கையேடு:HPPA/தொகுதிகள்/வட்டுக்கள்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:HPPA/Blocks/Disks and the translation is 69% complete.
Outdated translations are marked like this.


கோட்பாட்டளவில் ஒரு லினக்ஸ் முறைமையை மூல, பகிர்வு செய்யப்படாத வட்டில் நிறுவ வாய்ப்புள்ள போதிலும் (எடுத்துக்காட்டாக btrfs RAID ஐ உருவாக்கும்போது) நடைமுறையில் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. பதிலாகத் தொகுதி சாதனங்கள் சிறிய சமாளிக்கக்கூடிய தொகுப்பு சாதனங்களாகப் பிரிக்கப்பட்டது. பெரும்பாலான முறைமைகளில் இது பகிர்வுகள் என அழைக்கப்படுகிறது. மற்ற கட்டமைப்புகளில் இதை ஒத்த சீவல்கள் என அழைக்கப்படும் உத்தியைப் பயன்படுத்துகின்றன.

பகிர்வு திட்டத்தை வடிவமைத்தல்

எத்தனை பகிர்வுகள் எவ்வளவு அளவுகளில் தேவை?

வட்டு பகிர்வு தளவமைப்பின் வடிவம் வட்டில் பயன்படுத்தப்படும் முறைமை மற்றும் கோப்பு முறைமையின் தேவைகளை அதிகமாகச் சார்ந்துள்ளது. நிறையப் பயனர்கள் இருந்தால், தனி /home பகிர்வை வைத்துக்கொள்வது பாதுகாப்பை அதிகப்படுத்தி, காப்புநகல் போன்ற பராமரிப்பு பணிகளை எளிமையாக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. ஜெனடூவை ஒரு அஞ்சல் சேவையகமாகச் செயல்படுத்த நிறுவும்போது, எல்லா அஞ்சல்களும் பெரும்பாலும் /var அடைவிற்குள் சேமித்து வைப்பதால் இந்த அடைவு தனி /var பகிர்வாக இருக்க வேண்டும். பெரும்பாலான விளையாடல் சேவையகங்கள் /opt அடைவில் நிறுவப்படுவதால், விளையாட்டு சேவையகங்களுக்காக இதைத் தனி பகிர்வாக வைத்துக்கொள்ளலாம். இந்த பரிந்துரைகளுக்கான காரணம் /home அடைவை ஒத்தது: பாதுகாப்பு, காப்புநகலாக்கம் மற்றும் பராமரிப்பு.

ஜென்டூவில் பெரும்பாலான சூழல்களில், /usr மற்றும் /var அடைவுகளை ஒப்பீட்டளவில் பெரிய அளவாக வைக்கப்பட வேண்டும். /usr ஆனது முறைமையில் உள்ள பெரும்பாலான செயலிகளையும் லினக்ஸ் கர்னலையும் (/usr/src என்னும் இடத்தின் கீழ்) நடத்துகிறது. இயல்பாக, /var ஜென்டூ இ-பில்ட் கருவூலத்தை (/var/db/repos/gentoo என்னும் இடத்தில் உள்ள) நடத்துகிறது. இது கோப்பு முறைமையைப் பொருத்து, பொதுவாக 650 MiB (மெகா எண்ணுன்மிகள்) வரையிலான வட்டு இடைவெளியைப் பயன்படுத்தலாம். இந்த இடைவெளியானது /var/cache/distfiles மற்றும் /var/cache/binpkgs அடைவுகளை தவிர்த்து கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முறைமையில் சேர்க்கப்படும்போது இந்த அடைவுகளில் முறையே மூலநிரல் கோப்புக்கள் மற்றும் (விரும்பினால்) இருமத் தொகுப்புகளால் மெதுவாக நிரம்பத் துடங்கிவிடும்.

எத்தனை மற்றும் எவ்வளவு பெரிய பகிர்வுகள் என்பது ஈடுசெய்தல்களைக் கருத்தில் கொள்வதிலும், சூழலுக்கு ஏற்றவாறு சிறந்த விருப்பத்தைத் தேர்வு செய்வதிலும் சார்ந்துள்ளது. தனி பகிர்வு அல்லது கனவளவு பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது:

  • ஒவ்வொரு பகிர்வு அல்லது கனவளவுக்கும் சிறப்பாகச் செயல்படும் கோப்பு முறைமையைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • பகிர்வு அல்லது கனவளவில் செயலிழந்த கருவி ஒன்று தொடர்ந்து கோப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதால் ஒட்டுமொத்த முறைமையும் காலி இடைவெளி இல்லாமல் போக வாய்ப்பில்லை.
  • தேவைப்பட்டால், பல சரிபார்த்தல்களை இணையாகச் செய்ய முடியும் என்பதால், கோப்பு முறைமை சரிபார்த்தல்களின் நேரத்தைக் குறைக்கலாம் (பல பகிர்விற்குப் பதிலாகப் பல வட்டுக்களைப் பயன்படுத்தும்போது இதன் பயனை முழுமையாகப் பெறலாம்).
  • சில பகிர்வு மற்றும் கனவளவுகளைப் படிக்க-மட்டும், nosuid (setuid இருமங்கள் தவிர்க்கப்பட்டு), noexec (செயல்படுத்தக்கூடிய இருமங்கள் தவிர்க்கப்பட்டு) முதலியவற்றைக் கொண்டு ஏற்றும்போது பாதுகாப்பை அதிகப்படுத்தலாம்.


இருப்பினும், பல பகிர்வு முறையில் குறிப்பிட்ட சில குறைகளும் உள்ளது:

  • முறையாக உள்ளமைக்கப்படாத போது, முறைமையின் ஒரு பகிர்வில் அதிகமான இடைவெளியும் மற்றொரு பகிர்வில் குறைவான இடைவெளியும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
  • /usr/ கான தனி பகிர்விற்கு, இதை எல்லா துவக்க நிரல்கள் துவங்குவதற்கு முன்பு ஏற்றுவதற்கு ஒரு initramfs ஐ கொண்டு துவக்க வேண்டும். initramfs ஐ உருவாக்கல் மற்றும் பராமரித்தல் இந்த கையேட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதால், புதிய பயனர்களை /usr/ க்கு என்று தனியாக ஒரு பகிர்வைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்
  • மேலும் SCSI மற்றும் SATA வட்டுக்கள் GPT வட்டு முத்திரையைப் பயன்படுத்தாத வரை 15 பகிர்வுகள் வரை மட்டுமே பகிர்வு செய்ய முடியும்.
குறிப்பு
Systemd ஐ பயன்படுத்தும் நோக்கத்திலிருந்தால், வேர் கோப்பு முறைமையின் ஒரு பாகமாகவோ அல்லது initramfs மூலம் ஏற்றப்பட்டோ துவக்கத்தில் /usr/ கிடைக்கும்.

அப்படியென்றால் இடமாற்று இடைவெளி?

Recommendations for swap space size
RAM size Suspend support? Hibernation support?
2 GB or less 2 * RAM 3 * RAM
2 to 8 GB RAM amount 2 * RAM
8 to 64 GB 8 GB minimum, 16 maximum 1.5 * RAM
64 GB or greater 8 GB minimum Hibernation not recommended! Hibernation is not recommended for systems with very large amounts of memory. While possible, the entire contents of memory must be written to disk in order to successfully hibernate. Writing tens of gigabytes (or worse!) out to disk can can take a considerable amount of time, especially when rotational disks are used. It is best to suspend in this scenario.

இடமாற்று இடைவெளி அளவுக்கு எந்தவொரு மிகச்சரியான மதிப்பும் இல்லை. இந்த இடைவெளியின் வேளை கர்னலுக்கு உள் நினைவகம் (RAM) அழுத்தத்தில் இருக்கும்போது வட்டில் சேமிப்பு இடம் அளிப்பதாகும். இந்த இடமாற்று இடைவெளி கர்னலை உடனடியாக அணுக வாய்ப்பில்லாத நினைவக பக்கங்களை வட்டில் சேமிக்க அனுமதிக்கிறது. இதன்மூலம் இப்போதைய வேளைகளுக்குத் தேவையான RAM நினைவு விடுவிக்கப்படுகிறது. பக்கங்கள் மீண்டும் இடமாற்றும்போது வட்டு உடனடியாக தேவைப்படுவதால், நினைவு பக்கங்களை அதற்கான இடத்தில் எழுதுவதற்கு, RAM இல் இருந்து எழுதுவதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது (உள் நினைவகத்தை ஒப்பிடுகையில் வட்டு மெதுவாக வேளை செய்யக் கூடியது என்பதால்).

அதிகப்படியாக RAM இருந்தால் அல்லது தீவிரமாக நினைவு தேவைப்படும் செயலிகளை முறைமை இயக்கப்போவதில்லை என்றால், ஒருவேளை நிறைய இடமாற்று இடைவெளி தேவைப்படாமல் போகலாம். இருப்பினும் கணினியின் உறக்கநிலையின்போது நினைவகத்தில் உள்ள மொத்த விவரங்களும் இந்த இடைமாற்று இடைவெளியில்தான் சேமித்து வைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளவும் (சேவையக முறைமைகளைத் தவிர பெரும்பாலும் பணித்தள மற்றும் மடிக் கணினிகளில் காணப்படும்). முறைமைக்கு உறக்கநிலை ஆதரவு தேவைப்பட்டால், நினைவகத்தின் அளவை ஒத்த அல்லது அதற்கும் கூடுதலான இடமாற்று இடைவெளி தேவைப்படலாம்.

பொதுவான விதியாக, இடமாற்று இடைவெளியின் அளவு உள் நினைவகத்தின் (RAM) அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கப் பரிந்துரைக்கிறோம். பல வன்தட்டுகள் உள்ள முறைமைகளில், இணை படித்தல்/எழுதல் செயல்களைப் பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு வட்டிலும் ஒரு இடைமாற்று இடைவெளியை உருவாக்குவது அறிவார்ந்த செயலாகும். எவ்வளவு வேகமாக ஒரு வட்டு இடமாற்றுகிறதோ அவ்வளவு வேகமாக இடமாற்று இடைவெளியில் உள்ள தரவுகளை அணுகியவுடன் முறைமை இயங்கும். சுழலக்கூடிய மற்றும் திட நிலை வட்டுகளின் இடையில் ஒன்றைத் தேர்வு செய்யும்போது, சிறந்த செயல்திறனுக்காக திடநிலை வட்டுக்களில் இடமாற்று இடைவெளியை இடுவது நல்லது. மேலும் இடமாற்று கோப்புகளை இடமாற்று பகிர்வுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்; இது மிகக் குறைந்த வட்டு இடைவெளிகளைக் கொண்ட முறைமைகளின் கவனத்தை ஈர்க்கும்.


HPPA இல் fdisk ஐ பயன்படுத்துதல்

தேவைப்படும் பகிர்வுகளை உருவாக்குவதற்கு fdisk ஐ பயன்படுத்தவும்:

root #fdisk /dev/sda

HPPA இயந்திரங்கள் PC சார்ந்த தரமான DOS பகிர்வு அட்டவணையைப் பயன்படுத்துகிறது. புதிய DOS பகிர்வு அட்டவணையை உருவாக்க o விசையை அழுத்தவும்.

Command (m for help):o
Building a new DOS disklabel.

PALO (the HPPA bootloader) needs a special partition to work. A partition of at least 16 MB at the beginning of the disk needs to be created for it. The partition type must be of type f0 (Linux/PA-RISC boot). It is also possible to use the PALO partition as /boot.

முக்கியமானது
If this is forgotten and the installation continues without a special PALO partition, then eventually the system will fail to restart. Also, if the disk is larger than 2 GB, make sure that the boot partition is in the first 2 GB of the disk. PALO is unable to read a kernel after the 2 GB limit.
கோப்பு /etc/fstabஎளிமையான முன்னிருப்பு பகிர்வு திட்டம்
'"`UNIQ--pre-00000001-QINU`"'

fdisk இல் பகிர்வு தளவமைப்பு இவ்வாறு காணப்படும்:

Command (m for help):p
Disk /dev/sda: 4294 MB, 4294816768 bytes
133 heads, 62 sectors/track, 1017 cylinders
Units = cylinders of 8246 * 512 = 4221952 bytes
  
   Device Boot      Start         End      Blocks   Id  System
/dev/sda1               1           8       32953   f0  Linux/PA-RISC boot
/dev/sda2               9          20       49476   83  Linux
/dev/sda3              21          70      206150   82  Linux swap
/dev/sda4              71        1017     3904481   83  Linux