கையேடு:MIPS/தொகுதிகள்/துவக்குதல்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:MIPS/Blocks/Booting and the translation is 100% complete.


சிலிக்கான் வரைகலை இயந்திரங்களில், இயங்குதளங்களை நிறுவுவதற்குக் குறுந்தகட்டிலிருந்து துவக்க முடியும் (இவ்வாறாக ஒருவர் எடுத்துக்காட்டிற்கு IRIX ஐ நிறுவலாம்). அண்மைக் காலத்தில், ஜென்டூவை நிறுவுவதற்குப் பயன்படும் இவ்வகை துவக்கவல்ல குறுந்தகட்டிற்கான படங்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த குறுந்தகடுகள் ஒரே விதமாகச் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஜென்டூ/MIPS நிகழ்நேரக் குறுந்தகடானது, R4000 மற்றும் R5000-தொடர் மையச்செயலகம் பொருத்தப்பட்ட SGI Indy, Indigo 2 மற்றும் O2 பணிநிலையங்களில் மட்டுமே வேளை செய்யும் என்றாலும் விரைவில் மற்ற தளங்களுக்கும் கிடைக்கப்பெறும்.

நிகழ் குறுந்தகடு படங்களை ஜென்டூ கண்ணாடி தளத்தில் உள்ள experimental/mips/livecd/ என்னும் அடைவின் கீழ்க் காணலாம்.

எச்சரிக்கை
இப்போது இந்த நேரத்தில் குறுந்தகடுகள் உயர்ந்த சோதனைவழியில் உள்ளன. ஆகையால் இவை வேளை செய்யலாம், செய்யாமலும் போகலாம். இதன் நிறுவலின் வெற்றி அல்லது தோல்விகளை Bugzilla வில் உள்ள இந்த மன்ற இழையில் அல்லது #gentoo-mips என்னும் இணையத் தொடர் அரட்டை (IRC) அலைத்தடத்தில் தெரிவிக்கவும்.