கையேடு:முதன்மை பக்கம்

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:Main Page and the translation is 90% complete.
Outdated translations are marked like this.

இந்த சென்டூ கையேடு ஆவணப்படுத்தலை ஒருங்கிணைக்க வேண்டும் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த கையேட்டில் சென்டூவை இணையத்தின் உதவியோடு எவ்வாறு நிறுவுவது என்பதை பற்றியும், சென்டூவின் முற்கால மென்பொருட்களான OpenRC init முறைமை மற்றும் Portage தொகுப்பு மேலாளர் பற்றிய கூடுதல் பிரிவுகளும் உள்ளன.

சென்டூ கையேடு

கட்டமைப்புகள்

சென்டூ லினக்சு பல கணினி கட்டமைப்புகளுக்கு கிடைக்கிறது.

அறிவுறுத்தல் தொகுதி கட்டமைப்பு (ISA) (விக்கிபிடியா) அல்லது சுருக்கமாக கட்டமைப்பு என்பது ஒரே அறிவுறுத்தல்களை கொண்ட மையச் செயலகங்களின் குடும்பமாகும். x86 கட்டமைப்பு மற்றும் x86_64 கட்டமைப்பு (இதற்கு சென்டூ amd64 என்னும் குறியீட்டை பயன்படுத்துகிறது) ஆகிய இவ்விரண்டும் கணினி உலகின் மிகவும் சிறப்புமிக்க கட்டமைப்புகளாகும். இவை தவிர sparc, ppc (PowerPC குடும்பம்), mips, arm போன்ற கட்டமைப்புகளும் உள்ளன.

பன்முகத்தன்மை கொண்ட சென்டூ பகுத்தளிப்பு பல கட்டமைப்புகளை ஆதரிக்கிறது. சென்டூவால் ஆதரிக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட சுருக்கப்பெயர்கள் ஆகியவற்றை கீழே சுருக்கமாக பார்க்கலாம். தனது தனியாள் கணினி என்ன கட்டமைப்பை கொண்டுள்ளது என்பதை அறியாத பெரும்பாலான மக்களின் முதல் தேர்வு amd64 ஆக இருக்கிறது.

கையேடை பார்த்தல்

கீழுள்ள பட்டியல் பலவகை சென்டூ லினக்சு செயற்றிட்டங்கள் ஆதரிக்கும் கட்டமைப்புகளைக் குறித்த மேலோட்டப்பார்வையை அளிக்கிறது. கையேட்டின் நிறுவல் பக்கத்திற்குச் செல்லும் முன் சரியான கட்டமைப்பை கண்டறிந்து அதற்குரிய நிறுவல் பக்கத்திற்குச் செல்வது இன்றியமையாததாகும். ஆகையால் உங்கள் CPU வின் கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

புதிய சென்டூ பயனர்களுக்கான குத்துமதிப்பு விதி: CPU 2015 க்கு முன் உருவாக்கப்பட்டு அதன் உற்பத்தியாளர் Intel அல்லது AMD ஆக இருந்தால், AMD64 கையேடு ஐ தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் சரியான வழியாக இருக்கும்.

குறிப்பு
arm மற்றும் arm64 கட்டமைப்புகள் சென்டூவால் ஆதரிக்கப்பட்ட போதிலும், SoC இல் பல திரிபுகள் இருப்பதால் அதற்குரிய கையேடுகள் இன்னும் பயன்நிலைக்கு வரவில்லை. கையேடு செயற்றிட்டத்தால் ஒரு ஒருங்கிணைந்த நிறுவல் வழிமுறைகளை பராமரிப்பது நடைமுறையில் எளிதான செயல் இல்லை. இதைப்பற்றி மேலும் அறிய ARM செயற்றிட்டம் என்னும் பக்கத்தையும் bug #534376 வழுவையும் காணவும்.

இதேபோல் riscv கட்டமைப்பு ஆதரிக்கப்பட்ட நிலையிலும் அதற்குறிய கையேடு இன்னும் பயன்நிலைக்கு வரவில்லை. மேலும் விவரங்களுக்கு RISC-V செயல்திட்ட பக்கத்தை காணவும்.
Alpha கையேடு
Alpha கட்டமைப்பு Digital Equipment Corporation (DEC) ஆல் உருவாக்கப்பட்ட 64-பிட் கட்டமைப்பாகும். இது இன்னமும் சில நடுத்தர வரம்பு மற்றும் உயர்முனை சேவையகங்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இதன் பரவலான பயன்பாடு குறைந்துகொண்டு வருகிறது. இதன் திரிபுகள்: ES40, AlphaPC, UP1000, மற்றும் Noname
AMD64 கையேடு
AMD64 என்னும் இந்த 64-பிட் கட்டமைப்பு x86 கட்டமைப்போடு இணங்கக்கூடியது (அதனால்தான் இது x86_64 என அழைக்கப்படுகிறது). இது முதன்முதலில் AMD (AMD64 என்னும் பெயரில்) மற்றும் Intel (EM64T என்னும் பெயரில்) ஆல் பயன்படுத்தப்பட்டது. நடுத்தர மற்றும் உயர் முனை பணித்தள கணினிகளுக்கான மிகவும் சிறப்புமிக்க கட்டமைப்பாக இது பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சேவையக கணினிகளும் இதை பயன்படுத்துகின்றன. இதன் திரிபுகள்: AMD Athlon 64, Opteron, Sempron, Phenom, FX, Ryzen, Threadripper மற்றும் Epyc இதனோடு Intel Pentium 4, Core2, Core i3, i5, i7, i9, Xeon, மற்றும் சில அணுக்கள்.
ARM கையேடு
ARM என்பது உட்பதித்த மற்றும் சிறிய முறைமைகளில் நன்குதெரிந்த 32-பிட் வகை கட்டமைப்பாகும். இதன் துணை-கட்டமைப்புகள் ARMv2 வில் இருந்து ARMv6 வரை (legacy), ARMv6-M (Cortex) அதனோடு ARMv8-R மற்றும் ARMv8-M. இது பெரும்பாலும் திறன்பேசி, கைக்கணினி, கையடக்க சாதனங்கள், இறுதி-பயனர் GPS தடங்காட்டி முறைமைகள் ஆகிய சாதனங்களில் காணப்படும். இதன் திரிபுகள்: StrongARM மற்றும் Cortex-M.
ARM64 கையேடு
ARM64 என்பது உட்பொதித்த மற்றும் சேவையக முறைமைகளுக்கான ARM கட்டமைப்பின் 64-பிட் திரிபாகும். சில உற்பத்தியாளர்கள் இதன் முதன்மை துணை-கட்டமைப்பான AArch64 (என அழைக்கப்படும் ARMv8-A) ரக சில்லுகளை உற்பத்தி செய்தனர். AArch64 சில்லுகள் உருத்துலக்கி பலகைகள், திறன்பேசி, கைக்கணினி, திறன் தொலைக்காட்சி ஆகிய SoC சாதனங்களில் காணப்படும். இதன் திரிபுகள்: ARM Holdings' Cortex-A53, A57, A72, A73 மற்றும் Qualcomm's Kryo & Falkor.
HPPA கையேடு
HPPA என குறிப்பிடப்படும் PA-RISC கட்டமைப்பு Hewlett-Packard (HP) ஆல் உருவாக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு வரை அதன் நடுத்தர மற்றும் உயர் முனை சேவையக கணினிகளில் பயன்படுத்தப்பட்டது (அதன்பின் HP Intel இன் Itanium செயலாக்கிகளை பயன்படுத்த துவங்கிவிட்டன). இதன் திரிபுகள்: HP 9000 மற்றும் PA-8600.
IA64 கையேடு
IA64 என்னும் இந்த 64-பிட் கட்டமைப்பு Intel நிறுவனத்தால வடிவமைக்கப்பட்டு அதன் Itanium செயலாக்கி தொடரில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை கட்டமைப்பு x86 மற்றும் x86_64 (என அழைக்கப்படும் amd64) ஆகியவற்றோடு இணங்குவதில்லை. மேலும் இது நடுத்தர மற்றும் உயர் முனை சேவையகங்களில் காணப்படும். இதன் திரிபு: Intel Itanium.
MIPS கையேடு
இந்த கட்டமைப்பு MIPS Technologies ஆல் உருவாக்கப்பட்டது. இது MIPS I, MIPS III, MIPS32, MIPS64 மற்றும் பல துணை குடும்பங்களை கொண்டுள்ளது (இவற்றை revisions என்கிறார்கள்). இவை பொதுவாக உட்பதித்த முறைமைகளில் காணப்படும். இதன் திரிபுகள்: MIPS32 1074K மற்றும் R16000.
PPC கையேடு
PPC பெரும்பாலும் Apple, IBM மற்றும் Motorola போன்ற நிறுவனங்களின் செயலாக்கிகள் பயன்படுத்தும் ஒரு 32-பிட் கட்டமைப்பாகும். இவை பொதுவாக உட்பதித்த முறைமைகளில் காணப்படும். இதன் திரிபுகள்: Apple OldWorld, Apple NewWorld, generi Pegasos, Efika, பழைய IBM iSeries மற்றும் pSeries.
PPC64 கையேடு
PPC64 என்பது PPC கட்டமைப்பின் 64-பிட் திரிபாகும். இது உட்பதித்த அத்துடன் உயர் முனை செயல்திறன் கொண்ட சேவையகங்களில் பிரபலமானவையாகும். இதன் திரிபுகள்: IBM RS/6000s, IBM pSeries மற்றும் IBM iSeries.
RISC-V கையேடு
RISC-V என்பது 32-பிட், 64-பிட் மற்றும் 128-பிட் கட்டமைப்புகளில் திறந்த அறிவுறுத்தல் தொகுதிகளை கொண்ட வரவிருக்கும் கட்டமைப்பாகும். தற்போது இதன் 64-பிட் திரிபு சென்டூவால் ஆதரிக்கப்படுகிறது.
  • தற்போது RISC-V ற்கான கையேடு என்று எதுவும் இல்லை. RISC-V ற்கான சென்டூவின் ஆதரவை பற்றிய மேலும் தகவல்களுக்கு RISC-V செயல்திட்ட பக்கத்தை காணவும்.
SPARC கையேடு
SPARC கட்டமைப்பு பெரும்பாலானோரால் அதன் உற்பத்தியாளர்களான Sun Microsystems (இப்போது Oracle) மற்றும் Fujitsu ஐ கொண்டு சிறப்பாக அறியப்பட்டது. இது சேவையகங்களில் பயன்படுத்தப்பட்டாலும் சில பணிநிலைய கணினிகளிலும் புழக்கத்தில் இருந்தது. சென்டூ SPARC64 இணக்கமுள்ள CPU க்களை மட்டுமே ஆதரிக்கிறது. இதன் திரிபுகள்: E3000, Blade 1000 மற்றும் Ultra 2.
X86 கையேடு
X86 என்னும் இந்த 32-பிட் கட்டமைப்பு பலரால் "Intel க்கு இணக்கமானது" என கூறப்பட்டது. இந்த கட்டமைப்பு சமீபத்திய காலத்திற்கு முன்பு வரை பணித்தள கணினிகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. சென்டூ i486 (எல்லா குடும்பங்களும்) மற்றும் i686 (Pentium அல்லது அதற்கு மேல்) ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதன் திரிவுகள்: i486, i686, AMD Athlon, Intel Core, மற்றும் சில Intel அணுக்கள்.

அடிக்கடி கேட்கும் கேள்விகள்

கையேட்டை ஒவ்வொரு நிறுவல் தேர்வுக்கு ஏற்றவாறு மாறும் வகையில் உருவாக்க முடியாதா?

கையேடு பராமரிப்பாளர்கள் சென்டூவின் முன்னிருப்பு init முறைமை (OpenRC) மற்றும் அடிப்படை பகிர்வு திட்டங்களை கொண்டு ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் தனித்தனியாக கையெடை எழுதுவோம் என் முடிவு செய்தனர். கையெட்டின் முக்கிய நோக்கம் அடிப்படையான சென்டூ முறைமையை நிறுவி இயங்க செய்வதே தவிர சாத்தியமான எல்லா நிறுவல் வழிகளையும் உள்ளடக்குவதல்ல (ஒழுங்கற்ற பகிர்வு, init முறைமை, கருநிரல் உள்ளமைவு, முறைமை மேலாண்மை கருவிகள் முதலியன).

மேம்பட்ட பகிர்வு, மரபியல்பில்லாத கர்னல் உள்ளமைவு மற்றும் ஒன்றுவிட்ட init முறைமைகள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைக்கும் கட்டுரைகள் விக்கியின் பொதுவாக மாற்றியமைக்கவல்ல பெயரவெளியில் இருக்கும் (குறிப்பு: விக்கி கணக்கு உள்ளவர்கள் இதை திருத்தலாம்!).

நாங்கள் எங்கள் வாசகர்களை புதிய பகுதியையோ அல்லது சேர்க்கைகளையோ கோருவதற்கு முன் விக்கியில் தேடி ஏற்கனவே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய கேட்டுக்கொள்கிறோம். கையேட்டில் ஒரு புதிய பொதுவியல்பான பகுதி தேவை என நீங்கள் கருதினால் கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு கோரிக்கையை முன்மொழியவும்.

நிலை1 ற்கான தகவல் எதுவும் கையேட்டில் இல்லை. எங்கு தேட வேண்டும்?

நிலை1 மற்றும் நிலை2 tarball களை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றிய விவரம் சென்டூ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்னும் இடத்தில் கிடைக்கும். ஆயினும் நிலை3 நிறுவல் மட்டுமே ஆதரிக்கப்பட்ட நிறுவல் முறை.

எவ்வாறு இந்த கையேட்டை நான் மேம்படுத்துவது?

பரிந்துரைகள், கருத்துக்கள் அல்லது இந்த கையேட்டை எப்படி இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம் போன்ற சிந்தனைகள் ஆகியவற்றை அதற்குறிய கட்டுரையில் உள்ள கலந்துரையாடல் பக்கத்தின் மூலம் கையேடு செயற்றிட்டத்தற்கு தெரிவிக்கலாம். இந்த ஆவணப்படுத்தல் முயற்சி குமுகத்தற்காக செய்யப்பட்டது ஆகையால் குமுகத்தினரின் பின்ஊட்டல் நன்கு வரவேற்கப்படுகிறது.

குறிப்பு
இரண்டு மூன்று செயலிலுள்ள கையேடு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால், தயவுசெய்து அவர்கள் புதிய {{Talk}} பதிவிற்கு பதிலளிக்கும் வரை சற்று அமைதியாக காத்திருக்கவும். கையேட்டை மேம்படுத்தும் பரிந்துரைகளை எவ்வாறு அளிப்பது என்பதை கீழே காணவும்

ஆவணப்படுத்தலை உருவாக்கும்போது எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை என்பதை அறிந்துகொள்ளவும். ஒவ்வொரு வாசகரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஆவணத்தை எழுதுவதோ வடிவமைக்கவோ இயலாது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

கையேட்டை முன்னேற்றும் நோக்கத்தோடு கலந்துரையாடலைத் துவக்குபவர்கள் இல்லை என்னும் பதிலை ஏற்கும் மனப்பக்குவத்தோடு இருக்க வேண்டும். பொதுவாக தற்போதுள்ள நடைமுறையே பெரும்பாலான வாசகர்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது எனக் கருதும்போது மட்டுமே இவ்வகையான இல்லை என்னும் பதில் எங்களிடமிருந்து வரும்.

திறந்த குறைகளை முறையாக கண்காணிக்க நாங்கள் உங்களை {{Talk}} என்னும் வார்ப்புருவை ஒவ்வொரு குறையின் கலந்துரையாடலின் போதும் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பின்வரும் எடுத்துக்காட்டில் உள்ளது போல இருந்தால் போதுமானது:

குறிமுறை Example open discussion
{{Talk|open|date=March 28, 2017}}
 
கையேடு குழுவிற்கு எனது வணக்கம்,

நான் கையேட்டின் FOO பகுதி BAR வகையில் மேம்படுத்தலாம் என ஆக்கபூர்வமாக கருதுகிறேன். அந்த மாற்றத்தை தரவல்ல குறி/உரை இதோ:
 
(மாற்றத்தை தரவல்ல குறி/உரையை இங்கு சேர்க்கவும்.)
 
எனது கருத்துக்களை கேட்டமைக்கு நன்றி. --~~~~

எடுத்துக்காட்டின் இறுதியில் உள்ள --~~~~ என்னும் குறியீடு பக்கத்தைச் சேமித்த பிறகு அல்லது முன்காட்சிக்குப் பிறகு தேதியிட்ட கையொப்பத்தை இடும். இதைக் கைமுறையாகத் தட்டச்சு செய்யலாம் அல்லது திருத்தல் கருவிப்பெட்டியில் உள்ள Signature and timestamp என்னும் பொத்தானைத் தட்டியும் சேர்க்கலாம். ஒவ்வொரு கருத்தைக் கலந்துரையாடல் பக்கங்களில் பதிவிடும்போதும் இதைச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Changelog

An effort to provide a loosely Symantec versioned changelog for the handbooks effort can be found at Handbook:Main Page/Changelog.