கையேடு:Alpha/தொகுதிகள்/துவக்குதல்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:Alpha/Blocks/Booting and the translation is 82% complete.
Outdated translations are marked like this.


நிறுவல் குறுந்தகட்டை துவக்குதல்

Alpha முறைமை திறன் இணைப்பு செய்தவுடன் தொடங்கும் முதல் பொருள் திடப்பொருளாகும். இது தனிக்கணினி முறைமைகளில் உள்ள BIOS மென்பொருட்களைத் தளர்வாக ஒத்துள்ளது. Alpha முறைமைகளில் இரண்டு வகையான திடப்பொருட்கள் உள்ளன: SRM (முறைமைகள் குறிப்பு கையேடு) மற்றும் ARC (மேம்பட்ட Risc முனையம்).

SRM ஆனது OpenVMS, Tru64 ஊனிக்ஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான செயற்பாட்டுச் சூழலை அளிக்கும் Alpha முனையத் துணை-முறைமை விவரக்கூறை அடிப்படையாகக் கொண்டதாகும். ARC ஆனது Windows NT இயங்குதளத்திற்குச் செயற்பாட்டுச் சூழலை அளிக்கும் மேம்பட்ட RISC கணினியியல் (ARC) விவரக்கூறை அடிப்படையாகக் கொண்டதாகும். SRM ஐ பயன்படுத்துவதைப் பற்றிய விரிவான வழிகாட்டி Alpha லினக்ஸ் பக்கத்தில் காணலாம்.

Alpha முறைமையானது SRM மற்றும் ARC கள் (ARC, AlphaBIOS, ARCSBIOS) ஆகிய இவ்விரண்டையும் ஆதரித்தால், SRM ற்கு மாற இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும். முறைமை ஏற்கனவே SRM ஐ பயன்படுத்திக்கொண்டிருந்தால் எல்லாம் ஆயத்தமாக உள்ளது என்று பொருள். முறைமை ARC களை (Ruffian, nautilus, xl முதலியவற்றை) மட்டும்தான் பயன்படுத்தும் என்றால் பின்னர் வரும் வழிகாட்டுதலில் துவக்க ஏற்றிகளை பற்றி வரும்போது MILO வை தேர்வு செய்யவும்.

இப்போது Alpha நிறுவல் குறுந்தகட்டைத் துவக்கவும், இதற்கு CD-ROM ஐ தட்டில் வைத்து முறைமையை மறு இயக்கவும். நிறுவல் குறுந்தகட்டைத் துவக்க SRM ஐ பயன்படுத்தலாம். இது வாய்ப்பில்லை என்றால், MILO வை பயன்படுத்த வேண்டும்.

SRM ஐ பயன்படுத்தி CD-ROM ஐ துவக்க, முதலில் கிடைக்கும் வன்பொருள் இயக்ககங்களைப் பட்டியலிடவும்:

>>>show device
dkb0.0.1.4.0        DKB0       TOSHIBA CDROM

அடுத்து, சரியான CD-ROM இயக்கக சாதனத்தை அளித்து குறுந்தகட்டைத் துவக்கவும். எடுத்துக்காட்டாக, dkb0 ஐ கொண்டு:

>>>boot dkb0 -flags 0

-flags 2 உடன், முன்னிருப்பு முனையமாகத் தொடர் துறை /dev/ttyS0 பயன்படுத்தப்படும்.

MILO ஐ பயன்படுத்தி CD-ROM ஐ துவக்க, பின்வரும் கட்டளையில் sdb என்பதற்குப் பதிலாகச் சரியான CD-ROM இயக்கக சாதனத்தை அளித்த பிறகு பயன்படுத்தவும்:

MILO>boot sdb:/boot/gentoo initrd=/boot/gentoo.igz root=/dev/ram0 init=/linuxrc looptype=squashfs loop=/image.squashfs cdroot

தொடர் துறை /dev/ttyS0 ஐ முன்னிருப்பு முனையமாகப் பயன்படுத்த, கட்டளை வரிக்கு console=ttyS0 என்பதைச் சேர்க்கவும்.

துவக்குதலுக்குப் பிறகு, இப்போதைய முனையத்தில் வேர் ("#") தூண்டியானது தோன்றும். Alt+F2, Alt+F3 மற்றும் Alt+F4 விசை கூட்டுகளை அழுத்துவதன் மூலம் மற்ற முனையங்களுக்குப் பயனர்கள் மாறிக் கொள்ளலாம். முதல் முனையத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு Alt+F1 ஐ அழுத்தவும்.