User:Kingoflove/Help:Translating

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page contains changes which are not marked for translation.

ஜென்டூ விக்கியை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நாங்கள் MediaWiki யின் Translate extension என்னும் நீட்டிப்பை பயன்படுத்துகின்றோம். இது gettext-style போன்ற செய்தியமைப்பைக் பயன்படுத்தி கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்க்கக் கூடிய சிறு சிறு உரைத்துண்டுகளாக பிரிக்கிறது.

கட்டுரை ஆசிரியர்களுக்கு: மொழிபெயர்க்கக்கூடிய பிரிவுகளைக் குறித்தல்

ஒரு பக்கம் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன், நீங்கள் அதில் மொழிபெயர்க்கக்கூடிய பிரிவுகளைக் குறிக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில், அது முழு கட்டுரையாகும்.

ஒரு பிரிவை மொழிபெயர்க்கக்கூடியதாகக் குறிக்க, <translate> என்னும் XML குறிச்சொல்லினுள் இடவும், இவ்வாறாக:

CODE கட்டுரையை மொழிபெயர்க்கக்கூடியதாகக் குறித்தல்
&lt;translate&gt;
ஜென்டூ விக்கியை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நாங்கள் MediaWiki யின் [https://www.mediawiki.org/wiki/Help:Extension:Translate Translate extension] என்னும் நீட்டிப்பை பயன்படுத்துகின்றோம்.
இது gettext-style போன்ற செய்தியமைப்பைக் பயன்படுத்தி கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்க்கக் கூடிய சிறு சிறு உரைத்துண்டுகளாக பிரிக்கிறது.
&lt;/translate&gt;

மேலும், <languages /> என்னும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி மொழித்தேர்வு பட்டியை உங்கள் கட்டுரையின் தொடக்கத்தில் சேர்க்கவும்:

CODE மொழித்தேர்வு பட்டியைச் சேர்த்தல்
&lt;languages /&gt;
&lt;translate&gt;
ஜென்டூ விக்கியை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நாங்கள் MediaWiki யின் [https://www.mediawiki.org/wiki/Help:Extension:Translate Translate extension] என்னும் நீட்டிப்பை பயன்படுத்துகின்றோம்.
இது gettext-style போன்ற செய்தியமைப்பைக் பயன்படுத்தி கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்க்கக் கூடிய சிறு சிறு உரைத்துண்டுகளாக பிரிக்கிறது.
&lt;/translate&gt;

உங்கள் கட்டுரை முடிந்ததும், மொழிபெயர்ப்பை இயக்க நீங்கள் கோரலாம்.

கட்டுரை ஆசிரியர்களுக்கு: பக்க மொழிபெயர்ப்பைக் கோருதல்

முந்தைய படிநிலையை நீங்கள் முடித்த பிறகு (மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு குறிச்சொற்களைச் சேர்த்தல்), பக்கம் தானாகவே Page translation பக்கத்தில் பட்டியலிடப்படும். ஒரு நிர்வாகி அல்லது முன்னணி மொழிபெயர்ப்பாளர் கட்டுரையின் தரத்தைச் சரிபார்த்து கோரிக்கையை ஏற்றுக்கொள்வார் அல்லது நிராகரிப்பார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை விவாதிக்கப் பயன்படுத்தப்படும் என்பதால் விவாத பக்கத்தைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும்.

அனைவருக்கும்: மொழிபெயர்ப்பாளராகுதல்

இந்த மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்களை நாங்கள் தற்போது ஏற்றுக்கொண்டோம்:

  • சீனம் (中文)
  • குரோஷியன் (hrvatski)
  • செக் (Český jazyk)
  • இடச்சு (Nederlands)
  • பிரெஞ்சு (Français)
  • ஜெர்மன் (deutsch)
  • கிரேக்கம் (ελληνικά)
  • இத்தாலியன் (italiano)
  • கொரியன் (한국어)
  • இந்தோனேசியன் (Bahasa Indonesia)
  • ஜப்பானியம் (日本語)
  • போலிஷ் (polski)
  • போர்த்துகீசியம் (português)
  • போர்த்துகீசியம் (português do Brasil)
  • ரஷ்ய (русский)
  • எசுப்பானியம் (español)
  • செர்பியன் (српски)
  • உக்ரேனியன் (українська мова)
  • துருக்கியம் (Türkçe)

மேற்கண்ட பட்டியலில் உங்கள் மொழி இல்லை என்றால், நீங்கள்தான் அந்த மொழியின் முதல் மொழிபெயர்ப்பாளர் என்று பொருள். இந்த சூழ்நிலையில், முதலில் இந்த உதவி பக்கத்தை மொழிபெயர்க்கவும். பின் உங்கள் பயனர் இடத்தில் இந்த பக்கத்தின் மொழிபெயர்ப்பை உள்ளடக்கி ஒரு பக்கத்தை உருவாக்கி மொழிபெயர்ப்பாளர் கணக்கைக் கோரும் போது இப்பக்கத்தின் இணைப்பைப் பகிரவும்.

நீங்கள் மேற்கூறிய பணிகளை முடித்து விட்டீர்கள் அல்லது உங்கள் மொழியின் முதல் மொழிபெயர்ப்பாளர் நீங்கள் இல்லை என்றால், இந்த Translator accounts requests பக்கத்தில் உங்களுக்காக உங்கள் மொழியைக் குறிப்பிட்டு ஒரு பதிவைச் சேர்க்கவும்.

மொழிபெயர்ப்பாளர்களுக்கு: மொழிபெயர்த்தல்

ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கத் துவங்குவதற்கு, பக்கத்தலைப்பின் கீழ் உள்ள Translate this page என்னும் இணைப்பைத் தட்டி, மொழிபெயர்க்க உள்ள மொழியை வலது மேல் மூலையில் தேர்வு செய்யவும்.

மொழிபெயர்க்கக்கூடிய பத்திகளின் அட்டவணை உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் மொழிபெயர்ப்பிற்கான உள்ளீட்டுப் பெட்டியைக் காட்ட இடதுபுற நெடுவரிசையில் உள்ள இணைப்புகளைத் தட்டவும். நீங்கள் பத்தியை மொழிபெயர்த்து முடித்தவுடன், Skip to next translation என்பதைத் தட்டவும். நீங்கள் முழுவதுமாக முடித்தவுடன், Save translation என்பதைத் தட்டவும்.

சிறப்பு வார்ப்புருக்கள்

இந்த வார்ப்புருக்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன:

NEW! வார்ப்புருக்களை ஒருபோதும் மாற்றக் கூடாது, அவை மொழிபெயர்க்கப்பட்ட சரங்களை தானியக்கமாக காண்பிக்க வல்லது.

உங்கள் மொழி இதில் இல்லை என்றால், அல்லது புதிய வார்ப்புருக்களை மொழிபெயர்க்க விரும்புகிறீர்கள் என்றால், wiki project ஐ தொடர்பு கொள்ளவும்.

மொழி குறியீடு விதிவிலக்குகள்

சில எழுத்துமுறைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ISO 639-1 குறியீடுகள் எதுவும் இல்லை. இதற்குப் பதிலாகக் கீழுள்ள விதிவிலக்குகள் பயன்படுத்தப்படுகின்றது.

மாற்றுக் குறியீடு மொழி
zh-cn எளிதாக்கப்பட்ட சீனம் (简体中文)

மொழி புள்ளிவிவரங்கள்

நீங்கள் Special:LanguageStats இல் உங்கள் மொழி குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் இயல்பிருப்பாக நீங்கள் இதுவரை முழுவதுமாக மொழிபெயர்க்காத பக்கங்களின் பட்டியலைக் காணலாம்