுதலையை அளிக்கும் எல்லா உரிமங்களின் மீதொகுப்பாகும். @FREE-SOFTWARE மற்றும் @FREE-DOCUMENTS ஆகிய இரண்டின் கூட்டு |
@BINARY-REDISTRIBUTABLE | குறைந்தது இரும வடிவிலான மென்பொருளின் கட்டற்ற மறுவழங்கலையாவது ஏற்றுக் கொள்ளும் உரிமங்கள். @FREE ஐ சேர்த்து |
@EULA | இவ்வகை உரிம உடன்படிக்கைகள் உங்கள் உரிமையை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யும். "அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை" அல்லது வெளிப்படையான ஏற்றுக்கொள்ளுதல் தேவைப்படும் உரிமங்களை விட இது கட்டுப்பாடுகள் நிறைந்தது |
விரும்பினால்: systemd ஐ init முறைமையாக பயன்படுத்துதல்
மீதமுள்ள ஜென்டூ கையேடு OpenRC (ஜென்டூவின் மரபுவழி init முறைமை) ஐ முன்னிருப்பு init முறைமையாகப் பின்பற்றி அமைந்துள்ளது. systemd ஐ விரும்பினால், systemd கட்டுரையைக் காணவும். இதில் உள்ள வழிமுறைகள் கையேட்டின் பின்வரும் பரிவுகளில் உள்ள வழிமுறைகளை ஒத்து இருக்கும். குறிப்பாக, வெவ்வேறு init முறைமை கட்டளைகள் (systemctl) மற்றும் வேலைசெய்யக் கூடிய systemd சூழலை உருவாக்குவதற்கான systemd சார்ந்த சேவைகள் (timedatectl, hostnamectl போன்றவற்றை) பற்றி படிப்பவர்களுக்கு எடுத்துரைக்கிறது.
நேரவலயம்
This step does not apply to users of the musl libc. Users who do not know what that means should perform this step.
முறைமைக்கான நேரவலயத்தை தேர்ந்தெடுக்கவும். இதற்கு /usr/share/zoneinfo/ என்னும் கோப்பில் கிடைக்கும் நேரவலயங்களை பார்க்கவும்:
root #
ls /usr/share/zoneinfo
ஒருவேளை உங்கள் நேரவலய தேர்வு Europe/Brussels ஆக இருந்தால்.
OpenRC
நாம் நேரவலய பெயரை /etc/timezone கோப்பினுள் இவ்வாறாக எழுதுவோம்.
root #
echo "Europe/Brussels" > /etc/timezone
/usr/share/zoneinfo/Etc/GMT* நேரவலயங்களை தவிர்க்கவும். இதன் பெயர்களை அறிந்த வலையங்களில் எதையும் சுட்டிக்காட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, GMT-8 உண்மையில் GMT+8 ஆகும்.
அடுத்து, sys-libs/timezone-data தொகுப்பை மறு உள்ளமைவு செய்யவும். இது /etc/timezone பதிவை அடிப்படையாகக் கொண்டு /etc/localtime கோப்பை நமக்காகப் புதுப்பிக்கும். முறைமை எங்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள /etc/localtime கோப்பை முறைமை C தரவகம் பயன்படுத்துகிறது.
root #
emerge --config sys-libs/timezone-data
systemd
இங்குச் சற்று மாறுபட்ட வழி கையாளப்பட்டுள்ளது; குறியீட்டுத் தொடுப்பானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது:
root #
ln -sf ../usr/share/zoneinfo/Europe/Brussels /etc/localtime
பின்பு, systemd இயங்கிக்கொண்டிருக்கும் போது, timedatectl கட்டளையைக் கொண்டு நேரவலயம் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளை உள்ளமைக்கலாம்.
நிகழ்வு இயலிடங்களை உள்ளமைத்தல்
This step does not apply to users of the musl libc. Users who do not know what that means should perform this step.
நிகழ்வு இயலிடத்தை உற்பத்தி செய்தல்
பெரும்பாலான பயனர்கள் தங்கள் முறைமையில் ஒன்று அல்லது இரண்டு நிகழ்வு இயலிடங்களை பயன்படுத்துவர்.
நிகழ்வு இயலிடங்கள் முறைமையோடு பயனர் உரையாடப் பயன்படுத்தும் மொழியை மட்டுமில்லாமல் சரங்களை வரிசைப்படுத்தல், நாள் மற்றும் நேரங்களைக் காட்டுதல் முதலியவற்றிற்கான விதிகளையும் குறிப்பிடுகிறது. நிகழ்வு இயலிடங்கள் எழுத்துயர்நிலை உணர்வுடையது என்பதால் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளதோ அதைப் போலவே குறிப்பிட வேண்டும். கிடைக்கும் நிகழ்வு இயலிடங்களின் முழு பட்டியலை /usr/share/i18n/SUPPORTED என்னும் கோப்பில் கண்டறியலாம்.
ஆதரிக்கப்பட்ட முறைமை நிகழ்வு இயலிடங்கள் /etc/locale.gen கோப்பில் வரையறுக்கப்பட வேண்டும்.
root #
nano -w /etc/locale.gen
பின்வரும் நிகழ்வு இயலிடங்கள் ஆங்கிலம் (அமெரிக்க ஐக்கிய நாடு) மற்றும் ஜெர்மன் (ஜெர்மனி/இடாய்ச்சு நாடு) ஆகியவற்றை அதன் எழுத்துருக்களுடன் (UTF-8 போன்ற) சேர்த்து பெறுவதற்கான எடுத்துக்காட்டாகும்.
/etc/locale.gen
US மற்றும் DE நிகழ்வு இயலிடங்களை அதற்குரிய எழுத்து வடிவமைப்புகளுடன் செயல்படுத்துதல்en_US ISO-8859-1 en_US.UTF-8 UTF-8 de_DE ISO-8859-1 de_DE.UTF-8 UTF-8
பல செயலிகள் முறையாக உருவாக்குவதற்குத் தேவைப்படுவதால் குறைந்தது ஒரு UTF-8 நிகழ்வு இயலிடத்தையாவது சேர்க்க அழுத்தமாக பரிந்துரைக்கிறோம்.
அடுத்ததாக locale-gen கட்டளையை இயக்கவும். இது /etc/locale.gen கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நிகழ்வு இயலிடங்களையும் உற்பத்தி செய்யும்.
root #
locale-gen
தேர்ந்தெடுத்த நிகழ்வு இயலிடங்கள் இருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதற்கு, locale -a கட்டளையை இயக்கவும்.
On systemd installs, localectl can be used, e.g. localectl set-locale ... or localectl list-locales.
நிகழ்வு இயலிடத்தை தேர்வு செய்தல்
இது முடிந்தவுடன், இப்போது locale
கூறை பயன்படுத்தி முறைமை முழுமைக்குமான நிகழ்வு இயலிட அமைப்புகளை அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
eselect locale list ஐ கொண்டு, கிடைக்கும் இலக்குகளை காணலாம்:
root #
eselect locale list
Available targets for the LANG variable: [1] C [2] C.utf8 [3] en_US [4] en_US.iso88591 [5] en_US.utf8 [6] de_DE [7] de_DE.iso88591 [8] de_DE.iso885915 [9] de_DE.utf8 [10] POSIX [ ] (free form)
eselect locale set <எண்> ஐ கொண்டு, சரியான நிகழ்வு இயலிடத்தை தேர்வு செய்யலாம்:
root #
eselect locale set 9
கைமுறையாக, /etc/env.d/02locale கோப்பு மற்றும் Systemd கான /etc/locale.conf கோப்பை கொண்டும் இதைச் செய்து முடிக்கலாம்:
/etc/env.d/02locale
கைமுறையாக முறைமை நிகழ்வு இயலிட வரையறுத்தல்களை அமைத்தல்LANG="de_DE.UTF-8" LC_COLLATE="C.UTF-8"
நிகழ்வு இயலிடத்தை அமைப்பதனால் நிறுவலில் வரவிருக்கும் கர்னல் மற்றும் மென்பொருள் தொகுத்தலின்போது வரும் எச்சரிக்கைகள் மற்றும் பிழைகள் தவிர்க்கப்படும்.
இப்போது சூழலை மறு ஏற்றவும்:
root #
env-update && source /etc/profile && export PS1="(chroot) ${PS1}"
நிகழ்வு இயலிடத்தை தேர்ந்தெடுக்கும் செயலுக்கான கூடுதல் வழிகாட்டுதல்கள் நிகழ்வு இயலிடமாக்கலுக்கான வழிகாட்டி மூலம் அளிக்கப்பட்டுள்ளன. மற்றொரு ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரையான UTF-8 வழிகாட்டி, முறைமையில் UTF-8 ஐ செயல்படுத்துவதற்கான குறிப்பிட்ட தகவலை உள்ளடக்கியுள்ளது.