கையேடு:AMD64/பாகங்கள்/கர்னல்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:AMD64/Blocks/Kernel and the translation is 61% complete.
Outdated translations are marked like this.


கட்டமைப்பு சார்ந்த கருநிரல் உள்ளமைவு

32 இரும நிரல்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்றால் IA32 Emulation ஐ தேர்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் (CONFIG_IA32_EMULATION). ஜென்டூவானது multilib முறைமையை (கலந்த 32 இருமம் / 64 இருமம்) முன்னிருப்பாக நிறுவுகிறது. அதனால் no-multilib தனியமைப்பைப் பயன்படுத்தாத வரை இது தேவையில்லை.

கருநிரல் செயலாக்கி வகை மற்றும் தனிச்சிறப்புகளைத் தேர்வு செய்தல்
Processor type and features --->
  [ ] Machine Check / overheating reporting 
  [ ]  Intel MCE Features
  [ ]  AMD MCE Features
  Processor family (AMD-Opteron/Athlon64) --->
   ( ) Opteron/Athlon64/Hammer/K8
   ( ) Intel P4 / older Netburst based Xeon
   ( ) Core 2/newer Xeon
   ( ) Intel Atom
   ( ) Generic-x86-64
Executable file formats / Emulations --->
  [*] IA32 Emulation

இதற்கு முன் வட்டை பகிர்வு செய்யும்போது பயன்படுத்தியிருந்தால் GPT பகிர்வு முத்திரை ஆதரவை செயல்படுத்தவும் (CONFIG_PARTITION_ADVANCED மற்றும் CONFIG_EFI_PARTITION):

கருநிரல் GPT கான ஆதரவை செயல்படுத்துதல்
-*- Enable the block layer --->
  Partition Types --->
   [*] Advanced partition selection
   [*] EFI GUID Partition support

முறைமையைத் துவக்குவதற்கு UEFI பயன்படுத்தப்பட்டிருந்தால் லினக்ஸ் கருநிரலில் உள்ள EFI முளை ஆதரவு மற்றும் EFI மாறிகளைச் செயல்படுத்தவும் (CONFIG_EFI, CONFIG_EFI_STUB, CONFIG_EFI_MIXED மற்றும் CONFIG_EFI_VARS):

கருநிரல் UEFI கான ஆதரவை செயல்படுத்துதல்
Processor type and features --->
  [*] EFI runtime service support 
  [*]  EFI stub support
  [*]   EFI mixed-mode support
 
Firmware Drivers --->
  EFI (Extensible Firmware Interface) Support --->
    <*> EFI Variable Support via sysfs
கருநிரல் Enabling SOF Firmware support (CONFIG_SND_SOC_SOF_TOPLEVEL, CONFIG_SND_SOC_SOF_PCI, CONFIG_SND_SOC_SOF_ACPI, CONFIG_SND_SOC_SOF_AMD_TOPLEVEL, CONFIG_SND_SOC_SOF_INTEL_TOPLEVEL)
Device Drivers --->
 Sound card support --->
  Advanced Linux Sound Architecture --->
   <M> ALSA for SoC audio support --->
    [*] Sound Open Firmware Support --->
      <M> SOF PCI enumeration support
      <M> SOF ACPI enumeration support
      <M> SOF support for AMD audio DSPs
      [*] SOF support for Intel audio DSPs


தொகுத்தல் மற்றும் நிறுவுதல்

இப்போது உள்ளமைவு முடிந்துவிட்டதால், கருநிரலை தொகுத்து நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது. உள்ளமைவை விட்டு வெளியேறித் தொகுத்தல் செயல்முறையைத் தொடங்கவும்:

root #make && make modules_install
குறிப்பு
make -jX ஐ பயன்படுத்தி இணை உருவாக்கல்களைச் செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதில் X என்பது உருவாக்கல் செயல்பாடுகளால் துவக்க அனுமதிக்கப்படும் இணை வேளைகளின் எண்ணிக்கைகளாகும். இது முன்னர் கூறிய MAKEOPTS மாறியைக் கொண்ட /etc/portage/make.conf ஐ பற்றிய வழிகாட்டுதல்களை ஒத்ததாகும்.

கருநிரல் தொகுத்தலை முடித்தவுடன், /boot/ என்னும் இடத்தில் கருநிரல் படத்தை நகலெடுத்து வைக்கவும். இந்த செயல் make install கட்டளையின் மூலம் கையாளப்படுகிறது:

root #make install

இது கருநிரல் படத்தை System.map கோப்பு மற்றும் கருநிரல் உள்ளமைவு கோப்பு உடன் சேர்த்து /boot/ என்னும் இடத்தில் நகலெடுத்து வைக்கும்.