Translations:Handbook:Parts/7/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
சென்டூ லினக்சு நிறுவல் பற்றி
இந்த பகுதி கையேட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிறுவல் அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.
சரியான நிறுவல் ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
சென்டூவை பல வகையில் நிறுவலாம். இந்த பகுதி சென்டூவை சிறும நிறுவல் குறுந்தகட்டைப் பயன்படுத்தி நிறுவுவது என்பதை விவரிக்கிறது.
வலையமைப்பை உள்ளமைத்தல்
சமீபத்திய மூல நிரல் குறியீட்டைப் பதிவிறக்குவதற்காக வலையமைப்பை உள்ளமைக்க வேண்டும்.
தகடுகளை ஆயத்தப்படுத்துதல்
சென்டூவை நிறுவுவதற்கு முன் தேவையான பகிர்வுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பகுதி தகடுகளை எவ்வாறு பகிர்வு செய்வது என்பதை விளக்குகிறது.
சென்டூ நிறுவல் கோப்புகளை நிறுவுதல்
அடிப்படை சென்டூ முறைமை ஒரு நிலை3 காப்பக கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். இந்த பகுதி எப்படி இந்த கோப்பை பதிவிறக்கிப் பிரித்தெடுப்பது மற்றும் எவ்வாறு சென்டூவின் தொகுப்பு மேலாண்மை நிரலான Portage ஐ உள்ளமைப்பது போன்றவற்றை எடுத்துரைக்கிறது.
சென்டூ அடிப்படை முறைமையை நிறுவுதல்
நிலை3 ஐ நிறுவி உள்ளமைத்த பின்னர் சிறும சூழல் கிடைப்பதற்காக அடிப்படை முறைமை அமைக்கப்படுகிறது.
லினக்சு கருநிரல் உள்ளமைத்தல்
லினக்சு கருநிரல் ஒவ்வொரு பகுத்தளிப்புகளுக்கும் கருவாகும். இந்த பகுதி கருநிரல் எவ்வாறு உள்ளமைப்பது என்பதை விளக்குகிறது.
முறைமையை உள்ளமைத்தல்
சில முக்கியமான உள்ளமைவுக் கோப்புகளை உருவாக்க வேண்டும். இந்த பகுதி இவ்வகையான கோப்புகளைப் பற்றிய கண்ணோட்டத்தையும் எவ்வாறு சிறப்பாக உள்ளமைப்பது என்பதைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
முறைமை கருவிகளை நிறுவுதல்
இப்பகுதியில் சில முக்கியமான கருவிகள் தேர்ந்தெடுத்து நிறுவப்படுகிறது.
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
இப்பகுதியில் சரியான துவக்க ஏற்றி நிறுவப்பட்டு உள்ளமைக்கப்படுகிறது.
நிறுவலை முடித்தல்
நிறுவல் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. இறுதிகட்டப் பணிகள் இதில் கூறப்பட்டுள்ளது.