கையேடு:HPPA/தொகுதிகள்/துவக்குதல்
நிறுவல் குறுந்தகட்டை துவக்குதல்
நிறுவல் குறுந்தகடு அல்லது வேறு ஏதாவது ஊடகத்தைத் துவக்குவதில் இடர்பாடு ஏற்பட்டால், PA-RISC லினக்ஸ் துவக்குதலை எவ்வாறு செய்வது என்னும் பக்கத்திற்குச் சென்று படிக்கவும்.
HPPA முறைமையைத் துவக்கவும். துவக்கச் செயலின்போது, பின்வருவதை ஒத்த செய்தி திரையில் தோன்றும்:
Searching for Potential Boot Devices. To terminate search, press and hold the ESCAPE key.
இந்த செய்தி தோன்றும்போது, விருப்பத்தேர்வு பட்டி தோன்றும் வரை Esc விசையை அழுத்திப் பிடித்திருக்கவும். இதற்குச் சற்று நேரம் எடுக்கும், பொறுமையாகக் காத்திருக்கவும். இயல்பாக, BOOT_ADMIN முனையத்தினுள் நுழையும். விருப்பத்தேர்வு பட்டி தோன்றும்போது BOOT_ADMIN முனையத்தினுள் நுழைய Enter Boot Administration mode ஐ தேர்வு செய்யவும். இது '>' எனத் தொடங்கும் கட்டளை தூண்டியை அளிக்கும்.
ஜென்டூ நிறுவல் குறுந்தகட்டை CD-ROM இல் வைக்கவும். CD-ROM இயக்ககத்தின் SCSI ID தெரியாத நிலையில், search
கட்டளையைச் செயல்படுத்தும்போது PA-RISC நிலையம் அதனைத் தேடும்.
>
search
Searching for Devices with Bootable Media. To terminate search, please press and hold the ESCAPE key.
இப்போது PA-RISC நிலையம் கிடைக்கும் எல்லா துவக்க ஊடகங்களையும் காட்டும். இந்த கட்டளையின் எடுத்துக்காட்டு விளைவு இதோ:
சாதன தேர்வு சாதனத்தின் பாதை சாதனத்தின் வகை மற்றும் பயன்கூறுகள் --------------------------------------------------------------------------- P0 scsi.5.0 TOSHIBA CD-ROM XM-3301TA IPL P1 scsi.2.0 COMPAQ ST32550N IPL P2 lan.0010a7-06d1b6.3.6 server IPL
CD-ROM ஐ துவக்க உடன் செல்லும் சாதன பாதை தேவை. எடுத்துக்காட்டாக, மேலுள்ள எடுத்துக்காட்டில் உள்ள TOSHIBA CD-ROM இல் இருந்து துவக்க, பின்வரும் கட்டளையை இடவும்:
>
boot scsi.5.0 ipl
Trying scsi.5.0
ipl (தொடக்க நிரல் ஏற்றி) உறைசொல்லானது palo (PA-RISC துவக்க ஏற்றி) விடம் ஊடாடும் பயன்முறைக்குள் நுழையச் சொல்கிறது. இது கர்னல் துவக்க அளவுருக்கள் போன்றவற்றை மாற்ற அனுமதிக்கும்.
துவக்கச் செயல் வெற்றியடைந்தவுடன், palo ஊடாடும் பயன்முறையைத் தொடங்கும்:
Boot path initialized. Attempting to load IPL. HARD Booted. palo ipl 1.5 root@hope Sat Apr 23 18:06:47 CEST 2005 Boot image contains: 0/vmlinux32 6241293 bytes @ 0x3904000 0/vmlinux64 8352719 bytes @ 0x3ef8000 0/ramdisk 1007589 bytes @ 0x105800 Information: No console specified on kernel command line. This is normal. PALO will choose the console currently used by firmware (serial).Current command line: 0/vmlinux initrd=initrd TERM=linux root=/dev/ram0 init=/linuxrc cdroot looptype=squashfs loop=/livecd.squashfs hda=scsi console=ttyS0 0: 0/vmlinux 1: initrd=initrd 2: TERM=linux 3: root=/dev/ram0 4: init=/linuxrc 5: cdroot 6: looptype=squashfs 7: loop=/livecd.squashfs 8: hda=scsi 9: console=ttyS0 <#> edit the numbered field 'b' boot with this command line 'r' restore command line 'l' list dir
இந்த அளவுருக்கள் பெரும்பாலான சூழல்களில் பொருந்தும்.
கூடுதல் தனிச்சிறப்புகள் தேவைப்பட்டால், கட்டளை வரியின் இறுதியில் பொருத்தமான உறைசொற்களை சேர்க்கவும். உறைசொல்லை சேர்ப்பதற்கு, கடைசி புலத்தைத் திருத்தி ஒரு இடைவெளி விட்டு உங்கள் உறைசொல்லை இடவும். இந்நாள்வரை செயல்படுத்தப்பட்டுள்ள உறைசொற்கள் cdcache மற்றும் noload மட்டுமே. cdcache ஆனது நிறுவல் குறுந்தகடு இடம் RAM இல் ஏறுமாறு சொல்கிறது, இதன்மூலம் குறுந்தகட்டைப் பின்னர் இறக்கிக்கொள்ளலாம். noload=கூறு1[,கூறு2[,...]] ஆனது குறிப்பிட்ட கூறுகள் ஏறுவதை வெளிப்படையாக முடக்குகிறது.
(or 'b' to boot with this command line)?
9
console=ttyS0 hdb=scsi
இப்போது கர்னல் துவக்க அளவுருக்கள் அமைக்கப்பட்டுவிட்டதால், இதைத் துவக்கவும்.
(or 'b' to boot with this command line)?
b
இது இப்போதைய முனையத்தில் வேர் ("#") தூண்டியை விளைவிக்கும். Alt+F2, Alt+F3 மற்றும் Alt+F4 விசை கூட்டுகளை அழுத்துவதன் மூலம் மற்ற முனையங்களுக்கு மாறிக் கொள்ளலாம். முதல் முனையத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு Alt+F1 ஐ அழுத்தவும்.