கையேடு:PPC/தொகுதிகள்/துவக்குதல்
முன்னிருப்பு: yaboot உடன் நிறுவல் குறுந்தகட்டிலிருந்து துவக்குதல்
நியு வர்ல்ட் இயந்திரங்களில், CD-ROM இல் நிறுவல் குறுந்தகட்டை வைத்து முறைமையை மீள்துவக்கவும். முறைமை துவக்க-மணி ஓசை கேட்கும்போது குறுந்தகடு ஏற்றப்படும்வரை C விசையை அழுத்திப் பிடித்திருக்கவும்.
நிறுவல் குறுந்தகடு ஏற்றப்பட்ட பின் திரையின் கீழ்ப் பகுதியில் ஒரு துவக்கத் தூண்டியைக் காணலாம்.
ppc32 என்று அழைக்கப்படும் இனப்பொதுவியல்பான கருநிரல் ஒன்றை நாங்கள் அளிக்கின்றோம். இந்த கருநிரலானது பல மையச்செயலகங்களுக்கான ஆதரவுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும் இது ஒற்றை மையச்செயலக இயந்திரங்களிலும் துவங்கும்.
சில கருநிரல் விருப்பத்தேர்வுகளை இந்த தூண்டியில் திருத்தியமைக்க முடியும். பின்வரும் அட்டவணையில் நீங்கள் சேர்க்கக்கூடிய துவக்க விருப்பத்தேர்வுகளுள் சிலவை பட்டியலிடப்பட்டுள்ளது.
துவக்க விருப்பத்தேர்வு | விளக்கம் |
---|---|
video | இந்த விருப்பத்தேர்வு பின்வரும் விற்பனையாளர் சார்ந்த இணைப்புகளுள் ஒன்றை ஏற்றுக்கொள்கிறது: nvidiafb, radeonfb, rivafb, atyfb, aty128 அல்லது ofonly. இந்த இணைப்பைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தெளிவுதிறன் புதுப்பிப்பு விகிதம் மற்றும் வண்ண ஆழத்தைக் குறிப்பிடவும். எடுத்துக்காட்டாக ATI Radeon சட்ட இடையகத்தை 1280x1024 தெளிவுதிறனில் 75Hz புதுப்பிப்பு விகிதத்தில் 32 இருமிகள் அளவுள்ள வண்ண ஆழத்தில் அமைக்க video=radeonfb:1280x1024@75-32 எனக் குறிப்பிடவும். முன்னிருப்பு வேலை செய்யவில்லை என்றால் அல்லது எதைத் தேர்வு செய்வது என்று தெரியவில்லை என்றால் video=ofonly எனக் குறிப்பிடவும். |
nol3 | சில PowerBook களில் நிலை 3 பதுக்ககத்தை முடக்குகிறது (குறைந்தது 17" தேவைப்படுகிறது) |
dofirewire | புற வன்தட்டுக்கள் போன்ற IEEE1394 (FireWire) சாதனங்களுக்கான ஆதரவைச் செயல்படுத்துகிறது. |
dopcmcia | PCMCIA வலையமைப்பு அட்டைகள் போன்ற PCMCIA சாதனங்களை நிறுவலின்போது பயன்படுத்த இந்த விருப்பத்தேர்வு செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். |
dosshd | sshd ஐ துவக்கும். ஈடுபடாத நிறுவல்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். |
passwd=foo | சமக்குறியை (=) அடுத்து வருவதை வேர் கடவுச்சொல்லாக அமைக்கும். தொலைநிலை நிறுவல்களுக்கு இதை dosshd உடன் சேர்த்துப் பயன்படுத்தவும். |
மேலுள்ள விருப்பத்தேர்வுகளைத் துவக்கத் தூண்டியில் பயன்படுத்த ppc32
ஐ தொடர்ந்து விரும்பிய விருப்பத்தேர்வைத் தட்டச்சு செய்யவும். பின்வரும் எடுத்துக்காட்டில் சாதனம் சார்ந்த இயக்கிக்கு பதிலாகத் திறந்த திடப்பொருள் சட்ட இடையகத்தை பயன்படுத்துமாறு கருநிரலை கட்டாயப்படுத்தப்படுகிறது.
boot:
ppc32 video=ofonly
விருப்பத்தேர்வுகள் எதுவும் தேவையில்லையென்றால் தூண்டியில் ppc32 என்று மட்டும் தட்டச்சு செய்யவும். இவ்வாறு செய்ததும் குறுந்தகட்டில் இருந்து முழு சென்டூ லினக்சு சூழல் ஏற்றப்படும்.
மாற்றாக: Pegasos முறைமையில் நிறுவல் குறுந்தகட்டை துவக்குதல்
Pegasos இல் குறுந்தகட்டை சொருகி SmartFirmware துவக்க தூண்டியில் cd /boot/menu
என தட்டச்சு செய்யவும்.
boot
cd /boot/menu
இது ஒரு சிறிய துவக்கப் பட்டியைத் திறக்கும். இதன்மூலம் பல்வேறு முன்-உள்ளமைக்கப்பட்ட ஒளி உள்ளமைவுகளுள் ஒன்றைப் பயனர் தேர்ந்தெடுக்க இயலும். சிறப்புத் துவக்க விருப்பத்தேர்வுகள் ஏதேனும் இருந்தால் மேலுள்ள Yaboot இல் குறிப்பிட்டுள்ளது போலக் கட்டளையோடு சேர்த்துப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக:
boot
cd /boot/pegasos video=radeonfb:1280x1024@75 mem=256M
முன்னிருப்பு கருநிரல் விருப்பத்தேர்வுகள் console=ttyS0,115200 console=tty0 init=/linuxrc looptype=squashfs loop=/image.squashfs cdroot root=/dev/ram0
உடன் முன்-உள்ளமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தவறு ஏற்பட்டால் இதை பயன்படுத்தவும்.
மாற்றாக: BootX உடன் நிறுவல் குறுந்தகட்டை துவக்குதல்
ஓல்ட் வேர்ல்ட் Mac உடன், நேரலை நிறுவல் குறுந்தகட்டின் துவக்கக்கூடிய பகுதியைப் பயன்படுத்த முடியாது. இதற்கு மிக எளிய தீர்வு, MacOS 9 அல்லது அதற்கு முந்தையதில் BootX என்ற கருவியைக் கொண்டு லினக்சு சூழலில் தொடங்க வைப்பதாகும்.
முதலில், BootX ஐ பதிவிறக்கம் செய்து காப்பக கோப்பை திறக்கவும். தொகுக்கப்படாத காப்பகத்திலிருந்து BootX நீட்டிப்பை நீட்டிப்புகள் கோப்புறையிலும், BootX செயலி கட்டுப்பாடு பலகத்தை கட்டுப்பாடு பலகங்களிலும் நகலெடுக்கவும், இவை இரண்டும் MacOS முறைமை கோப்புறையில் உள்ளன. அடுத்து, முறைமை கோப்புறையில் "Linux Kernels" என்ற கோப்புறையை உருவாக்கி, குறுந்தகட்டிலிருந்து ppc32 கருநிரலை இந்த கோப்புறையில் நகலெடுக்கவும். இறுதியாக, ppc32.igz ஐ நிறுவல் குறுந்தகட்டில் துவக்க கோப்புறையிலிருந்து MacOS முறைமை கோப்புறையில் நகலெடுக்கவும்.
BootX ஐத் ஆயத்தப்படுத்த, BootX செயலி கட்டுப்பாடு பலகத்தை தொடங்கவும். முதலில் விருப்பத்தேர்வு உரையாடலைத் தேர்ந்தெடுத்து, Use Specified RAM Disk என்பதைச் சரிபார்த்து, கணினி கோப்புறையிலிருந்து ppc32.igz ஐத் தேர்ந்தெடுக்கவும். துவக்கத் திரைக்குத் திரும்பி, ரேம் வட்டு அளவு குறைந்தது 32000 ஆக இருப்பதை உறுதிசெய்யவும். இறுதியாக, கீழே காட்டப்பட்டுள்ளபடி கருநிரல் வாதங்களை அமைக்கவும்:
cdroot root=/dev/ram0 init=linuxrc loop=image.squashfs looptype=squashfs console=tty0
மேலுள்ள yaboot பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கருநிரல் அளவுருக்கள் இங்கும் பொருந்தும். விருப்பத்தேர்வுகள் ஏதேனும் இருந்தால் மேல் குறிப்பிட்டுள்ள கருநிரல் வாதத்தில் சேர்க்கவும்.
அமைப்புகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, பின்னர் உள்ளமைவைச் சேமிக்கவும். இது துவக்கப்படாவிட்டால் அல்லது ஏதாவது விடுபட்டால் தட்டச்சு செய்யும் நேரத்தை சேமிக்கிறது. சாளரத்தின் மேலே உள்ள லினக்சு பொத்தானை அழுத்தவும். எல்லாம் சரியாக நடந்தால், இது நிறுவல் குறுந்தகட்டில் துவக்கப்படும்.
விசைப்பலகை படத்தை அமைத்தல்
துவங்கிய பின் இப்போதைய முனையத்தில் வேர் ("#") தூண்டி காணப்படும். Alt + F2, Alt + F3 மற்றும் Alt + F4 ஐ அழுத்துவதன் மூலம் மற்ற முனையங்களுக்குச் செல்ல முடியும். மீண்டும் முதல் முனையத்திற்கு வர Alt + F1 ஐ அழுத்தவும். விசைப்பலகை இடுவெளி காரணமாக ஆப்பிள் இயந்திரங்களில் Alt + fn + F# என அழுத்த வேண்டியிருக்கும்.
US அல்லாத விசைப்பலகையை கொண்டுள்ள முறைமையில் சென்டூவை நிறுவும்போது loadkeys ஐ பயன்படுத்தி விசைப்பலகைக்கான விசைப்படத்தை ஏற்றவும். கிடைக்கும் விசைப்படங்களை பட்டியலிட ls /usr/share/keymaps/i386
கட்டளையை இயக்கவும்.
root #
ls /usr/share/keymaps/i386
இப்போது விரும்பும் விசைப்படத்தை ஏற்றவும்:
root #
loadkeys be-latin1